Shivanandalahari – Verse 77
77 – நாயகியாய் மனமேற்ற நாதன் அடி போற்றி!
सक्ता वधूर्विरहिणीव सदा स्मरन्ती |
सद्भावनास्मरणदर्शनकीर्तनादि
संमोहितेव शिवमन्त्रजपेन विन्ते ||७७ ||
ஸக்தா வதூ₄ர்விரஹிணீவ ஸதா₃ ஸ்மரந்தீ |
ஸத்₃பா₄வனாஸ்மரணத₃ர்ஸ₂னகீர்தனாதி₃
ஸம்மோஹிதேவ ஸி₂வமந்த்ரஜபேன விந்தே || 77 ||
மங்குதிட மானமனம் – அகலாமல்
தங்கணவ ரானசுக மெங்குபிரி வாலுழல
சங்கமுற வாகநிதம் – சலியாதே
தங்கவன மாமருக அங்கமய மாயுருக
எங்குமவ ரானபுகழ் – எனவோதி
சங்கரசி வாமனனம் தங்கமதி யாலறுகும்
நங்கையவ ளாகமனம் – நலிவேனே
(77)
பரமேஸ்வரனின் திருவடித் தாமரைகளில் அறிவானது உறுதியுடன் எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என்று, (தன்னுடைய அன்புக்குரிய கணவனது) பிரிவினால் தவித்து, எப்போதும் (அவருடன் இணைய) நினைத்துக்கொண்டு, அதிலேயே (தனது கவனத்தை எல்லாம் வைத்து) கற்பித்து, (உடல் உருகித் தன்னுள்ளேயே) அவரைக் கண்டு, அவரது புகழையே பாடி, பரசிவனது திருநாமங்களை ஓதி, தந்நிலை மயங்கிக் கிடக்கும் மங்கையைப் போல, (எனது) மனம் தவித்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பு:
76-ம் பாடலில் மனதில் இறையடியை இருத்துவதன் பலனைக் கூறிய பகவான் ஆதி சங்கரர், அவ்வாறு நிலையாக இறைவனது திருவடிகளை நிறைக்க விழையும் மனதினை, கணவனது பிரிவாற்றாமையால் உழலும் சுகவேதனைக்கு ஒப்புமையாகக் காட்டி இருக்கிறார்.
எப்பொருளுடன் இணைய வேண்டுமோ, அப்பொருளையே எப்பொழுதும் சிந்திப்பதும், அது கிடைத்து விட்டாற் போல் கனவு காண்பதும், அதனைப் பற்றியே பேசிக் கொண்டும், அதன் புகழ் பாடிக் கொண்டும் இருப்பதும், இறைவனை நன்றியால் துதித்துக் கொண்டு இருப்பதும், எதிர்பார்ப்பவரின் இயல்பு அல்லவா? அதிலும், அன்புக்குரிய கணவனைப் பிரிந்த மனைவியின் எதிர்பார்ப்புக்கள் நிறைந்த கவலையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன! அதனையே பக்திக்கு ஒப்பிடுகிறார் பகவான் ஆதி சங்கரர். (77)