Sri Ayyappan Verses
ஸ்ரீ ஐயப்பன் துதிப்பாடல்கள்
சபரீகிரிஸா பரதேவா
(கருட கமன தவ சரன கமலமிஹ – எனும் மெட்டு)
அபய மபரி மித
சபரி மலையி லமர்
அவரி னருள முதம் சத்யம்
அவரி னருள டிகள் நித்யம்
சப ரீகிரி ஸாபர தேவா
ஹர ஸ்ரீசுத நாதஸம் பூதா(2)
பரம பதம ருள
அதர வமுத முக
மதுர மிகமு றுவ லுற்ற
மதுர மிகமு றுவ லுற்ற –
சப ரீகிரி ஸாபர தேவா
ஹர ஸ்ரீசுத நாதஸம் பூதா
(3)
மரண பயம கல
ஜனன வயம கல
சரண கரண வுபஹாரி
சரண கரண வுபஹாரி
சப ரீகிரி ஸாபர தேவா
ஹர ஸ்ரீசுத நாதஸம் பூதா
(4)
தினமு முனது பத
மெனது மனது பர
முணரு வரமு மதிகாரி
முணரு வரமு மதிகாரி
சப ரீகிரி ஸாபர தேவா
ஹர ஸ்ரீசுத நாதஸம் பூதா
(5)
பத்தும் எட்ட பட
வித்தும் இட்டுப் பர
சித்தும் கிட்ட சிவ பாலா
சித்தும் கிட்ட சிவ பாலா
சப ரீகிரி ஸாபர தேவா
ஹர ஸ்ரீசுத நாதஸம் பூதா
(6)
சோக மோக மற
யோக போக வர
யோக ரூபசந் தானா
யோக ரூபசந் தானா
சப ரீகிரி ஸாபர தேவா
ஹர ஸ்ரீசுத நாதஸம் பூதா
க்ருபா ஹரசுதா
ராகம்: திலாங் – (ப்ரபோ கணபதி எனும் மெட்டு)
– சப ரீகிரி நாதசம் பூதா (க்ருபா)
ஹர சுதா ஹரிசுதா
ஆய்ந்து அறிந்துனது ஆலயம் அடைந்து
அன்பினில் அடிபணிந் தோமே!
காய்ந்து கருகும்மனக் காட்டினில் அருள்மழை
கனிந்திடச் செய்தருள் வாயே! (க்ருபா)
சேர்ந்து பணிந்துனது சேத்திர யாத்திரை
செய்திடும் வரமருள் வாயே!
ஜெயஜெய சரணம் சரணம் எனத்தினம்
சிந்தையில் ஜெபமருள் வாயே! (க்ருபா)
தத்துவ மஸிஎனும் தாரக மந்திர
உட்பொருள் தரும்உப காரா!
தாயெனக் கசிந்தருள் வாயெனத் தொழுதோம்
தயைபுரிந் திடவர வாதா! (க்ருபா)
நாரண நமசிவ நாதசுதா கர
நாயக மாமணி நீயே!
பூரண புஷ்கள காரண சத்குரு
பொற்பதம் தந்தருள் வாயே ! (க்ருபா)
அன்புநிலை கூட்டிடவா
ராகம் – சிந்துபைரவி
முன்னாலே நோர்த்திடவா
காலாலே நேர்த்திடவா
கைகூப்பிச் சேர்த்திடவா
எந்நாளும் நோக்கிடவா
இருமுடியைத் தூக்கிடவா
முன்னாலே காத்திடவா
முத்தமிடப் பூத்திடவா
மெஞ்ஞானம் ஊட்டிடவா
மேலாண்மை காட்டிடவா
அய்யாயென் ஹரோமணி
அன்புநிலை கூட்டிடவா
(இலண்டன் ஹாரோ) மாமணி ஐயப்பன்
ராகம்: காபி – (மெட்டு: ஜானகி ரமண தசரத நந்தன)
மாமணி பரம ஹரிஹர நந்தன
சபரிகிரீஷ கருணா – ஹரி
……ஹாரோ மாமணி
அனுபல்லவி
ஞான சத்குரு தயா நிதி…யே – நாதா
பர மாவுன் சீரடிகள் கண்டதாலே (மாமணி)
சரணம்
அடிய வரிடர் அழித் தாய் வரம்
அருளிட மாமணி ஆய்குரு வாய் வர
சபரி கிரீஸ்வர சாஸ்தா சுகவர
ஹரிசிவ தனயா கருணாலயனே (மாமணி)
ஏதுசெய்வ தேனோ
ராகம்: சிந்துபைரவி
ஏதுசெய்வ தேனோ அறிகிலேன் – இனி
எனதருட்கதி – ஹரோ மாமணி (ஏது)
அனுசரணம்
யாதும் உனது பாதம் எனயான்
தீ…தும்….அகலத் தெளிவனே
உனது பூ…முகத் திலே யான்
உருகி மகிழ்ந்து அழுவனே – இனி
தேவை எனக்கு யாவிலும் நின்
திரளும் அருளின் சுகமழை
தெரியும் சபரி கிரிதரா எதிர்
திகழும் ஹரோ மாமணி (ஏது)
வாராயோ
ராகம்:
வாராயோ – அருள் தாராயோ
வழிபடும் எனக்கொரு
வழித்துணை யாகநீ – (வாராயோ)
அனுபல்லவி
கதியென நினதடி
பதியுமென் னிடர்கெட (வாராயோ)
சரணம்
வானூர் சபரிமலை – வரதா குருமா மணி
வந்தெனைக் காக்கலா – காதா! வாதா?
தேனூ றமுதத் திரளே! பொழி மாமுகில்
தெளிந்தேன் நனைந்தருளைப்
பொழிந்தேன் என என்னிடம் (வாராயோ)
காவடிச் சிந்து
அடியர்மனக் கோவிலிலே வாழும் – அரி
அரசுதனைப் பரசுகனை
அருளுவனை உருகிமனம்
பாடும் – சுற்றி ஆடும்
முன்னிருந்து காத்தருளும் தெய்வம் – நம்
மூவினையும் நீத்தருளச் செய்யும் – இரு
கண்மலரத் தென்கயிலை
அண்ணலருப் பொன்னழகை
வாரும் – வந்து பாரும்
பம்பைநதி பூத்தமலர்ச் சிட்டு – நல்
பந்தளத்து ராஜமணி மொட்டு – தனை
நம்பியவர் துன்பமறுத்
தெம்பிலவர் இன்பமுறத்
தருவான் – சுகம் அருள்வான்
படிகள்பதி னெட்டில் மனமிட்டு – சிரம்
பணியவிரு முடியும் மணியிட்டு – வரம்
தருகவென இளகநலம்
பெருகமன முருகிநிதம்
பாடு – பதம் நாடு
தாயெனவே நீயுடனே வருக – எனைச்
சேயெனவே சேர்த்தணைத்து உருக – துணை
தந்தருள வந்துவிடு
சிந்தையினிற் பந்தலிடு
சாஸ்தா – தரும சாஸ்தா
சபரிமலை அத்தனருட் சித்தம் – எனச்
சரணமழை கோஷமினி நித்தம் – மனக்
கவலையறப் பயமகலத்
துயறமறப் புனிதநிலை
கிட்டும் – அருள் கொட்டும்!