||11 பிரம்ம உபநிடதம் ||
சாந்தி பாடம்
tejasvi nävadhétamastu | mä vidviñävahai ||
om çäntiù çäntiù çäntiù ||
ஒருசேர நலமே ஓங்க, ஓதுணர் வேதம்தாங்க!
மருசேரா மாறாதெங்கள் மனதினில் துவேஷம்நீங்க!
திருசேரத் தெய்வம்பூதம் தெளிமனம் அமைதி ஓங்க!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி (0)
ஆசிரியரும் மாணவர்களும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, இறைவனைச் சேர்ந்து தொழுதபின்பே கல்விப்பணியைத் தொடர்வது இந்தியக் குருகுலப் பண்பாடு. குற்றமில்லாது கற்கவேண்டியவற்றைக் கற்கவும், கற்பதற்குத் துணையாக ஆசிரியரும் மாணவரும் உடலும், மனமும் நலமாய் இருக்கவும், மனதால்கூட இருவருக்குமிடையே எந்தவிதமான பயனற்ற விவாதங்கள் இல்லாமல் இருக்கவும், தொடங்கிய செயல் நன்றாக நடக்க, இறைசக்தியாலோ, சுற்றுப்புரத்தாலோ, தம்முடைய இயல்பாலோ மூன்றுவிதத்திலும் அமைதி நிலவ, இப்பிரார்த்தனையைச் செய்வதனால், நலம் தருகின்ற அமைதி! அமைதி! அமைதி!
divye brahmapure sampratiñöitä bhavanti kathaà såjanti kasyaiña mahimä babhüva yo hmañe mahimä babhüva ka eñaù || 1 ||
சொல்லறிய பிரம்மநெறி சோதித்தறி யறியவழி
பாடிப் பணிந்தகுரு பகவன் பிப்பாலடனார்
ஆங்கிரச வம்சவழி ஆசான் முன்பணிந்து
“ஐயா இவ்வுடலே துய்யும் இறைவீடு
மெய்யா? எவ்வாறு மேன்மை யாருக்கு?
யாரிந்த உடல்சமைத்து யாருந்தச் செய்கின்றார்?
யாருக்குப் புகழெல்லாம் கூறுங்கள்”, எனக்கேட்டார் (1)
குடும்ப வாழ்க்கையைத் தருமம் தவறாது நடத்தி வந்த ஷௌனகன் (அத்தகைய முறையான வாழ்க்கை வாழ்வதன் பயனாக), ஞான வேட்கை தோன்ற, அதனால், ஆங்கிரச வம்ச வழி வந்த முனிவர், பகவான் பிப்பலாடரிடம் சென்று, “ஐயா, இவ்வுடலே, இறைவனிருக்கும் பிரம்மபுரி எனச்சொல்லப்படுகிறதே? எங்ஙனம் இது உண்மை? இதனால் யாருக்கு உயர்வு? யார் இவ்வுடலைப் படைத்துக் காரியங்களைச் செய்கின்றார்? யாருக்கு இதனால் புகழ்? தயவு செய்து விளக்குங்கள்” எனக் கேட்டார். (1)
ätmano mahimä babhuva devänämäyuù sa
devänäà nidhanamanidhanaà divye brahmapure
virajaà niñkalaà çubhramakñaraà yadbrahma vibhäti sa
niyacchatimaghukararäjänaà mäkñikavaditi |
yathä mäkñékaikena tantunä jälaà vakñipati
tenäpakarñati tathaivaiña präëoyadä yäti saàsåñöamäkåñya |
präëadevatästäù sarvänäòyaù |
suñvape çyenäkäçavadyathä khaà çyenamäçritya
yäti svamälayamevaà suñupto brüte yathaivaiña devadatto
yañöyä’pi täòyamäno na yatyevamiñöäpürtaiùçubhäçubhairna lipyate |
yathä kumäro niñkäma änandamupayäti tathaivaiña
devadattaù svapna änandamabhiyäti|
veda eva paraà jyotiù jyotiñkämo jyotiränandayate |
bhüyastenaiva svapnäya gacchati jalaukävat |
yathäjalaukä’gramagraà nayatyätmänaà nayati paraà sandhaya |
yatparaà näparaà tyajati sa jägradabhidhiyate |
yathaivaiñakapäläñöakaà sannayati |
tameva stana iva lambatevedadevayonaù |
yatra jägrati çubhäçubhaà niruktamasyadevasya sa
samprasäro’ntharyämé khagaù karkaöakaù puñkaraùpuruñaù
gräëo hiàsä paräparaà brahma ätmä devatä vedayati |
ya evaà veda sa paraà brahma dhaà kñetrajïamupaiti || 2||
அவருக்கு அவருரைத்த அளவறியாப் பரஞானம்
நிகரற்ற பிரம்மோப நிடதமெனும் வரமாகும்.
