Sivapuranam by Manickavasagar (44-48)
44. நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே நின்னருளால், இறை உணர்வாகிய பேற்றினைப் பெற்றதால், நல்ல மணமுடன் (நாற்றத்தின்) புலனறிவு இருக்கவும் (நேரியாய்), தொலைவிலும் (சேயாய்), அருகிலுமாய் இருப்பனே (நணியானே), 45. மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே மாற்றங்களால் பாதிப்படுகின்ற எல்லாவற்றையும், மனதினையும் கடந்து (மாற்றம் மனம் கழிய), மறைபொருளாக நிலைத்திருக்கும் இறைவனே (நின்ற மறையோனே). இரண்டு முக்கியமான சம்ஸ்கிருதச் சொற்கள் – ‘ஸம்ஸ்காரம்’, ‘ஸம்ஸாரம்’ என்பன. நாம் ஆசையினால் செய்கின்ற எல்லாச் செயலும், அதன் விளைவினால் நம்மைப் பாதிக்கும். அது சுகமாகவும் இருக்கலாம். துக்கமாகவும் இருக்கலாம். அவற்றால் விளியும் பாதிப்புக்கள் உடனேயோ, அல்லது வேறொரு காலத்திலோ, வேறொரு