Guru-Sishya-Discourse-03

Guru Sishya – Day3

சீடனின் கவலை – குருவின் கருணை (3)

Experience is the Teacher

Guru:

In the day-to-day existence, we analyze our way,
Through the layers of life, as experiences sway.
Unraveling the roots, we seek to discern,
The wisdom of trials, the lessons to learn.

From echoes of past, let knowledge take flight,
Guiding our steps in every day and night.
For without such prudence, we’re lost in the fray,
Entangled in desires that lead us astray.

If we fail to apply the insights from pain
Life becomes but a tale, a tragic refrain,
So embrace every moment, with eyes open wide,
And weave your own tale, with wisdom as guide.

Sishya:

Experience is a great teacher we have got
As the lessons of the past could guide us a lot!
Your words of wisdom does steer my thought!
Thank you, Sir, this is coming from my heart!

Yet there is something which you have said
Makes me wonder, as it seems so weird!
Are desires wrong? Is that what you say?
There is none with our desires, may I gently say?

Are Desires Wrong?

Guru:

Nothing wrong in the desires coming!
As natural instincts, those are humming!
Let those rise and fall as they will!
While you act with your freewill!

Desires drive the deeds that we do!
Discerning knowledge must guide as we do!
When Righteousness is the means of action
Deeds and desires turn towards perfection!

Sishya:

I was worried, for desires I can’t sweep
Now I am relieved as desires I may keep
But I must reshape them for goodness!
How do I do that! Oh The Highness!

Guru:

May desires arise, but let blemish be cleansed,

Sishya:

How do we know that our hearts not fenced?

Guru:

When thoughts whisper loudly, their essence laid bare,
Tune into the signals, your heart’s earnest care!

Company of Good is the Best

Sishya:

When thought is impure, there is a call from within,
A voice so deep does speak to my sin!

Yet how to clear off the blemishes,
Veiling the mind’s eye?

Guru:

Share with the Learned,
Let their wisdom supply!

Sishya:

But what if the inner voice is unheard and far?
If it is feeble, like raindrops, and leaves no scar?

Guru:

In the company of those whose hearts shine with light,
Impure thoughts find less space and are out of sight
Even those who are not hearing the call of their soul
Certainly benefit from such Satsangh as the whole!

Sishya:

Many impart many advice, all free of charge!
Yet their wisdom does not remain in charge!

Shraddha, unwavering commitment

Guru:

Examine your heart: Are you steadfast in trust?
Without that Shradda, knowledge gathers dust!

Sishya:

Is Shraddha just blind faith, a following so meek?
A weakness of knowledge, a deficiency to speak?

Guru:

Nay, steadfast trust is a commitment so strong,
To pursue the truth, even when it feels wrong.

So seek out the good, with an open heart’s plea,
Embrace the wise words, let your spirit be free.
In the road of learning, we must stay the course,
Even as our experiences counter knowledge’s force!
If we stay on and humbly follow
New revelations will fill up the hallow!

Sishya:

Does it mean, in at least some part,
Shraddha is like following without thought?

Guru:

Not at all!
A student who’s bold asks the questions that rise,
To clarify what all told as it opens the skies!

Sishya:

Oh! Thanks, we ask in reverence
For the heart is seeking to learn!
By which the answers of relevance!
Doubts and Misconceptions burn!

Guru:

Yes!
For questioning minds, aligned with the goal,
The process of learning enriches the soul.

So let us cleanse the mind, and together we strive,
In the pursuit of the knowledge that helps us to thrive!

With steadfast trust and inquiry hand in hand,
Learn to purify the mind, from where we stand!

(To be continued….)

Mee. Ra

(3)

அனுபவம் நமக்கு ஆசான்

குரு:

சுற்றுச் சூழலை சுகந்துயர் எனநமைப்
பற்றும் யாதையும்  பகுத்தறி வதனால்
முற்றும் அளந்து மூலக் காரணம்
கற்றும், அதன்பின் கற்றதன் பயனைச்

சற்றும் விடாமல் சரிசெய் தினிமேல்
தொற்றும் அனுபவத் தொடரிற் சீர்மை
உற்றும் வாழ்வது உயர்வவ் வறிவை
அற்றுல கத்தில் ஆசையில் சிக்கி
இற்றும் இருத்தல் இறத்தல் அதாமே!

