Arumukar Anthathi Tamil

ஆறுமுகர் அந்தாதி

பணிவுரை

எல்லாம் வல்ல இறையருளும், குருவருளும், பெற்றோரின் நல்வினைப்பயனும் காரணமாக என் சிறுமதி விளைத்த பெருநிதியாக ஸ்ரீ ஆறுமுகர் அந்தாதி எனும் இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன். லண்டன் ஸ்ரீமுருகன் கோவிலின் முதற்குரு, தவசி, ஸ்ரீலஸ்ரீ நாகநாத குருக்கள், ஓர் முறை என்னிடம் “அந்தாதி பாடுங்கள்” எனப்பணித்தார். அனுதினமும் சரவணனை, சக்தி உமையை, சதாசிவனை ஆராதித்துவருகின்ற பேரறிஞரான பெரியவர், என்னிடம் பணித்த செயல், நிச்சயமாக இறைவன் இட்ட கட்டளை என அறிவாலும், உணர்வாலும் மகிழ்ந்து, அன்னாருக்கு இதனால் யான் என்றும் நன்றிக் கடன்பட்டிருப்பதைப் பெரிதாய் நினைக்கிறேன்.

“ஆதி” எனத்தொடங்கி “ஆதி” என்று முடிகின்ற வகையிலே 60 அந்தாதிகளும், நூல் பணிவாக மூன்று பாடல்களும், நூல்பயனாக ஆறு பாடல்களுமாக 69 கவிதைகள் இதில் பிறந்திருக்கின்றன.

இக்கவிதைகளில் எனக்குக் கந்தன் அருள் மட்டுமே பெரிதெனத் தெரிவதனால், சிற்றறிவால் பற்றியுள்ள குற்றங்களின் உருவம் தெரியவில்லை. ஆகையால், எக்குற்றமும், என் கொற்றன் குமரனுக்கே சேரும் எனப்பணிகிறேன்.

இந்நூலுக்குக் கருணையினால் முகவுரை தந்து எனை ஆசீர்வதித்தோடல்லாமல், மொழிபெயர்ப்பில் பிழைதிருத்தி ஒளிஅமைத்துக் கொடுத்த மதிப்புக்குரிய பெரியவர், சேக்கிழார் அடிப்பொடி Dr. T.N. ராமச்சந்திரன் அவர்களுக்கு என்நன்றிகள் கோடி.

படிப்போருக்கு நற்பயன் கிடைக்கவும், இந்நூலை வீட்டில் வைத்திருப்போருக்கும் நலம் கிடைக்கவும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மீ. ராஜகோபாலன்

Share this Post

Leave a Comment