||15 hamsopanisat ||

This upanishad reveals the secrets of ‘so ham’

haàsäkhyopaniñatproktanädäliryatra viçramet |
tadädhäraà nirädhäraà brahmamätramahaà mahaù ||
om pürëamada iti çäntiù ||

gautama uväca |
bhagavansarvadharmajïa sarvaçästraviçärada |
brahmavidyäprabodho hi kenopäyena jäyate || 1||

கௌதமர் உரைத்தது

தருமம் எல்லாம் தகைவோனே
தக்கது சாஸ்திரப் பிரயோகி
பிரம்ம வித்தை அறியுமுறை
பிறழா உணரும் பெருஞான
மருமம் மறையா துணர்கின்ற
மார்க்கம் உரைக்க வேண்டுகிறோம் (1)

sanatkumära uväca |

vicärya sarvavedeñu mataà jïätvä pinäkinaù |
pärvatyä kathitaà tattvaà çåëu gautama tanmama || 2||

ஸநத்குமாரர் உரைத்தது

எல்லா நெறிமுறை அறிவாலே
ஏகன் நாகா பரணசிவன்
வல்லான் உள்ளத் துணர்வாலே
வகையாய்ப் பார்வதி வடிவத்துச்
சொல்லாச் சொல்லைச் சொல்கின்றேன்
சோதித் ததனைக் கேட்பாயே (2)

anäkhyeyamidaà guhyaà yoginäà koçasannibham |
haàsasyäkåtivistäraà bhuktimuktiphalapradam || 3||
இதுபரம ரஹசியம் எனஉணர்வ தவசியம்
தக்காரே கொள்வர் தகாரிடம் என்றும்
சிக்கா ரஹசியம் சித்தர் பொக்கிஷம்
மிக்காய் ஹம்ஸத்து மெஞ்ஞான சம்பத்து
இக்காலங் கனிய எழுஞானப் பெரும்பேறு (3)
atha haàsaparamahaàsanirëayaà vyäkhyäsyämaù |
brahmacäriëe çäntäya däntäya gurubhaktäya |
haàsahaàseti sadä dhyäyan || 4 ||
பேரறிவு காணும்நெறி பிரம்மச் சரியவழி
பூணுகின்ற மாணாக்கர் புலனடக்கிக் குருவணக்கம்
பேணுகின்ற தவத்தாலே பெரற்கரிய ஹம்ஸநெறி
காணுகின்ற வியாக்யானம் ஹம்ஸ ஹம்ஸஎனும்
மந்திரத் தியானவழி மனதினால் நிர்ணயிக்கும்
தந்திரம் தருவனெனத் தவசீலன் அறிவித்தார் (4)
sarveñu deheñu vyäpya vartate ||
yathä hyagniù käñöheñu tileñu tailamiva taà viditvä måtyumatyeti || 5 ||
எரித்தீ மரத்தில் மறைவதாய்
எண்ணை எள்ளில் உறைவதாய்
புறத்தே விளைத்த உடலெலாம்
புனிதப் பிரம்மம் பிணைத்ததை
திறத்தால் அனைத்தும் நிறைத்ததை
தெளிவாய் அறிவால் உணர்பவன்
மரித்தால் மரிக்கா விடுதலை
மார்க்கம் அடைந்து நிலைக்கிறான் (5)
gudamavañöabhyädhärädväyumutthäpyasvädhiñöhäà triù
pradikçiëékåtya maëipürakaà ca gatvä anähatamatikramya
çiñöobhayapärçve bhavataù |

viçuddhau präëännirudhyäjïämanudhyäyanbrahmarandhraà dhyäyan
trimätro’hamityevaà sarvadä paçyatyanägäraçca çiñöobhayapärçve bhavataù || 6||

