Bhagvan Sri Ramana Maharishi Stuthi

பகவான் ரமண மஹரிஷி துதி

ஓம் குருப்யோ நம:

அருணா சலசிவ அருணா சலசிவ
அருணா சலமெனும் அருள் போற்றி!
கருணா லயசிவ வுருவா யருளிடும்
தருவே!  ரமணசத் குரு போற்றி!
தயவருள் ரமணர் அடி போற்றி!

திருச்சுழி யுதித்துத் திருவருள் பதித்துக்
கருத்திடும் மௌனக் கடல் போற்றி!
விருத்திக ளறுத்து விரிமனம் ஒறுத்த
விடிவே! ரமணசத் குரு போற்றி!
வேங்கட ரமணர் அடி போற்றி!

நமபயம்  அவியும் நலமருள் குவியும்
நிழலிடும்  அருட் சுடர்மதி போற்றி!
நிழலென அமுதம் நிரவிடும் மவுன
நிறைவே! ரமணசத் குரு போற்றி!
நிர்மல ரமணர் அடி போற்றி!

நானெனும் ஆணவந் தானனு காதுனைக்
காணெனக் கூறிய கலை போற்றி!
தீனத யாளா! திரள்மறை ஞானத்
தீர்வே!  ரமணசத் குரு போற்றி!
திருமிகு ரமணர் அடி போற்றி!

அண்ணா மலையடி அமர்ந்தாய் போற்றி
அருட்திரு நிலைவடி விருந்தாய் போற்றி
ஒண்ணா தமுதுரை உரைத்தாய் போற்றி!
உணர்வே! ரமணசத் குரு போற்றி!
உய்வருள் ரமணர் அடி போற்றி!
ஒப்பிலர் ரமணர் அடி போற்றி!

மீ. ரா
2 -2-2023

Share this Post

Leave a Comment