07-What-Is-The-Answer?
Is life a tale that we script for ourselves or a plan that we are trapped into?
A revealing conversation with Aiya….
Is life a tale that we script for ourselves or a plan that we are trapped into?
A revealing conversation with Aiya….
துன்முகி – தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2016 துன்முகியாய் புன்னகைப்பூ முன்னுதிர வருடும் துள்ளிவருங் காலமகற் கள்ளிவரும் வருடம்! எண்முடியாக் காலமதை எண்ணிடவா முடியும்! எதுபடியும்? அறுபதரும் பொருளதுவாய் விடியும்! ஓடுவதால் காலமகள் ஓர்நதியோ என்றால் உருவாகும் மலைமுடியும் கடலுந்தான் எங்கே! ஓர்திக்கால் போகுமொரு கூரம்போ என்றால் உருவியதை ஏவிடுவான் ஒருவனுந்தான் எங்கே! காலமொரு கண்ணாடி போலதுவே என்றால் கனிமுகமும் பிள்ளையிள முதுமையென மாற்றி கோலமெனச் சூழுலகச் சீலமதைக் காட்டும் கோடறிவான் வேடந்தரு நாடகத்தான் எங்கே! கோர்த்திழுக்கும் ஊழ்க்கயிறு போலதுவே என்றால் கொடுமுடிச்சை இழுத்தமிழக் கொடுத்தவரும் யாரே! ஈர்த்திழுக்கும் போதெல்லாம் இங்கிருக்குங் காலம் இலாமலெதிர் பார்த்திளைக்க இருத்தியரும் யாரே!