அது பிராணன் அது ஆத்மா;
நரவாழ்வும் சுரவாழ்வும் நடத்திவரும் ஆதாரம்
பிரம்மபுரம் எனுமுடலில் பிரகாசிக்கும் சுயதீபம்
பிழையற்று, நிலையுற்று, ஒளியுற்று, நிகழ்த்துவது!
பூச்சிகளைக் கட்டி ஆட்சியுறும் சிலந்தியென
ஆட்டுவிக்கும் பிரம்மம் ஆள்விக்கும் பிராணன்;
தன்னுளே நூலெடுத்து தனக்குள்ளே பின்னிழுத்துப்
பின்னுகின்ற சிலந்தியெனப் பிராணன், பிறவியிதை
நுண்ணியமாய் நெய்வித்து நூதனமாய்த் தன்னுள்ளே
பின்னொருநாள் சீரணிக்கும்; பிணைந்த உடலுள்ளே
நாடிகளே தேவதையாய் நயந்ததிலே உறைவாகும்;
வானுயரப் பறக்கின்ற வல்லூறு கூட்டுள்ள
ஊனயர அடங்குவதாய் உறக்கத்தில் ஆழ்துயிலில்
நாடியிலே பிராணன் நல்கிவிடும் ஒடுக்கத்தால்;
விழிமூடித் துயில்பவனாய் விளங்கும் தேவதத்தன்
கழிமோதி அடித்தாலும் காலெடுத்து ஓடானாய்
சுற்றி நடக்கும்வினை சூடாமல் கூடாமல்
பற்றி யறியாமல் பலனேதும் சுமக்காமல்,
தானே விளையாடித் தன்னுள்ளே ஆனந்தம்
காணக் கிடக்கும் கைக்குழந்தை போலிவனே,
ஆழ்துயிலில் அறியாது ஆனந்தங் காண்கின்றான்;
தானே ஒளியென்று தனக்குள் அறிவதனால்
தனக்குள் கனவுலகும் தகைய வருகின்றான்;
அட்டைப் பூச்சி அயராமல் தன்முகத்தால்
எட்டிப் பிடித்து எழுப்பித் தன்னுடலைச்
சேர்த்துக் கொணர்ந்து, சேர்ந்த இடம்விட்டு
ஊர்ந்து அடுத்தடுத்து ஊர்வதுபோல் பிராணனிவன்
விழிப்புலகும், கனவுலகும் விளைவித்து, ஆழ்துயிலும்
வழிப்பயண மாய்த்தன்னுள் வரவைத்துக் கொள்கின்றான்;
அங்கிருத்தே கொங்கையென அருமறைகள் தெய்வங்கள்
தொங்குவது நிஜமாகி மனம் தோன்றுவன உருவாகும்;
விழித்துள்ள காலத்தே விரிவாக உலகத்தில்
செழித்துள்ள உயிரெல்லாம் சேர்ந்திவனே அதிகாரி;
பறவை இவன்;நண்டும் பங்கயமும் இவனுருவம்;
நிரவிய பெரும்புருஷன் நிகழ்த்துவதும் பிராணனே;
அழிப்பவனும் காரணமும் காரியமும் இவனேதான்;
ஆத்மாவே பிரம்மனென அறிவதுவும் இவனேதான்;
யாரிதனை உணர்வாரோ பேரருளை அடைவாரே!
