Matru Shodasy – Ammavukku 16
அம்மாவுக்குப் பதினாறு (அமரத்துவம் அடைந்த அன்னைக்குப் பதினாறு பிண்டங்கள்) – (மாத்ரு ஷோடஸி ஸ்லோகம்) கருவிலென் பளுவது வீங்கிக் கால்தடு மாறிடத் தாங்கி அருநடை மேடுகள் பள்ளம் ஆவன யாவையும் தாண்டி பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன் படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (1) ஒருவொரு மாதமு மாக உதரமுட் பாரமு மாக கருவொரு காலமு மாக கனமுமுத் தாரமு மாக பெருமுனைப் பட்டனை அம்மா! பேரிடர் இட்டவன் எந்தன் படுவினை விடுமுயர்ப் பிண்டம் பாரிது தேனுயிர் அம்மா (2) கருவினில் இட்டாய்! எந்தன் காலுதை பட்டாய் பட்டும் முறுவலில் விட்டாய்! உந்தன்