Lalita Sahasranama – Hidden Nector (Prelude)
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மறைபொருள் அமிர்தம் (1) ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் – லலிதா என்பது விளையாடுபவள் எனப் பொருள்தருகிறது. ‘லீலா’, ‘லலிதம்’ எனும் சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு விளையாட்டு என்று பொருள். ‘ சஹஸ்ர நாமம்’ என்றால் ஆயிரம் பெயர்கள் எனப்பொருள். அப்படியானால் லலிதா சஹஸ்ரநாமம் என்பதன் மூலம் விளையாடுபவளின் ஆயிரம் பெயர்களைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். எது விளையாட்டு? யார் விளையாடுவது? எதற்கு ஆயிரம் பெயர்கள்? ஏன் இந்த லலிதா சஹஸ்ரநாமம் எனும் மந்திரங்கள் ரஹசியமானதாயும், அதிசயமானதாயும், அம்பிகையாக இறைவனை வழிபாடு செய்வதற்கு ஆதாரமான பாடல்களாகவும் கருதப்படுகின்றன? இங்கே விளையாட்டு என்பது இறைவனின் படைத்தும் வளர்த்தும், அழித்தும்,