Sivapuranam by Manickavasagar (06-07)
06. வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க அலை பாய்கின்ற எண்ணங்களின் சிக்கலை (வேகம்) முடித்து (கெடுத்து) நம்மை ஆட்கொள்கின்ற தலைவனுடைய (ஆண்ட வேந்தன்) திருவடிகளைப் பணிவோம் (அடி வெல்க). ‘வேகம்’ எனும் சம்ஸ்கிருத மூலச் சொல்லுக்குத் தமிழில் ‘விரைவு’, ‘குழப்பம்’, ‘விளைவு’, ‘சிக்கல்’ என்றெல்லாம் பொருள் உண்டு. நம்முடைய மனமே, ஒன்று விட்டு ஒன்றில் ஓடிக் கொண்டிருப்பதும், குழப்புவதும், வினைப் பயனை விளைப்பதும், பிறவிச் சிக்கலில் பிணைப்பதும் ஆகிய எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. எனவே மனதின் வேகத்தைக் கெடுப்பதனால், அதாவது, மனதின் அலைக்கழிப்பை நிறுத்தி, எண்ணங்களைச் சீரமைப்பதினால், நமக்கு விடுதலை கிடைக்கிறது. ‘சித்த சுத்தி, த்ருட புத்தி’ அதாவது