Sivapuranam by Manickavasagar (03-05)
03. கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க திருப்பெருந்துறை எனும் தலத்திலே (கோகழி) ஆட்சி செய்துவரும் (ஆண்ட), ஒப்பற்ற ஆசானின் (குரு மணி தன்) திருவடிகளைப் பணிவோம் (தாள் வாழ்க). ‘கோகழி’ எனும் சொல் குறுந்த மரத்தைக் குறிப்பது. குறுந்த மரத்தின் அடியில், அமர்ந்திருந்த ஒரு நல்லாசிரியரைப் பரசிவனாய்க் கண்டு, மாணிக்கவாசகர் நல்லறிவு பெற்ற இடம் தமிழகத்தில் உள்ள திருப்பெருந்துறை எனும் ஊர். நல்லாசிரியராக வந்து அறிவு புகட்டி, பிறகு மறைந்த அக்குரு மனிதர், எல்லாம் வல்ல பரம்பொருளே என்றும், திருப்பெருந்துறை ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலிக்கும் பரசிவனே என்றும் உறுதிபட்ட மனதால், அத்தலத்தையே தமது இருப்பிடமாகக் கொண்டு,