Guru-Sishya-Discourse-04

Guru Sishya – Day4

சீடனின் கவலை – குருவின் கருணை (4)

(4)

The Nature of a Pure Mind

Guru:

A pure mind is undisturbed, a tranquil, clear space,
Endowing freedom of thought, as thoughts freely trace
Like lucid waters flowing, untainted and bright,
Flawless and unclouded, in truth’s gentle light!

Sishya:

Yet why does the mind so often vacillate?

Guru:

It’s because it’s neglected, Unkempt in its state.

When balance is lost, and purity fades,
The world that we see, can cause grief and cascades.

A troublesome mountain of burdens we bear,
As blemishes wrap us, filling the air.
Two reasons unveil this cycle of strife:
One, how we perceive through the lens of our life.

The second, the darkness of ignorance deep,
Rooted in actions – both sins and the reap
Of virtues we’ve sown, shaping our fate,
Creating the shadows that cause us to wait.

So tend to your mind, let its purity thrive,
For in clarity’s essence, true freedom will arrive!
With awareness and care, let your thoughts be aligned,
And uncover the peace of a truly pure mind.

The Power of Perception

How you perceive the world shapes all that you feel,
It colors your thoughts, makes your experiences deal.
Each perception you hold alters the lens you see,
Creating a ripple in your thoughts, wild and free.

The world you engage with reflects back to you,
If seen through clear vision, your heart will stay true.
But should judgments cloud sight, chaos may ensue,
Transforming the good into shadows askew.

To see the world as it is, without bias or stain,
Is to embrace its essence, through both joy and pain.
Keep your outlook open, let your heart gently guide,
For a mind that’s uncolored will find peace inside.

The Quest for Clarity

Shishya:
I’ve grasped that blemish, the mind’s muddy veil,
The perception’s feed from the senses we trail.
To understand clearly, I must guide them with care,
Directing my senses, letting wisdom prepare.

For sense-control is vital, a key to refine,
The purification of mind, where true insights shine.
Though I’m unsure how to tame these desires,
I know it’s one cause of the mind’s inner fires.

But what is the other, that clouds the pure sight?
What veils the true vision and dims the mind’s light?
I seek to uncover, to learn and to grow,
To free myself fully from the shadows below.

The Nature of Vāsanā

Guru:

The other cause lies in ‘Vāsanā,’ so deep,
Imprints of desires, in the shadows they creep.
Haunting echoes of Karma, from deeds of the past,
Each lingering fragrance, in our hearts held fast.

Sishya:

Is not Vāsanā meaning ‘fragrance’?

Guru:

“Vāsanā” speaks of fragrance, both sweet and unkind,
“Vāsam” is shelter, place where thoughts intertwine!
As a scent in the air, it shapes our life’s space,
Spreading vibes of both good and bad that we face.

In this residence subtle, deep behind the mind,
The seeds of past actions in thought-waves unwind.
They fertilize desires, and their echoes persist,
Crafting the journey of our life, many a shift!

Understanding Vāsanā

Sishya:

How can I discern the ‘Vāsanā’ I bear,
The imprints within me, both subtle and rare?
If I know their nature, I can choose what is right,
Embracing the good, while casting away spite.

Guru:

Vāsanās are non-negotiable, fixed in their course,
Scripted to manifest, like a river’s strong force.
Emerging at times when their lessons are due,
Reminders of past deeds, in their essence so true.

So rather than negate them, you must learn to cope,
Finding strength in their shadows, a pathway of hope.
They shape your existence, both burdens and grace,
To trigger more Karmas, the actions in this place!

The Essence of Karma

Sishya:

What is Karma, may I ask, deciding our fate?

Guru:

It’s action and choice, the paths that we create.

Sishya:

Is Karma-Phala, the fruit, of each deed that we sow?

Guru:

Yes, bringing forth blessings or burdens we know.

Sishya:

Some Karmas are thorny, like briars in a field,
Causing pain and distress, their wounds never healed.
Yet others bring welfare, like a soft, gentle breeze,
Fostering peace and joy, setting our hearts at ease.

How could I choose which Vāsanā to ripe?
How could I discard others, I like to wipe?

How can past deeds from births long gone be known,
When I struggle to recall even what I have just shown?
Who holds the power to record every act,
And ensure that each soul gets its outcomes intact?

(To be continued….)

Mee. Ra

(4)

தூய மனதின் இயல்பு

குரு:

சுத்தம் அடைந்த சுதந்திர மான
சித்தமு டன்மனஞ் சீரழ கானது

தெள்ளிய நீரெனத் தெளிந்து இருப்பது!
கள்ளமுங் கசடும் கலவா திருப்பது!
புள்ளிக ளேதும்  புகையிடும் குழப்ப
முள்ளென ஏதும் முளைக்கா திருப்பது!

