Daily nectar of word meaning Day 01

நாள்தோறும் சொற்பொருள் அமிர்தம்

 

 

A01
‘Veda’ means ‘knowledge’ as it comes from the root ‘vid’ or ‘to know’.  It is also known as ‘nigama’ or ‘certainty’ so Veda is knowledge about truth or that which is certain. The term ‘gama’ means ‘going’ or a ‘path’.  So Veda also means ‘the right path’ or ‘the right movement’.The term ‘Vedanta’literally means the end of Veda; but it is not just the last portion of the text but ‘the essence of Veda’.  Vedanta also means ‘the end of knowledge’ or ‘beyond all knowledge’.  If the purpose of Veda is to give the right and certain knowledge, why there is a need to end the knowledge and seek beyond the knowledge?   What is beyond all knowledge? This knowledge should also be provided by Veda, is it not?  Sure it does.  

Veda is also known by the term ‘Agama’ which means ‘coming back’.  So Veda also refers to ‘returning’ or ‘the home-coming’.   But to where? It is coming back to the ‘knower’ or ‘the Self’, the intelligent principle within each of us. One who knows is termed as  ‘Vettru’.  So Veda takes us to the Vettru.   Thus the terms  ‘Veda’ and ‘Vedanta’, by their very name provides the truth and as the goal of all knowledge.    What is the process of knowing?

(to be continued – Mee. Rajagopalan – 10/05/2017)

 

 

A01
‘வேதா’ என்பதற்கு ‘அறிவு’ என்பது பொருள். அது ‘வித்’ அல்லது ‘அறிவதற்கு’ எனும் வேர்ச்சொல்லில் உருவானது.  வேதங்களுக்கு ‘நிகமம்’ அல்லது ‘உறுதியான உண்மை’ எனவும் பெயடுண்டு. அதற்கு உண்மை அறிவினை அளிப்பதே காரணம். வடமொழியில் ‘கம’ எனும் சொல்லுக்கு ‘போகுதல்’ அல்ல்து ‘பாதை’ எனவும் பொருள்.  எனவே வேதம் சரியான பாதை என்பதாகவோ, சரியான பயணம் என்பதாகவோ பொருள் கொள்ளத் தக்கது.  

‘வேதாந்தம்’ வேதத்தின் முடிவு எனும் சொற்பொருள் தரும். ஆனால் அது வேதநூலின் கடைசிப் பகுதி என்பதாக மட்டும் பொருள் கொள்ளாமல், வேதத்தின் கருப்பொருள் அல்லது சாரம் எனவும் பொருள் கொள்ள வேண்டும். வேதாந்தம் என்பதற்கு ‘அறிவின் முடிவு’ என்பதும் ‘அறிவிற்கு அப்பாற்பட்டது’ என்பதும் பொருளாகச் சொல்லலாம். வேதமே அறிவிற்காக என்றால், அறிவின் முடிவு என்பதும் அறிவிற்கு அப்பாற்பட்டது என்பதும் எதற்காக? அப்படி அறிவிற்க்கு அப்பாற்பட்டது என்ன? அப்படியான ஒன்றின் அறிவையும் வேதமே கொடுக்க வேண்டும் அல்லவா? ஆம், அதைத்தான் வேதங்கள் தருகின்றன.

வேதம் ‘ஆகமம்’ எனும் சொல்லினாலும் குறிக்கப்படும். அதன் பொருள் ‘திரும்பி வருதல்’.  அப்படியானால், வேதம் நாம் எங்கோ செல்வதை விட்டுத் திரும்பி வருவதை, அதாவது நம்மிடமே நாம் வருவதைக் குறிக்கின்றது. அபப்டியானால், அறிவிற்கு அப்பாற்பட்டு இருக்கும் பொருள், நம்முள்ளேயே இருக்கிறது என்றாகிறது.

அறிவினை அடைந்தவன ‘வேத்ரு’ என அழைப்பார்கள்.  அதனால், வேதம் வேத்ருவிடம் நம்மை அழைத்துச் செல்கிறது. அதாவது, அறிபவன் யார் என அறியவைக்கின்றது. எனவே ‘வேதம்’, ‘வேதாந்தம்’ எனும் இவ்விரண்டு சொற்களுமே, உண்மை அறிவு என்பதையும் அதனை அடைவதே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும் எனவும் காட்டுகின்றன. அவ்வுண்மையை அறியும் வழிகள் என்ன?

(தொடரும் – மீ. ராஜகோபாலன் , 10/05/2017)

 Next Dose

 
Share this Post