வேறெதுவும் இல்லாத நேர்நிலையை அறிவாரே! (2)
மண்ணுலக வாழ்க்கைக்கும், தேவர்களிருக்கும் விண்ணுலக வாழ்க்கைக்கும் ஆதாரமாய் இருக்கின்ற ஆத்மனே, உயிராக விளங்குகிறது. அதுவே அனைத்தையும் ஆட்டிவிப்பது. தனக்குள்ளேயிருந்தே நூலை எடுத்து ஒரு வலை உலகத்தைப் படைத்துப் பின்னே அதனைத் தன்னுள்ளே சுருட்டி இழுத்துக் கொள்ளும் சிலந்தியைப் போலவே, ஆத்மா, தன்னிடமிருந்தே அனைத்தையும் படைத்து, பின் தானே அனைத்தையும் சீரணித்துக் கொள்கிறது. தானே அமைத்த நாடிகளுக்குள்ளே அது ஆழ்ந்து கிடக்கிறது. வானத்தில் பறக்கும் பறவை, பிறகு தானே தனது கூட்டுக்குள் ஒடுங்குவது போல், நாடி நரம்புகளிலே, ஆத்மா நயந்து கிடக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தேவதத்தன் எனும் ஒருவன், தான் கழியால் அடிபட்டபோதும், ஏதும் நடக்காதது போல் ஆழ்ந்து கிடப்பது போலே, நடக்கும் செயலுக்கோ, செயலின் பலனுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்காமல், சுகமாய் உள்ளே நிறைந்து இருப்பவன் ஆத்மன்.
தன்னுடைய ஒளியால்தான் விழிப்புலகம் பிறக்கிறது என்றும், தன்னுடைய ஒளியாலேயே கனவுலகும் கிடைக்கிறது எனறும் ஆத்மன் அறிவான். அட்டைப் பூச்சி, தன் உடலைத் தானே தூக்கிக்கொண்டு ஒருஇடத்திலிருந்து மறு இடத்திற்குப் போவது போலவே, ஆத்மாவும் விழிப்பு, கனவு, ஆழ்துயில் எனப் பலநிலைகளை விளைவிக்கின்றான். வேதத் தேவதைகள் கரங்களில் எட்டுக் கிண்ணங்களை ஒரேசமயத்தில் வைத்திருப்பது போல, ஆத்மனே, பலவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கிறான். அவனது அங்கத்திலிருந்து தொங்கி எழுவதே தெய்வங்களும், வேதங்களும் ஆகும்.
விரிந்த உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் இவனே! பறவையும், நண்டும், தாமரை மலரும் இவனே! புருஷன் என வியாபித்தவனும், பிராணன் என எல்லா இடத்திலும் கலந்துள்ளவனும் இவனே! ஆழித்தல், ஆக்கல், செயல், செயற்பயன் எல்லாம் இவனே. ஆத்மாவே பிரம்மம் என அறிபவனும் இவனே. இந்த உண்மையை உணர்ந்தவர் எவரோ அவரே பேரருள் பெற்றவர். ஆத்மாவை உணர்ந்தவரே, அடிப்படையான பரம்பொருள் அறிவை அடைந்து, தனித்துவம் பெறும் தகைமை உடையவர் ஆவார். (2)
tatra catuñpädaàbrahma vibhäti |
jägaritaà svapnaà suñuptaà turéyamiti |
jägarite brahmä svapne viñëuù suñuptau rudrasturéyaàparamäkñaram
ädityaçca viñëuçceçvaraçca sa puruñaùsa präëaù sa jévaù so’gniù
seçvaraçca jägratteñaà madhyeyatparaà brahma vibhäti |
