Arumukar Anthathi Tamil
ஆறுமுகர் அந்தாதி
Benediction
ஊழ்ப்பயந் தூள்ப்பட சூல்ப்பயங் காய்ப்புற
வேல்தய வால்துணை யால்புவி யாள்திருக்
கால்தட மாமிணைக் காண்பவ தாம்விதி (1)
இந்த நூலைப் பக்தியால் படிப்பதால் தவம் பெருகும். அதனால் வலிமை ஓங்கும். உலகில் வினைகளின் காரணமாக வரும் இன்னல் பயம் தூளாக அழியும். மீண்டும் பிறப்போமோ, பிறந்தால் சிறப்போமோ எனும் பிறவிப்பயம் ஒழியும். இவை எல்லாம், வேலனின் கருணையால், அவருடைய துணையால், புவியில் நல்வாழ்க்கையை ஆளுகின்ற தன்மை அடையவும் (அல்லது, உலகத்தை ஆளுகின்ற) முருகனின் இணயான இரு திருப்பாதங்களைக் காணக்கிடைப்பதாலே ஆகும். இப்பயனே நூலுக்கான சத்தியமான விதி.
1. A devoted cultivation of this opus will cause tapas to increase; divine strength will accrue; Karmic bondage will be shattered into smithereens; transmigration will end; the mercy of the Spear will abide; the weal of life will be gained. All these are ours as we are blessed to behold Muruganӳ salvific feet twain. This is the boon, this opus confers.
கதியாக்கும் கவிநோக்கம் கவிந்தேற்கக் கதியெல்லை
விதியாக்கை சரியாக்கை சரியாக்கத் துதியேற்கை
துதியோர்க்குத் துரிதறியத் துரீயமெனும் துணிவெல்லை (2)
அறிவால் மட்டுமே ஆய்வோருக்கு ஆழ்மனத்தில் உணர்ச்சியின் பயன் கிடைப்பதில்லை. உணர்ந்து அறிபவர்களுக்கோ பரஞான எல்லையே பயனாகக் கிடைக்கும். நற்கதியினை உருவாக்கும் இந்தக் கவிதைகளின் தத்துவ நோக்கத்தை, நன்றாக உணர்ந்து உள்ளம் ஏற்போருக்கு, பரமகதியான உனது இறைவடிவமான எல்லையே பயன். இவ்வுலகில் பிறந்த நமக்கான விதி, வாழ்க்கையை சரியாக நடத்திச் செல்லல். அவ்வாறு சரியாக நடத்த இந்தத் துதியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு துதிப்போருக்கு, விரைவில் எல்லாம் அறியும் அறிவும், “துரீயம்” எனும் எல்லாம் உணர்ந்த உணர்வு வரும். வருவதால், அந்த ஞானத் துணிவான எல்லை கிடைக்கும்.
2. Intellect confers not realization. Unto the God-conscious the gain is supernal Knowledge. This opus reveals the way to come by the sempiternal refuge. This life is given to us to tread the Godly way. This work will enable us to gain the glorious goal. The Beyond will be here and now and hereafter, thanks to the grace of Grace.
ஏதும் அறியார் என்னதுதி யோசிப்பார்
கல்லா துணர்வோரும் கற்றும் உணராரும்
சொல்லால் முருகாவெனச் சொன்னாலே யோகிப்பார் (3)
எல்லாம் அறிந்து உணர்ந்தவர்கள் ஒன்றும் அறியாதவராய் மெளனத்தால் சுகித்து இருப்பார்கள். ஒன்றும் (சரிவர) அறியாதவர்கள், “இது என்ன துதிப்பாடல், என்ன அவசியம் இதற்கு” என்று யோசிப்பார்கள். (ஆனால்) உணர்ந்தாலும் அறியமுடியாதவர்களும், கற்றாலும் உணரமுடியாதவர்களும், “முருகா” என்று (உளம் உருக, மனம் அறியச்) சொல்லால் சொல்லி அழைத்தாலே யோக சக்தி உடையவர்களாகி விடுகிறார்கள்.
3. They that know all do not speak at all; they are poised in Silence. They that know not may think thus: ԏf what avail is this Antaati of hymns?ԠWhoever they may be- the untaught ones of wisdom or the erudite sans knowledge-, if they chant the holy name of Muruga in devotion, they will get established in true Yoga.