இருப்பாய் சித்தா சனத்தே
இடக்கால் மணிக்கட் டாலே
பொறுப்பாய் குதவாய் மூடி
புனைவாய் பிராண அபான
நெருப்பாய் நிறைவா யுடனே
நிழலாய் குண்டலி தன்னைத்
திறப்பாய் ஸுஷூம் னையின்
திகழ்வா யிலைக் கடந்து
மூலா தார மடைந்து
மும்முறை ஸ்வாதிஷ் டானஞ்
சூழ்வாய் சுற்றி முயன்று
சுடர்மணி பூரகங் கடந்து
ஆள்வாய் அநாதஹ மென்னும்
அற்புதச் சக்கர மடைந்து
மீள்வாய் மேவிய தியான
மிகைவால் மெய்ப்புல வாசல்
விசுக்திச் சக்கர மடியில்
விளங்கிடும் உள்நாக் குள்ளே
இருப்பது இடைவெளி ஈறு
இவைதனை விட்டு நடுவே
பொருத்திய லிங்க வடிவே
பூத்திடும் நாடியின் வழியே
விசுக்திச் சக்கர மடைந்து
விரைத்துச் சித்தப் பிராணன்
அடக்கி அதனால் மேலே
ஆக்ஞாச் சக்கர மேறி
நடத்தி ஹம்ஸா மந்திர
நயத்தால் பிரம்ம ரந்திர
ஸஹஸ்ரா சக்கர மேறி
ஸர்வா பரண மூலம்
அகார உகார மகார
அரும் பிரணவ ஓசை
மும்மாத் திரையின் வடிவு
முற்றிலும் நானெனு முணர்வு
சமாதி எனுமுயர் சாட்சி
சாதித் திருக்கும் காட்சி
மெய்யினில் இல்லா மெய்யை
மேதினி யாதினி மையை
துய்ய முணர்ந்தருள் சீலம்
துய்த்தருள் ஞானியின் கோலம் (6)
bähü kälaçcägniçcobhe pärçve bhavataù | dhyäyan |
eño’sau paramahaàso bhänukoöipratékäçaù | yenedaà vyäptam || 7 ||
அவ்வாறே தெரியும் ஆள்நிலத் துரீயம்
பெவ்வான் இவனே பெரும் பரம்ஹம்ஸன்
கோடிக் கதிரவன் கொட்டும் பிரகாசம்
சூடித் திகழும் சூத்திர தாரி
எவனால் புவனம் பரவும் நிலவும்
அவனாய் இவனே ஆவான் உறுதி (7)
tasyäñöadhä våttirbhavati |
pürvadale puëye matiù ägneye
nidrälasyädayo bhavanti yämye krüre matiù nairåte päpe
manéñä väruëyäà kréòä väyavye gamanädau buddhiù saumye
ratiprétiù éçäne dravyädänaà madhye vairägyaà kesare
jägradavasthä karëikäyäà svapnaà liìge suñuptiù padmatyäge
turéyaà yadä haàso näde léno bhavati tadä turyätétam || 8 ||
பரந்தது அநாஹத சக்ரம்
பன்னிரு இதழ்க ளாலே
விரிந்ததா மரையைப் போலே
விளங்கிடும் இதய ஸ்தானம்
மனமதில் நிலைத்த போது
மண்ணுள விவஹா ரத்தில்
இணைவது என்ப தாகும்
எட்டிதழ் தொட்ட தாகும்

கிழக்கு இதழின் தேக்கம்
கிடைக்கும் புண்ணிய நோக்கம்
பழக்கம் துயிலும் சோர்வு
பார்க்கும் தென்கிழக் காகும்
தெற்கில் கொடுமை ஏற்கும்
தென்மேற்கோ பாவம் சேர்க்கும்
மேற்கில் விளையாடல் தேடும்
மெய்நடை வடமேற் காகும்
வடக்கில் வசப்பட் டாலோ
வல்லவர்க் காத்ம சாந்தம்
தொடப்படத் துடிக்கும் காமம்
துய்ப்பது மெலியர்க் காகும்
கமலத்தின் நடுவில் நோக்கில்
கர்மத்தில் தருமப் போக்கில்
நியமத்தில் நிலைக்கும் திண்ணம்
நிர்ணய மாகும் வண்ணம்
கேஸரத்தில் மனம் நின்றால்
கண்விழித்த வெளி உணர்வு
கர்ணிகையில் உறுதி யெனில்
கனவுநிலை மனதின் அலை
இதன்நடுத் துவா ரத்து
இலிங்கத்தில் குறி இருப்பின்
இதம்மறந் துறக் கத்தில்
இருக் கின்ற ஸுஷூப்தினிலை
இதயம் எனும் கமலத்தை
ஈர்த்து எழுந்து விட்டால்
உதயம் துரீய மெனும்
உச்சநிலை நிச்ச யமாய்
அப்போதே ஹம்ஸ மாகி
ஆதார நாத மாகி
முப்போதும் இலாப் பிரம்ம
மூலத்தில் கரை ஜீவன்
துரீயங் கடந்து விடும்
துரீயா தீதம் பெறும் (8)

