SOLITARY REAPER

SOLITARY REAPER


Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound.
No Nightingale did ever chaunt
More welcome notes to weary bands
Of travellers in some shady haunt,
Among Arabian sands:
A voice so thrilling ne'er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas
Among the farthest Hebrides.

Will no one tell me what she sings?--
Perhaps the plaintive numbers flow
For old, unhappy, far-off things,
And battles long ago:
Or is it some more humble lay,
Familiar matter of to-day?
Some natural sorrow, loss, or pain,
That has been, and may be again?

Whate'er the theme, the Maiden sang
As if her song could have no ending;
I saw her singing at her work,
And o'er the sickle bending;--
I listened, motionless and still;
And, as I mounted up the hill,
The music in my heart I bore,
Long after it was heard no more.

தனியே கனியறுக்கும் கன்னி

தன்னந்தனியே இவள் இங்கே வயலில்,
தனியாக உயர்மலையின் வயல்புலத்தின்அழகில்,
கனியறுத்துக் கன்னியிவள் தனியிடத்தில் பாடுகிறாள்.
நின்று விடு! இல்லையெனில் நிதானநடை பழகு!
கன்னியிவள் ஒன்றியிங்கே, பயிரறுத்து, பயறிணைத்து
இன்னமுதம் பாடுகின்றாள், ஏதோஓர் சோகத்தில்!
ஓ! கவனி, உயர்மலையின் இடைவெளியின் உயிரோட்டமாக
ஓசையிது வழிந்துருகி ஓடுவது தெரியும்.

எந்தவொரு நைட்டிங்கேல் அன்புருகிப்பாடும்!
இப்படியோர் நல்லிசையால் இனிப்பூட்டி யாரும்
களைப்பான பயணத்தார் இளைப்பாரச் செய்யும்!
கடைப்பட்ட அரபுமணல் குடிலாக மாறும்!
சிலிர்ப்படையச் செய்கின்ற குரலிதுவோ அரிது,
சீர்மிகுந்த குயில்வசந்தம் பாடுதல்போல் புதிது,
கடல்போர்த்த மெªனத்தைக் கலைக்கின்ற அழகு
காட்சியிலே தொலைதூர ஹேப்ரைடஸில் வரவு!

அறிவேனோ, இவள்சோகம் யாரெனக்குச் சொல்வார்?
ஒருவேளை, பொதுவாகும் ஓட்டமெனக் கொள்வார்,
முற்காலத் துயரோ? தொலைதூரப் பொருளோ?
முடிந்திட்ட யுத்தத்தின் முடியாத இருளோ?
எளிதான இடரோ எல்லோர்க்கும் புரிகின்ற
இயல்பான வலியோ இன்றையத் துயரடியோ?
இயற்கைதரும் இடரோ, இழப்போ, வலியோ
இடிபட்ட தாலோ, இனிவரும் நாளோ?

எக்காரணமோ, எதுவோ மங்கை
நிற்காப் பாடல் நிகழ்த்திய பங்கை
வேலைக் கிடையே விருத்திடக் கேட்டேன்!
நூலைப் பிடித்த நுண்ணிய வளைவில்
கால்கள் மரிக்கக் களித்துக் கேட்டேன்!
மேல்வர மலையில் மலைத்துக் கேட்டேன்!
ஈர்க்கும் இன்னிசை இதயம் துளைக்கும்
கேட்கா தூரம் காலம் நிலைக்கும்!

Related Posts

Share this Post