கோர்த்த பரிசை குறிப்புள்ள புதிரையருள்
வார்த்த வரத்தை வாழ்வித்தை வளத்தையிறை
நூர்த்த கரத்தை நுணுக்கத்தை நுகர்வாரே (4)
சொற்களைச் செதுக்கி, வார்த்தைகளை வரிசையாக அமைத்திருக்கும் அழகல்ல உண்மைக் கவிதைகள். மனதில் உணர்ச்சியால், இறையருளால் வெகுமதியாக எழுந்த எண்ணங்களின் சீரான கோர்வையாக, குறிப்பாயும், அறியமுடியாத புதிரானதாகவும் இருக்கின்ற கடவுளை, அவரது அருளால் கிடைத்த வாக்காகிய வரத்தால் அமைத்து, வாழ்க்கைக்கு விதையாயும் வளர்க்கின்ற செழிப்பாயும் அவரை வருணித்துக் காட்டுவதே (கவிதை). அதனை எழுத வைத்த இறைவனது கைகளை, அதனால் விளைந்த அருள் அர்த்த நுணுக்கங்களை (உணர்ந்து படிப்போர்கள் மட்டுமே) உணருவார்கள்.
4. The beauty of poesy is not in well-arranged words; it is expressed in words which mirror God-induced thoughts; it is divined; it reveals Godhead wrapt in riddles; it is the outcome of grace which, in words, expresses the ineffable Seed of Life and Its uberty. It is they that can read Godӳ own calligraphy, that come by the subtle, mystic experience.
சிந்தா தொருகணமே சிவப்பழவே லனைத்தொடவே
கந்தா குருகுகனே கதிப்படவே களிப்புறவே
அந்தா தியிச்சுடரே அகப்படவே சுகப்படுமே (5)
(பிறவிஷயங்களில் கலக்க) அவசரப்படாதே மனமே! ஒன்றையே குறிப்பாக முனைகின்ற நோக்கத்தையும், அதனால் புற வேதனைகளை விடவும், ஒரு கணத்திலே, சிந்தையிலே, சிவனது ஞானப்பழமாகிய வேலனைத் தொடவும், “கந்தா, குருகுகனே” என்று அவரது கதியினை அடைந்து ஆனந்திக்கவும், (ஸ்ரீ ஆறுமுகர்) அந்தாதியாகிய ஞான ஒளி தரக்கூடிய இப்பாடல்களைப் பிடித்துக்கொண்டால் உண்மையான சுகம் கிடைக்கும்.
5. O mind-heart, hasten slowly; with single-pointed concentration, pursue THAT. Your worries will cease. In a flash, you will gain Muruga-consciousness, the fruit of Sivaӳ Gnosis.
சூழ்கவே சுகமே சுற்றச் சூழலே வளமே பொங்கி
ஆள்கவே அகமே சாந்தி அணையவே திருவே தங்கள்
வாழ்கவேல் வடிவே காந்தி வரிமயில் முருகா போற்றி (6)
வாழ்க எல்லாம்! வளம் பெருகட்டும். செல்வநிலை வரட்டும். இத்தகைய நன்மைகள் எல்லாம் என்றும் நம்மிடையே தங்கி இருக்கட்டும். நமது சுற்றுப்புறமும், சூழ்நிலையும் செழிப்பால், வளம் பொங்கி, எல்லாவற்றையும் (பொறுத்து) ஆள்கின்ற நல்ல நிலையில் இருக்கட்டும். அதனால், எல்லோர் மனதிலும் அமைதி இருக்கட்டும். அரு மறை வேதங்கள் (அவற்றை உணர்ந்து நடக்கும் உலகத்தினால்) வாழட்டும். ஞானமாகிய வேலின் வடிவமே, கவருகின்ற ஜோதியே, வரிகளை உடைய மயில் மேல் வரும் முருகா, போற்றி.
6. May all good things thrive! May uberty flourish! May well-being engird entia! May weal and welfare soar up and up. May inly peace prevail in all souls! May the Spear flourish! O Muruga whose mount is the Peacock, praise be!