atho nädamädhärädbrahmarandhraparyantaà çuddhasphaöikasaìkäçaà
sa vai brahma paramätmetyucyate || 9||
மூலா தாரம் முதலே முடிவாலே பிரம்ம ரந்திரம்
நூலா யான ரூபம் நுண்ணிய துரீய தீபம்
பாலாய் பனிமென் கல்லாய் பளிச்சிடும் ஞானப் பிரம்மம்
மேலா தான தாகும் மெய்ப்பர மாத்ம னாகும் (9)
atha haàsa åñiù | avyaktä gäyatré chandaù | paramahaàso
devatä | ahamiti béjam | sa iti çaktiù |
so’hamiti kélakam ||10 ||
ஹம்என் றிழுக்கும் மூச்சும் ஸஎன் றிளைத்த மூச்சும்
நம்பியா நடக்கும் அந்த நாயகன் அமைத்த யோகம்
தவறா தியங்கு மிந்தத் தவமே வாழ்க்கை ஆகும்
அஜபா ஹம்ஸம் என்னும் ஆழ்பொருள் வேதம் ஆகும் (10)
அஸ்யஸ்ரீ அஜபா ஹம்ஸமந்த்ரஸ்ய
ஹம்ஸருஷி: அவ்யக்தகாயத்ரீச்சந்த:
பரமஹம்ஸோ தேவதா|
ஹம் பீஜம் ஸ:சக்தி: ஸோஹம் கீலகம்||
ñaö saìkhyayä
ahorätrayorekaviàçatisahasräëi ñaö çatänyadhikäni
bhavanti |
süryäya somäya niraïjanäya niräbhäsäya tanu sükçmaà
pracodayäditi || 11 ||
agnéñomäbhyäà vauñaö
hådayädyaìganyäsakaranyäsau bhavataù || 12 ||
கணபதி பிரம்மன் விஷ்ணு கடுந்தவ ருத்திரன் ஜீவன்
இணைவது பரமாத் மாவெனும் இவர்களே அறுவகைச் சக்தி
துணையினால் தினசரி முறையாய்த் துய்த்திடும் ஹம்ஸ யோகம்
கணக்கிலே இருபத் தோரா யிரத்தறு நூறு ஆகும் (11/12)
evaà kåtvä hådaye
añöadale haàsätmänaà dhyäyet || 13 ||
இப்படிச் செய்து இருதயம் எய்து
நற்திற ஹம்ஸ நயத்தகு தெய்வம்
அற்புத மான ஆன்மனத் தியானம்
செப்புறச் செய்து சேர்வது ஞானம் (13)
agnéñomau pakçävoìkäraù çiro bindustu netraà mukhaà rudro rudräëé
caraëau ……. unmananamajapopasaàhäramityabhidhéyate || 14 ||
அன்ன வடிவத்தில் ஹம்ஸத் தவயோகம்
கன்னல் கதிரவனும் காந்தக் குளிர்மதியும்
வண்ணச் சிறகழகு வடிவம் ஓங்காரம்
சென்னி முக்கண்ணோ சேர்க்கும் முப்பிந்து
அன்னல் உருத்திரனார் அலகு வாய்பேறு
பாதம் உருத்திராணி பலவாய் யூகித்து
ஓதச் சற்குணமாய் உணர்ந்து உட்கழுத்து
நாத மெளனத்தால் நயக்கும் நற்கருத்து
அஜபோ ஸம்ஹாரமென அற்புதமாய்ச் சொல்லியது
நிஜமே நிச்சயமே நித்தியச் சத்தியமே (14)
evaà sarvaà haàsavaçättasmänmano haàso vicäryate || 15 ||
இவ்வாறே ஹம்ஸமெனும் இயல்பான யோகத்தால்
எவ்வாறு மனதும்மதி ஏற்படுத்தும் காரியத்தை
இல்லை ஈதில்லை எனக்கழித்து எனக்கழித்து
எல்லை மிஞ்சுவதே ஏகாந்த ஒன்றுநிலை
ஆத்மா எனஅறியும் ஆராய்ச்சி வேதாந்தம்
அதுவே மெஞ்ஞானம் அளிக்கின்ற நற்பாடம் (15)
(
ஹம்ஸ காயத்ரீ
ஹம்ஸஹம்ஸாய வித்மஹே பரம ஹம்ஸாய தீமஹி|
தந்நோ ஹம்ஸ: ப்ரசோதயாத் ||)
sa eva japakoöyä
nädamanubhavati evaà sarvaà haàsavaçännädo daçavidho jäyate |
ciëéti prathamaù | ciïciëéti dvitéyaù |
ghaëöänädaståtéyaù | çaìkhanädaçcaturthaù |
païcamatantrénädaù | ñañöhastälanädaù | saptamo veëunädaù |
añöamo mådaìganädaù | navamo bherénädaù | daçamo meghanädaù || 16 ||
அஜபா ஹம்ஸ மந்திரத்தை
அறிவால் உணர்ந்து கோடிமுறை
நிஜமாய் ஜபித்த புண்ணியனே
நிறைவாய் அநாஹ நாதமெனும்
பத்து விதப்பய னாகுமொலி
பரவப் பெருகும் பேரின்பம்
மெத்த அறிவான் முதன்முதலே
மெலியத் தெரியும் ஒலியிசையே