சீடன்:

அறிவாய்ந் ததனால்  அடையும் நலனைச்
செறிவாய் தொகுத்துச் சீருரல் எனவும்
பரிவாய் உரைத்தீர்!  பாங்குட னேயினி
புரிவேன்! எனினும் புரியா தொன்று!

ஆசைக ளாலே அவலம் அதனால்
ஆசையி லாமல் ஆவீர் என்றால்
ஆசைகள் அற்றார் யாரே உள்ளார்?
ஆசைகள் இல்லார் அவனியில் இல்லார்!

ஆசையில் தானே அறப்பயன் விரும்பி
ஆசையிற் கடமைகள் ஆயிரம் செய்வோம்!
பூசையும் விளையும் புண்ணியந் தேடி
ஆசையிற் செய்யும் அறச்செயல் தானே!

குரு:

நிச்சய மாக! நிறைவினை வேண்டி
இச்சைகள் வருதல் இயற்கையின் நியதி!
அச்சமும் ஏனோ! அவரவர் ஆசை
மிச்சம் இலாமல் மீளுதல் கருதி

கருமம் செய்திடக்  கருமப் பயனுறத்
தருமம் நெய்திடும் தடத்திற் பதிவுறச்
சாத்திரம் நமக்குச் சரியறி விடுமே!
பாத்திரப் படிநாம் பணிசெயல் அறமே!

சீடன்:

நல்லது! பணிவேன்! நானோ ஆசையைக்
கொல்லவுந் துணியேன்!  குருவே! பயந்தேன்!
மெல்லயென் ஆசை மேன்மையை நோக்கிச்
செல்லவும் முனைவேன்! சேதனம் தருவீர்!

குரு:

ஆசைகள் வரட்டும்! ஆனால் அவற்றில்
மாசிருந் தாலவை மாற்றப் படட்டும்!
பூசிய புழுதிப் புகையினை விரட்டித்
தூசும் அகற்றித் துலக்கப் படட்டும்!

சீடன்:

எப்படி ஆசையில் எவ்வித மாசு
கப்பிய தென்று கணக்கிட முடியும்?

குரு:

தப்பெனில் பொதுவாய்த் தமக்குள் ளேயே
ஒப்புதல் கொடுக்கா ஓசை ஒலிக்கும்!

சீடன்:

ஆமாம்  ஐயா! ஆழ்மனத் துள்ளே
ஏமாற் றுவதாய் ஏதொரு தவறாய்த்
தாமாற் றிடுஞ்செயல் தனிலொரு கலக்கம்
சாமா னியரும் சந்திப் பாரே!

அப்படி மனதுள் ஆசையில் நெருடல்
கப்பிடின் அதனைக் கழுவுதல் எளிதோ?

குரு:

செப்புக அதனைச் சீலர்கள் இடத்தில்!
அப்புறம் அறவழி அவர்தரல் இயல்பே!

சீடன்:

ஆனால் மனதில்  அப்படி நெருடல்
காணா்க் கேது கைத்தல உதவி?

நல்லறிவாளர் வழிகாட்டட்டும்

குரு:

தானாய் உகந்து தருமம் அறிந்து
வானாய் உயர்ந்த வல்லார் இனிந்து

“செய்வது அதர்மம்!  செயலறு! கருமம்
உய்வதற் குரிய உயர்வழி தர்மம்!
கையுற இதையிதை இப்படிச் செய்” என
மெய்யுணர் வார்தரும் மேலறி வதுவே!

சத்சங் கத்தில் சங்கம மானால்
உத்தமர் உறவு உதவிடக் கூடும்!
புத்தியில் தெளிவைப் புகட்டுவ ராக
அத்தகை யோர்கள் அறிவுரை கூடும்!

சீடன்:

அறிவுரை கூற ஆயிரம் பேர்கள்
பரிவுடன் வந்தெனைத் தெரிந்தவ ராக
விரிவுரை தருவார் விளக்கமுந் தருவார்!
சரிவர எனுளேன் தெளிவினும் இல்லை?