mamanaskamaçrotramapäëipädaàjyotirvarjitaà || 3 ||
உயரிடம் உறையும் நாபி உள்ளிரு தயம் கழுத்து
இயல்பிலே தலையின் உச்சி, இவைகளில் ஈர்க்கும் மெச்சி;
நால்வகை இடத்தில் பிரம்மன் நால்வகை தடத்தில் மின்னும்;
சூழ்வகை அறியும் விழிப்பு; சுற்றிய கனவில் லயிப்பு;
ஆழ்துயில் அறியா நிலைப்பு; அறிதுயில் துரீயப் பயிர்ப்பு;
விழிப்பதே பிரம்மா; காக்கும் விஷ்ணுவே கனவின் மாயம்
உருத்திரன் உறக்கம் ஏகும் உணர்கின்ற துரீயம் ஆகும்;
அவனே சூரியன், விஷ்ணு; அவனே ருத்திரன் புருஷன்;
அவனே ஆத்மன் ஜீவன்; அவனே அருஞ்சுடர் ஈசன்;
ஆம் அப்பிரம்ம சக்தி – அனைத்திலும் ஒளிரும் சக்தி;
மனதினில் நினைக்கும் சக்தி; செவியின்றி கேட்கும் சக்தி;
கரங்களும் காலும்இன்றி காரியம் ஆற்றும் சக்தி;
உடலோடும் உலகமெல்லாம், உயிர்ப்பிக்கும் அரிய சக்தி
சுயஜோதி ரூபம் என்றே சுகித்தவர் விதித்த யுக்தி (3)
பிராணன் என்றும், ஆன்மா என்றும் சொல்லப்படுகின்ற அந்தப் புருஷன் நான்கு இடங்களில் உறைகிறான். அவை நாபி, இதயம், கழுத்து, உச்சந்தலை. அந்த இடங்களுக்கேற்ப, விழிப்பு, கனவு, உறக்கம், அறிதுயில் எனும் நிலைகளை ஏற்படுத்துகின்றான். விழித்திருக்கும்போது அவனே பிரம்மன், கனவில் அவனே விஷ்ணு, உறக்கத்தில் அவனே ருத்திரன். துரீயத்தில் அது பிரம்மம். அச்சக்தியே எல்லாவித உருவமாயும், அருவமாயும் விளங்கும் சக்தி; அதுவே உயிராக விளங்குமென்பது வேத விளக்கம். (3)
yajïa mätä na mätä pitä na pitä snuña na snuña cäëòälo na cäëòälaù
pailkaso na pailkasaù çramaëo na çramaëaù paçavo na paçavastäpaso
na täpasa ityekameva paraà brahma vibhäti |
hådyäkäçe tadvijïänamäkäçaà tatsuñiramäkäçaà tadvedyaà
hådyäkäçaà yasminnidaàsaïcarati vacarati yasminnidaà sarvamotaà protaà |
saà vibhoù prajä jïäyeran || 4 ||
hådisthä devathäù sarvä hådi präëäù pratiñöhitäù |
hådi präëaçca jyotiçca trivåtsütraà ca yanmahat ||
hådi caitanye tiñöhati || 4 ||
நிர்வாணம் ஆகும் அங்கே நிலையிலா உலகமில்லை,
தேவர்கள் தேவரில்லை, வேள்விகள் வேள்வியில்லை,
தாயுமோர் தாயும் இல்லை, தந்தையர் யாரும் இல்லை,
மருமகள் மருமகளில்லை, மாபாவி யாரும் இல்லை,
சாதிகள் ஏதுமில்லை, சந்யாஸம் என்றும்இல்லை,
ஞானிகள் வேறு இல்லை, ஞாலமும் நாமே என்று
அறிகஉள் மனதின்உதயம் ஆன்மப்ர காசவடிவம்
தெரிவதால் தெரியும்உலகம் தெளிவுற அறியக்கூடும்; (4-1)
நிர்வாணம் என்ற நிலையில், நிச்சயம் ஒன்றே ஒன்று!
