Sivapuranam by Manickavasagar (41-43)
41. ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் பிறப்பு (ஆக்கம்), எல்லை (அளவு), அழிவு (இறுதி) இல்லாத நிலையான உண்மையே (இல்லாய்)! அறியவும், அறியவும் முடியாத எல்லா உலகங்களையும் (அனைத்து உலகும்), முதலும், முடிவும் இல்லாதது பரம்பொருள். காரண-காரியம் எனும் செயல்-விளைவு வாதத்தால், உலகில் எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணத்தைத் தேடுதல் அறிவியல். எனினும் அவ்வாதம், முற்றுப் பெறாதாது என்பது அறிவியலிலும் உறுதிப்படுத்தப்பட்டது. காரண-காரிய வாதங்களுக்கும் உட்படாத முதற்காரணம் ஒன்று இருக்க வேண்டும் என்பதும் அறிவியல் கண்ட பாடம். தோற்றத்தைத் துருவி ஆராய்ந்து, முதலில்லா ஒன்று இருப்பது அனுமானிக்கப்படுவது போலவே, விளைவுகளைத் தொடர்ந்து ஆய்ந்தாலும், முடியாத ஒன்று