Ealing Sri Kanaka Durga

Pages: 1 2
Pages: 1 2

ஸ்ரீ கனக துர்க்கை துதி

(1)

குங்குமமும் குமிழ்நகையும் கூர்நயன மடல்முகையும்
குத்துவிளக் கான உருவே
கும்பிட்ட மனதுள்ளே நம்பிக்கை விதைக்கின்ற
குணநல மான திருவே
பங்கஜமும் பாதமகி டங்கயனும் திரிசூலம்
பாவித்த யோக வடிவே
பாதாதி கேசமுதல் வேதாவி லாசமெனும்
பரஞான நெறியின றிவே
சங்குகரம் சக்கரமும் சத்தபய முத்திரையும்
சாத்வீக மான நலமே
சந்நிதியில் எந்நிதியும் நந்நிதியாய் தந்தருளும்
சத்தியக் கருவூ லமே
மங்களமும் மாலைகளும் மணிவயிர சோடனையும்
மாறாத மோன நிறைவே
மதிமாய மகிடமுக மிதிபாத மருளுங்கதி
மாதரசி கனக துர்க்கே (1)

With the red kumkum on the forehead and bubbling joyous smile, Your graceful eyes like blossom sharp, Your structure is like the tall lighting lamp! Into the adoring hearts, You sow the seeds of hope! Wisdom blossoms as the lotus at Your feet, as they crush the demonic ego, in the form of bull! With your trident, from the feet to head, Your divine manifestation expounds the essence of all Vedas! With the conch of primordial sound on one hand, the wheel of eternal time on the other, and the other hands blessing in grace, Your posture is divinely satvic! Your presence presents the best of all weal and wealth as You are the true infinite treasure. Blissfully wearing the garlands and ornaments in beatitude, You are the serene fulfillment. In the form of bull-headed demon, vain ego and illusion conquered at Your feet which is my salvage, O Queen Mother, Sri Kanaka Durge!

(2)

எல்லா இடத்திலும் இருக்கிறாய் என்றாலும்
என்னுள்ளம் கள்ளம் எனவோ
ஏகித் தவிக்கினும் பாவப் பெருக்கெனும்
எண்ணமெனும் தாள் பூட்டியே
நல்லா யிருப்பதை மறைப்பியோ வெறுப்பியோ
நானறிய முடியா தெனவே
நாடகம் நடத்தியே வேடகம் வருத்தியே
நான்யார் எனை மறைக்கவோ
கல்லா யிருக்கின்ற காட்சியிது திருக்கோவில்
கடவுள் என்கின்ற பொழுது
கல்மனது கரையட்டும் உள்விலகி உருகட்டும்
கருணா லயமான ஞானம்
பொல்லாப் பிறவிஎனும் போர்வை களையட்டும்
புலனறிய ஆன்ம லாபம்
புனிதம்வளர் ஈலிங்நகர் இனியதிரு மாதரசி
புண்ணியமே கனக துர்க்கே! (2)

Omnipresent You are, yet in spite of my yearning, You are hidden beyond the reach within my mind, is it perhaps my heart still impure, locked behind clutches of sinful thoughts? Should You hide Your bliss? Must You dislike me? In my ignorance, as if I cannot find You, You enact the play! Thus my laden heart suffers and as an ordeal, You hide my true-self within me. Is it why You appear in stony form at this prosperous temple? At Your graceful presence, let the rocky hearts melt; let the curtailing inner veils fall; within the moving hearts, let true wisdom be dawn; the blanketing cycle of enduring births be uncovered. Within the grasp of intellect, let the knowledge of self be the true gain. In the virtuous town of Ealing, You are in the most blissful form, O the Queen Mother, Sri Kanaka Durge!