வானவர் முனிவர் முந்தி வாழ்ந்தவர் என்பார் இல்லை;
நானவன் என உணர்ந்த ஞானியே தனித்து ஆளும்
கோனவன் ஆவான் எல்லாம் கோதறத் தெரிந்த சீலன் (4-2)
இதயமே தேவர்க் கெல்லாம், இயந்திட்ட மூலமாகும்;
உயர்நிலை ஞானம் தெய்வம் உறைகின்ற இடமுமாகும்;
இதனையே முப்புரிப் பூணூல் என்பதாய் மறைகள் காட்டும்;
பரமமே உயிராய் அறிவாய், பகவனாய் இதயம் ஆளும் (4-3)
அத்தகைய பரம்பொருளே எல்லாமாயும் விளங்குவதால், வேறு ஏதுமில்லாது நிர்வாணமாக விளங்குகிறது. அதை உணர்ந்த பொழுது, வானவர் என்றோ, வேள்விகள் என்றோ, தாய், தந்தை என்ற உறவுகளோ, சம்சாரி – சந்நியாசி எனும் பாகுபாடோ, அறிந்தவன் அறியாதவன் எனும் வேறுபாடோ எதுவும் இல்லை. எல்லாமே பிராணசக்தியின் ஒளியினாலேயே நிர்மாணிக்கப்படுவதால், அந்த நிர்வாணத்தில், முன்பிருந்தவர், பின்வருபவர் எனும் காலநியதி இல்லை. இந்த உண்மையை உணர்ந்தவனே பிரம்ம ஞானி. அத்தகைய பிரம்மஞானத்தின் அடையாளமே ஞானமாக உள்ளுக்குள் அணியும் பூணூல் என்று வேதங்கள் கூறும். (4)
äyuñyamagrapaà pratimuïca çubhraà ajïopavétaà balamastu tejaù || 5||
மேன்மையாய் விளங்கும் வெண்ணூல் மேனியில் தரித்திடு கின்றேன்;
வாய்மையும் வலிவும் ஆயுள், வரத்தையும் தந்திட வேண்டும்
நேர்மையும் ஞான வாக்கும் நிலைபெற அருள வேண்டும் (5)
(மேலே கூறிய மந்திரத்தினைக் கூறி பிரம்ம ஞானவேட்கையினால், வெளிப்புற அடையாளமாக வெள்ளை நூலால் ஆகிய பூணூலை அணிவது வழக்கம். ஆனால் வெளித்தோற்றத்துக்காக அணியப்படும் இந்தப்பூணூல் உண்மையாகாது என்றும், ஆதலினால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், பின்வரும் மந்திரங்களில் பிப்பாடலர் விளக்குகின்றார்). (5)
yadakñaraà paraà brahma tatsütramiti dhärayet || 6 ||
விலை பெற மாட்டா ஞானம் வெளிப்பட வேத சாத்திரம்
நிலை பெற வேண்டும் உள்ளே நீங்காத பிரம்ம சூத்ரம்
கலையறி வாக ஞானக் கவசமாய் அணிய வேண்டும் (6)
குடுமிவைத்தும், வெளியில் பூணூல் தரித்தும் இருப்பது மட்டும் ஞானியராக்கி விடாது. தலைமுடி இழப்பது என்பது ‘தான்’ எனும் ஆணவமிழத்தல். பூணூல் தரிப்பது, உள்ளே ஞானமெனும் முப்புரி அணிதல். (6)
tatsütraà viditaà yena sa vipro vedapäragaù || 7 ||
இயல்பிலே தத்பரம் இதுவெனச்
சுட்டிக் காட்டினால் சூத்திரம்,
மட்டில்லாப் பரவெளி நேத்திரம்;
கண்டவன் காணுதல் ஞானமே,
கல்வியில் அதுபிர தானமே
கற்பவன் அற்புதன் ஆனவன்,
விற்பவன் வேதவி லாஸனே (7)
இலக்கினைக் காட்டுகின்ற இலக்கியம் போல, பரம்பொருளைச் சுட்டிக்காட்டுகின்ற சூத்திரமே பூணூல். இதனை உணர்ந்து, உண்மையான ஞான சூத்திரம் அணிபவனே வேதம் உணர்ந்தவன். (7)
tatsütraà dhärayedyogé yogavittattvadarçivän || 8 ||
நூதன மானதிவ் வகிலமே
நூலெனக் கோர்த்தது பரம்பொருள்,
நுகர்ந்திது புரிந்தவன் யோகியே (8)
அவனுக்கு, நூலிலே கோர்க்கப்பட்ட மாலைபோலவே, பிரம்மமெனும் சூத்திரத்தால் பிணையப்பட்டதாக அகிலம் விளங்குவது விளங்கும். (8)
brahmabhävamayaà sütraà dhärayedyaù sa cetanaù || 9 ||
