‘நான்’ எனும் உணர்வு மனிதருக்கு மட்டுமா? மற்ற உயிர்களுக்குமா? அப்படி நான் எனும் ஆய்வைச் செய்யும்போது, உடல், புலனறிவுகள், மனம் ஆகியவையும் அறிவுடன் விளங்குவதாகத் தெரிகிறதே? இந்த ஐயங்களை விளக்கும் 4ம் ஸ்லோகம்.
தம்மை விலகிப்போ எனக் கூறிய துறவிகளையும், அவர்களது தலைவரான ஆதி சங்கரரையும் நோக்கிப் புலையன் கேட்ட கேள்விகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன. இவையே மனீஷா பஞ்சகம் எனும் மாபெரும் ஞானப் பொக்கிஷத்தை வெளிக் கொணர்ந்த, ஆழத் தோண்டும் கேள்விக் கோடரிகள்.