சீடன்:

அப்புறம் ஏன்மனம் அங்கும் இங்கும்
எப்பவும் எதையோ எண்ணிம யங்கும்?

புலனறிவின் சக்தி

குரு:

ஒப்புறும் மனதில் உலகமும் செயலும்
கப்பிடும் துயரம்! கலவரம் நிகழும்!
அப்பிடும் அழுக்கு! அதற்கிரு காரணம்!
இப்புவிப் பார்வை! இருவினைப் போர்வை!

இருவழி தனில்மனம் எழும்பிடும்  மாற்றும்!
ஒருவகை அதுவெளி உலகினைப் பார்க்கும்
உனதுளப் பார்வையில் உருவெடுத் தாற்றும்
மனமத னாலடைந் திடுந்தடு மாற்றம்!

ஒருஅலை மனதினுள்  மறுஅலை யாகும்!
பெருஅலைப் பிரளயமும் மனதிலுண் டாகும்!
இருள்வில கிடமன மிருந்தலை ஒடுங்க
வருவழி யதுவுன் பார்வையென் பதனால்

உலகைப் பார்க்குமுன் பார்வையி லேதான்
நலனைச் சேர்க்கிற நன்மைவுண் டாகும்!
கலனை மொழிமனக் கரணத் துடனுன்
புலனை அதனாற் பொறையுறச் செய்க!

தெளிவடைய ஏக்கம்

சீடன்:

ஒருவழி வெளியுல கங்களைக் காணும்
இருவிழி முதலாம் புலனென யானும்
மாசென மனதில் மயக்கமுண் டாக்கிப்
பூசிடும் அவலப் புழுதியை அறிந்தேன்!

எனவே புலனை எடுத்தாண் டிடவும்
தினவோ டதனிற் றெளிவூ டிடவும்
மனமா தலினால் மகிழ்வா கிடுமத்
தனமா கியதைப் பெறவே கினனே!

மற்றொரு வழியில் மனதினுள் மாசு
பற்றிட வருமப் பரிதா பத்தை
அற்றிட வும்நல் லறிவளிப் பீரே!
எற்றிசை எதனால் எழும்மன மயக்கம்?

குரு:

மற்றொரு வழியுன் மனதினுட் சித்தம்
பெற்றமுன் பிறவிப் பெருவினை வித்தில்
உற்றவுன் வினைகள்! உருபயன் வேரில்
பற்றி முளைத்த படர்வினை வாசம்!

வினைகளின் வாசனை

சீடன்:

வாசம் என்றால் வாசனை தானே?

குரு:

வாசம் என்றால் வசித்தல்! இருத்தல்!
வாசனை எனப்படர்ந் திருந்து மணத்தல்!
நல்மண மாயுந்துர் நாற்றமு மாகிப்
பல்வினைப் பயனாய் படர்ந்து கிடத்தல்!

சீடன்:

எவ்வகை வாசனை எந்தனுக் குள்ளே
கவ்விய தாமதன் கணக்கெடுப் பேனோ!
ஒவ்விய தெடுத்து ஒவ்வா தழித்துச்
செவ்வித நறுமணஞ் சேர்த்துருப் பேனோ!

குரு:

பூசற் கல்ல போனமுன்  பிறப்பபின்
வாசனை! அவைகள் வரிசையில் வந்து
யோசிப் பதற்குள் ஒன்றுடன் பலவாய்
காசினி யில்நமைக் கட்டியி ழுக்கும்!

வாசனை நறுமண வனப்பென ஆகப்
பூசனை அறநெறிப் புகலடைந் தாராய்
வீசிடும் புதுமண விளக்குகந் தாராய்
தேசுற மறைபுகல் தெளிவுறு வீரே!

கர்ம வினைகளின் கருத்து

சீடன்:

வினைகள் யாவை? வினைப்பயன் யாவை?
முனையில் ஏனவை முள்ளெனக் குத்தும்?
எவையதில் நன்மை? எவற்றால் துன்பம்?
அவைகளைத் தவிர்க்கும் அறிவும் என்ன?

எப்படி முன்வினை எனதென எவரால்
ஒப்பிட எழுதிய  உலகியற் கணக்கு!
நேற்றைய செயலே இன்று மறக்கின்
நாற்றென முன்வினை நடத்தல் பிணக்கு!

புரிந்திட வில்லை! புத்தியின் எல்லை
விரிந்திட வில்லை! விளங்கவும் இல்லை!
அறிந்திடச் சொல்வீர்! ஐயச் சிராய்கள்
உறிந்திடச் செய்வீர்! உண்மை யதானே!

(தொடரும்)

மீ. ரா

 Previous Dose

 Next Dose

Related Posts

Share this Post