உயர்ந்தது எச்சிலோ அசுத்தமே
எட்டுதல் இல்லாத் தூயது,
என்பதை உணர்ந்த ஞானியர்
சட்டெனச் சரடிதன் ரஹஸியம்
சரியெனப் புரிந்தநற் செயலினால்
விட்டவர் வெளியினில் வேடமே,
வேதியர் மெய்யினில் மேலவர் (9)
அவனுடைய பூணூல் உட்புறமாக அணியப்படும் ஞானமே. அது பவித்திரமானது. அசுத்தப்படுத்த முடியாதது. அதனை உணர்ந்தவனே அந்தணன். (9)
sütramantargataà yeñäà jïänayajïopavétinäm ||
te cai sütravido loke te ca yajïopavétinaù || 10 ||
பேணுதல் பூணூலின் அரும்பொருள்
பிரம்ம சூத்திரம் என்பது,
பிரக்ஞையில் ஞானநூல் சேர்ப்பது;
கரவுளே கரைந்த கடவுளைக்
கடைந்திடும் ஞானநூல் உட்புறம்
அணிவதே அறிவுடை வதால்
அகற்றுவர் யோகியர் புறப்புரி (10)
வெளியே அணிவது ஒரு பாவனையே. அறிவில் பரம்பொருளின் உணர்வைச் சேர்ப்பதே உண்மையான பூணூல். அந்தப் பேருண்மையை உணர்ந்தவர்களுக்கு வெளிப் பூணூல் தேவையில்லை. ஆதலினால், அவர்கள் வெளிப்பூணூலை விலக்குவர். (10)
jïänameva paraà teñäà pavitraà jïänamuttamam || 11 ||
பர அறிவில் நிலைபெற்ற பக்குவமே உயர் பதவி;
பரஅறிவு தரும் ஞானம் பாவமில்லாப் பெருவாழ்வு;
தருமறிவு எனத்தக்கோர் தந்தமறைப் பெருவாக்கு (11)
அவ்வாறு வெளிப்பூணூலை விலக்கிய பிரம்ம ஞானிகளுக்கு, ‘நான்’ எனும் ஆணவ இழப்பே தலைமுடி மழித்த அழகாம். ஞானமே பூணூலாம். சமாதானமான நிலையே உயர்பதவியாம். இதுவே வேத உண்மை. (11)
sa çikhétyucyate vidvänitare keçadhäriëaù || 12||
தூயன் எனப்படுவர்; துல்லியிமாய்ச் சொல்லியதை
நேயத்தில் ஞானமில்லா நீள்குடுமிச் சடையாளர்
காயத்தில் தரிப்பதனால் கற்றவராய் ஆகாரே (12)
ஆதலினால், நெருப்பை ஒத்த ஞானம் உடையவரே பிரம்ம ஞானி; வெறும் குடுமி உடையார் பிரம்ம ஞானம் கற்றவர் ஆகமாட்டார். (12)
taiù sandhäryamida sütraà kriyäìgaà taddhi vai småtam || 13 ||
கருமம் விதித்தபணிக் கடனாற்ற உபவீதம்
சருமம் தரித்தமறைச் சாத்திரப் பணியாளர்
உருவம் அடையாளம், உயர்நீதி உபகாரம் (13)
அத்தகைய பிரம்ம ஞானம் அடைவதற்காக முயற்சி செய்பவர்களே, வெளிப்புறப் பூணூல் தரித்து, தர்மம் தவறாமல், சமுதாயப் பணிசெய்வார்கள். அவர்களுக்கு ஒரு அடையாளம் கொடுக்கவே, இத்தகைய வெளி அலங்காரம் ஏற்கப்படுகிறது. (13)
rähmaëyaà sakalaà tasya iti brahmavido viduù ||14||
நிறைவான கலைமாலை நிலைப்பிக்கும் மேலார்க்கு
மறைஞானம் சித்திக்கும், மதியூகம் எத்திக்கும்
குறையாத ஆனந்தம் குன்றாமல் தித்திக்கும் (14)
ஆதலால், இவ்வடையாளங்களை ஏற்று உண்மையாய் இருப்போர்க்கு, பிரம்ம ஞானம் கிட்டும். அதனால் என்றும் நிலையான ஆனந்தம் கிடைக்கும். (14)
sa vidvänyajïopavété syätsa yajïaù sa ca yajïavit || 15 ||
அந்நூலை அறிகின்ற அன்பர்களே அந்தணர்கள்;
பந்நூல் வேள்வியெனும பயன்உணரும் மெஞ்ஞானம்
தன்னுள் ஒளிர்கின்ற தத்பரத்தை உணர்ந்தோரே (15)
எனவே, ஞானமாகிய பூணூலே சிறப்பு. இதனை அணிந்து வாழ்பவர்களே அந்தணர்கள். அவர்களே தன்னை அறிந்து அதனால் எல்லாம் அறிந்தவராவார். (15)