முதலில் தெரிவது சிணியோசை
முயலப் புரிவது சிண்சிணியே
மூன்றில் கேட்பது மணியோசை
முழங்கும் சங்கு நான்காகும்
வீணா கானம் விடைஐந்து
விரியும் தாளம் வருமாறு
வேணு கானம் எனஏழு
விளங்கும் பேரீ தருமெட்டு
ஒன்பதில் மிரு தங்கமுகில்
ஓசை முழக்கம் எனப்பத்து (16)

navamaà parityajya daçamameväbhyaset || 17 ||
முதல்வரும் ஒன்பது ஒலியோசை முற்றிலும் விட்டு அதன்பின்னே
பத்தாய் வருவதைப் பற்றுவது பயிற்சிக்கு அவசியம் பாடநெறி (17)
prathame ciïciëégätraà dvitéye gätrabhaïjanam | tåtéye
khedanaà yäti caturthe kampate çiraù || 18 ||
முதன்முதலில் சிண்சிணியின் ஒலிவடிவம் தோன்றும்
முற்றுமது மறையும்பின் மூன்றாவ தாக
இதயத்தில் எழும்கீற்று ஈராகப் பிளந்து
இயலாமல் தலைநடுக்கம் ஏற்படுத்தும் நாலில் (18)
païcame sravate tälu ñañöhe’måtaniñevaëam | saptame
güòhavijïänaà parä väcä tathäñöame ||19 ||
ஐந்தில்வரும் தாடைவழி சிந்துமுமிழ் நீரே
ஆறாகச் சிரவமுது சீராகப் பாய்ந்து
கூரான நாடிக்குள் குவியும் கிளரின்பம்
ஏகாந்த ஞானம் ஏழாவது ஆகும்
எட்டாத பரவாக்கு என்பதரு உருவம்
பட்டாகத் தெரியும் பதிலங்கே புரியும் (19)
adåçyaà navame dehaà divyaà cakçustathämalam | daçame
paramaà brahma bhavedbrahmätmasannidhau ||20 ||
ஒன்பதாம் நிலையில் உடல் ஒலியும் ஒளியும் ஒழியும்
என்பதாம் அந்தர்த் தானம் ஏற்பதால் எல்லாம் அறியும்
பத்தாம் நிலையே பதவி பரப் பிரம்ம ஸ்வரூபனாகி
சத்தாம் சத்தியா னந்த சாகரம் கலந்து மீள்வான் (20)
tasminmano viléyate manasi saìkalpavikalpe dagdhe puëyapäpe
sadäçivaù çaktyätmä sarvaträvasthitaù svayaïjyotiù çuddho
buddho nityo niraïjanaù çäntaù prakäçata iti ||
iti vedapravacanaà vedapravacanam || 21||
om pürëamada iti çäntiù ||
iti haàsopaniñatsamäptä ||
ஆகையால் ஆன்ம ஜீவன் ஆசையும் மனமும் விட்டு
வாகையாய் வரவும் செலவும் வைத்திடும் வினைகள் விட்டு
எப்போதும் எல்லாப் பொருளுள் ஏகித்த சிவனாய்ச் சுடராய்ப்
முப்போதும் கடந்த ஞான முனைப்பனாய்ப் பரிசுத் தனாய்
நித்யனாய் நிர்மல நிலையால் நீடித்த பேரறி வுடையான்
உத்தம சாந்தி ஸ்வ்ரூபம் உடையவன் ஆவான் என்றே
செப்பிய செம்மறை வேதச் செம்மையை சீரிய வித்து
ஒப்புயர் வில்லா உண்மை ஓதிய நல்லுப நிஷத்து (21)

Related Posts

Share this Post