சிரத்தை என்பது சீரிய ஓழுக்கம்

குரு:

உனக்குள் சிரத்தை உளதா என்று
தனக்குள் எண்ணிப் பார்ப்பது நன்று!
கணக்கில் சிரத்தை முக்கியப் பங்கு!
சுணக்கம் இருப்பின் சுடரறி வெங்கு?

சீடன்:

சிரத்தா என்பது  சிந்திக் காமல்
முற்றா அறிவால் மூடர் மொழியால்
கற்றார் நம்பிக் கையாய்க் காட்டும்
பற்றாக் குறைதான்! பலவீ னந்தான்!

குரு:

முற்றிலும் தவறு! மூடநம் பிக்கைகள்
அற்றது சிரத்தா! அதுபெரு முயற்சி!

கற்றதின் கருத்தை உற்றஅனு பவத்தில்
முற்றிலும் விளக்கிட முடியாப் போதும்
கற்றதில் உண்மை காண்கிற ஞானம்
பெற்றிட விழையும் பேறுடைத் திண்ணம்!

மாமறை வாக்கிலும் மாண்புடைப் பெரியோர்
நாமொழி நோக்கிலும் நடைமுறைப் போக்கிலும்
மேவிடும் உறுதி மெய்யினைக் கருதிச்
சேதனந் திருத்தல் சிரத்தை என்பாரே!

சீடன்:

ஆதலி னாலே சிரத்தை என்பது
தீதறு ஞானந் தெளிவுறும் வரையில்
போதனை எதுவும் புரியாப் போதும்
சாதனை யாகச் சார்ந்த நம்பிக்கை!

இதுசரி தானே? எனக்கிது சொல்வீர்!

குரு:

அதுசரி!  நம்பிக் கையெனச் சொன்னால்
எதுபுரி யாதோ அதுதெளி வாகும்
புதுவறி வாலே பொலிவுரு வாகும்
அதுவரை குருமொழி எதுவது எனினும்

அக்கறை யுடனதை ஆழ்மனம் நிரப்பித்
திக்கறல் விட்டுடன் திசைசரி யாக்கி
எக்கண முஞ்செவி ஏற்றிடும் உரையை
முக்கிய மெனமனம் முனைவுறத் துலக்கி

இதன்பொருள் என்ன அதன்குணம் என்ன
பதவுரை விளக்கமுட் பதிவதும் என்ன
உதவிடு வீரெனக்  கோரா யிரங்கேள்வி
நிதமருள் பதிலுரை நீர்தரு வீரெனக்

கேள்விகள் பணிவிற் கேட்டுத் தெளிவுற
வேள்விகள் செய்வதை தானிச் சிரத்தா!

சீடன்:

ஆஹா! நன்றி! அடுக்கடுக் காகப்
போகா ஐயப் புகையடுப் பாகத்
தகவலை அறியத் தத்துவந் தெளிய
அகமிகு ஐயச் சுமையவை கழியக்

கேள்வியைச் சிரத்தை கேட்கிற தென்றீர்!
வேள்வியைச் சிரத்தை விளைத்திடு மென்றீர்!
நாள்தரும் எனக்கிது நல்லொரு விருந்து!
ஆள்மனம் அடக்கும் அருள்தரு மருந்து!

குரு:

மகிழ்ச்சியே ! கற்றீர்!  மறையுரை பெற்றீர்!
இகழ்ச்சியே தற்றீர்!  இணைமனம் உற்றீர்!
முயற்சியால் பெற்றோர் முதிர்ச்சியிற் சற்றே
அயர்ச்சியா னாலும் அதிலுரம் கொள்வீர்!

நாமினித் தொடர்ந்து நம்மனத் தூய்மை
யாமெனத் திளைந்து அன்பினிற் கனிந்து
சாதனத் துயர்ந்து சாத்தியம் அடைந்து
நூதனப் பெருஞ்சகம் நூற்பதை ஆய்வோம்!

(தொடரும்)

மீ. ரா

 Previous Dose

 Next Dose

Related Posts

Share this Post