karmädhyakñaù sarvabhütädhiväsaù säkñé cetä kevalo nirguëaçca || 16 ||
ஒன்றே தெய்வம் உணர்வது;
உயிர்களுக் குள்ளே மறைவது;
என்றும் எல்லாப் பிறவியுள்,
ஏகித் திருப்பது சுகிப்பது;
காட்சியில் எல்லாம் செய்வது;
சாட்சியில் நின்று உய்த்திடும்
அறிவாய்ப் பொருளாய் ஆவது,
அடிப்படை ஆன்மா ஆனது
தானே தானாய் நிற்பது;
தனிக்குண மில்லா தாவது;
வானும் மண்ணும் பரவுநல்
வடிவால் உண்மை காண்பது (16)
அத்தகைய ஞானம், பகுத்தறிவும், தொகுத்துணர்வும் தாண்டி, எல்லாம் ஒன்றே எனும் அனுபூதிக்கு ஆதாரமாய் இருப்பது. (16)
tamätmänaà ye’nupañyanti dhérästeñaà çäntiù çäçvaté netareñäm || 17 ||
இணைத்துத் தம்வசத்தே எல்லாம் கவர்ந் திழுக்கும்;
ஒன்றையே கோடிகோடி உருவமாய்க் காட்டும் அந்த
நன்றையே தவத்தி னாலே நயப்பவர் மட்டும் இன்பம்
என்றுமே பெறுவர் மற்றோர் எங்ஙனம் அடையக் கூடும்? (17)
எல்லா உயிர்களுக்குள் அடங்கி உள்ள ஆன்மா ஒன்றே, அனைத்துக்கும் ஆதாரம் எனும் உண்மையை உணராதவர்கள் எப்படி நிரந்தரமான சுகத்தை அனுபவிக்க முடியும்? (17)
dhyänanormathanäbhyäsäddevaà paçyennigüòhavat || 18 ||
மேன்மாட அரணியாக்கி, மெய்த்யானக் கடைதலாலே
ஊனூறும் ஞானாக்னியை, உளமூறக் காணல் போல
வானூறும் மோனப்ரம்ம வடிவினைக் காணவேண்டும் (18)
ஆன்மாவை நினைந்து, ஓம் எனும் மத்தினால், தியானம் எனும் கடைதல் செய்வதால், ஞானம் எனும் தீப்பொறி எழும். அதனை விடாமுயற்சி என ஊதிப்பெருக்கி, அந்த ஞான ஒளியிலே, ஆன்மா எனும் பிரம்மத்தை உணரமுடியும். (18)
evamätmä’’tmani gåhmate’sau satyenainaà tapasä yo’nupaçyati || 19 ||
முறுக்கிய தயிரின் வெண்ணையாய்
ஆற்றில் பரந்திடும் நீரென
அரணியில் விரிந்திடும் தீயென
சத்தியம் தவமும் சேர்ந்தரும்
சாதனை தொடர்வார் நெஞ்சினில்
நித்தியம் மலரும் ஈசனின்
நிர்மலத் தோற்றம் பூக்குமே (19)
எள்ளுக்குள் எண்ணை போலே, முற்றிய தயிரில் வெண்ணை போலே, ஆற்றின் நீரோட்டத்தைப் போலே, கடைதலால் வரும் தீ போலே, தர்மமும், தவமும், தளரா முயற்சியும் உடையவர் மனதில் ஆன்மாவாகிய ஈசனின் தரிசனம் கிட்டும். (19)
jägratsvapne tathä jévo gacchatyägacchate punaù ||20 ||
தளிர்விட்டு வலையைக் கட்ட
பின்னுள்ளே விழுங்கி விட்ட
பிறவியில் சிலந்தி போல
கண்ணுள்ள காட்சி தூக்கம்
கனவென்று மாற்றம் ஆக்கும்
தந்நிலை நிறைத்து அடங்கும்
தவநிலை ஜீவன் அம்ஸம் (20)
தனக்குள்ளிருந்து நூலெடுத்து வலைகட்டி, பின் அதனை விழுங்கும் சிலந்தியைப் போலவே, தானே விழிப்பு, கனவு, உறக்கம் எனும் நிலைகளை ஏற்படுத்தி, ஜீவன் எனும் நிலையில் ஆன்மா இருக்கும். (20)
hådayaà tadvijänéyädviçvasyä’’yatanaà mahat || 21 ||
மலரினிய தாமரையாய் மடல்கவிழ்ந்த கருவறையாய்
நிலவதறி; பரபிரம்மம் நிறைவதறி; அகவொளியால்
உலவுமகி லங்களது உற்பத்திச் சாலையறி (21)
அந்த ஆத்மாவே எல்லாவற்றுக்கும் பிறப்பிடம். மடல் கவிழ்ந்த தாமரை போன்ற இதயத்துள் இருந்து, உலகினை உற்பத்தி செய்யும் பரம்பொருள் என்பதை அறிக. (21).
