Shiva Mahimina Stotram – 01
|| பாடல் 1 || மஹிம்ன: பாரம் தே பரமவிது₃ஷோ யத்₃யஸத்₃ருஶீ ஸ்துதிர்ப்₃ரஹ்மாதீ₃னம் அபி தத₃வஸன்னாஸ்த்வயி கி₃ர: | அதா₂(அ)வாச்ய: ஸர்வ: ஸ்வமதிபரிணாமாவதி₄ க்₃ருணன் மமாப்யேஷ ஸ்தோத்ரே ஹர நிரபவாத₃: பரிகர: || 1 || பொருள்: ஒருவேளை (யத்₃) நினது (தே) பெருமையின் (மஹிம்ன:) அளவினை (பாரம்) முழுமையாக (பரம்) அறியாதவருடைய (அவிது₃ஷோ) துதி (ஸ்துதி) குறையானதாகி விடலாம் (அஸத்₃ருஶீ). அப்படியானால் (தத்₃) நின்பால் (த்வயி) பிரம்மா (ப்₃ரஹ்மா), முதலானோர் (ஆதீ₃னாம்) செய்த துதிகளும் (கி₃ர: அபி) முழுமையானவை ஆக முடியாது (அவஸன்னா:)! ஆயினும் (அத₂), தமது (ஸ்வ) அறிவின் (மதி) வளர்ச்சியை (பரிணாம) ஒட்டியே (அவதி)