suñuptaà hådayasthaà tu turéyaà mürdhni saàsthitam ||22 ||
விழித்திருக்கும்போது கண்கள் – கனவுலகில்
தவித்திருக்கும்போது கண்டம் – ஆழ்துயிலில்
தனித்திருக்கும்போது இதயம் – அறிதுயிலில்
சுகித்திருக்கும்போது தலைமுகடு (22)
ஒவ்வொரு உடலிலும், ஆன்மா, ஜீவனாக விழிப்பில் கண்களிலும், கனவில் கழுத்திலும், உறக்கத்தில் இதயத்திலும், சமாதி எனும் துரீயத்தில் தலை உச்சியிலும் விளங்கும். (22)
tena sandhyä dhyänameva tasmätsandhyäbhivandanam ||23 ||
ஸந்தியா வந்தனச் சாதனையாம் தியானமுறை (23)
பிரம்ம ஞானம் தேடுபவர், தானெனும் அகந்தை அழிந்து தனக்குள்ளே ஆன்மாவைச் சந்தித்துக் கலக்கும் சாதனைக்கான தியான முறையே சந்தியா வந்தனம் எனப்படும். (23)
ännandametajjévasya yaà jïätvä mucyate budhaù || 24 ||
சந்தி வந்தனத்தை சாதனமாய் ஏற்பவரின்
சிந்தை நிறையும் சின்மயமே அதைவிடுத்து
விந்தை நீர்விடுக்கும் வினையாலே யாதுபயன்? (24)
நீர் தெளித்து, உடலை வருத்திச் செய்வதல்லாமல், உண்மையான மனத்தெளிவுடன், புத்தி கூர்மையுடனும் தியானம் செய்வதே சந்தியா வந்தனம் ஆகும் (24)
தொட்டவுடன் தொடா ததெனத்
தொலைந்துவிடும் மனதும் மொழி
தோன்றி விடும் மோனவழி
அது வொன்றே ஆனந்தம்
ஆகுமென்ற அறி விதனால்
விதிவென்று மோட்ச மெனும்
வீடொன்றை அடை கின்றான்
அத்தகைய ஞானம் என்பது அடைவதற்கு அரிது. அதனை அடைந்து விட்டால், மனம் அழியும், மவுனம் நிலைக்கும், நிலையான சுகம் என்னும் வீடு கிடைக்கும்.
ätmätapomülaà tadbrahmopaniñatparam |
sarvätmaikatvarépeëa tadbrahmopaniñatparamiti || 26 ||
பரம்பொருள் உலக மெல்லாம்
நூலிலே இழைத்த கோலம்
நுணுக்கமே ஞானம் அதனை
நோற்பினால் அறிவால் ஜீவன்
நுகர்ந்திட அடையும் பதவி
ஏற்பதே பிரம்மோப நிடதம்
என்பதே பிரம்மோப நிடதம் (26)
பாலில் கலந்த நெய் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதுபோல், பரம்பொருள் அறிவான பிரம்ம ஞானம் இம்மந்திரங்களில் அடங்கி உள்ளது. அதனை நுகர்ந்து, உணர்ந்து ஜீவன் முக்தி அடைவதற்காகப் படைக்கப்பட்டதே இந்தப் பிரம்மோபநிடதம். (26)
பிரம்மோபநிடதம் நிறைவு