(3)

நால்வரும் ஆழ்வரும் நாயன் மார்களும்
நற்கவி அபிரா மரும்
நாதமும் மூர்த்தியரும் நாச்சியரும் அருணகிரி
நாதரும் தாயுமா னரும்
சூலரும் பொருளாலே ஸ்வரலய பதமாலைச்
சொற்கவியுள் கற்ற தெளிவு
சூடியுனைப் பாடியருள் நாடியதில் சுகித்தேநீ
சுந்தரி எனை மறந்தாய்
மேல்மருவ தூரானைக் காகடம்ப நாயகி
மெய்ச்சமய புரத்து மாரி
மென்மையெனும் பெண்மைசிவ உண்மையெனும் தத்துவம்
மெய்ப்பிக்க வந்தஉப காரி
காலருகி லேகவிதை போலுருவி லேஉளறும்
கடிமொழியென் மழலை அம்மா,
கைவல்ய ஞானவரம் மெய்யறிவுத் தானறிய
கருணைசீர் கனக துர்க்கே! (3)

The great Four Saivas, Vaishnava Alwars, Saiva Nayanmars, great poet Abhiramapattar, the trinity of music, saintly Nachiars, Sage Arunagiri, Thayumanavar and such great seers, in their adoring words that are pregnant with meaning and poignant in form and perfect harmony, worship Your grace. In the lucidity and beauty of these great garland of verses, You have submerged and in so indulging, You have ignored me! Your motherly manifestations, many as in Melmaravathur, Thiruvanaikoil, Kadambangudi and Samayapuram, all reveal the great philosophy that the tender femininity is the core of all pervading Sivam! Your graceful form aids such blissful understanding. At Your divine feet, with jejune intellect, I submit these incoherent words as poem! Please deem these harsh words as Your child’s blabber. In the forgiving grace, bless me with true wisdom and grant me the supreme awareness of thy self, ever graceful Sri Kanaka Durge!

(4)

பனித்திவலை பகலெதிரில் நிலைக்குமோ தீப்பொறியை
பஞ்செதிர் கொள்ளல் எளிதோ
பாவெமென் மலைமுகடு பாதமுன் கலைதழுவ
பட்டென்று கெட்டல் அரிதோ
தனித்தவளே தயையுருவே தருமபரி பாலகியே
தனயரெமைக் காத்தல் கடிதோ
தாய்மடியை சேய்மிதித்து நோய்வருத்த லாகுமோ
தழுவிஎனைக் கழுவல் பெரிதோ
மனக்கவலை நிழல்பூதம் மயக்கமெனும் மதிச்சோர்வு
மாதரசி ஜோதி ரூபம்
மாற்றட்டும் சுடரறிவு ஏற்றட்டும் நல்லமைதி
மானுடம் நிறைக்க வேண்டும்
துணையவளே அருள்வண்ணத் தூரிகையே காரிகையே
துதித்தமனம் பதிக்க வருக
தூயமணி நேயமலர் மாலையணிந் தாயமுதே
தூரியமே கனக துர்க்கே (4)

Can dew drops last the dawning Sun? Can the fragile cotton match the fury of the blaze? At the moment of my submissive embrace at Your feet, is it a wonder that my mounting sins vanish in a flash? As the serene solitude, grace manifested, reigning the eternal Dharma, is it difficult for You to save Your children! Perhaps it is my sin! Yet, can the innocent kick of infant injure the mother? Why is then it is hard to embrace me and cleanse my ignorance? Mental worries are shadowy ghosts; weariness of intellect is the cause of illusion. O Queen Mother, let Your brightness light the illuminating knowledge in me; let there be change; let my mind attain virtuous serenity; let that extend to all humanity. You are our aide, like the brush that trace the grace eternal! Be, in the adoring hearts; Wearing the garland of pure love, You are the nectar, supreme conscious, Kanaka Durge!

(5)

பூவும் மந்திரமும் பூஜை நியதிகளும்
புனலாடும் விரதங் களும்
புண்ணியம் பாவமென எண்ணும்வி காரமும்
புரிந்தும் புரியாம லும்
ஏவும் யந்திரமும் நாவின் மந்திரமும்
எல்லாச் சமய நெறியும்
எதுவோ நிலையென்ற அதுவே கதிஎன்று
எடுத்தோதும் அதுவே வேதம்
யாவும் அன்புஎனும் அண்டம் அமைத்த சிறு
அணுவே அணுகும் உபயம்
அதனால் தாயுருவில் வதனா லங்காரம்
ஆகியெதிர் காணும் அபயம்
போகும் மனத்தாபம் புலரும் உற்சாகம்
பொறுமையுடன் வருவ தேற்று
பூவுலகில் அன்பென்ற மேலுணர்வு தந்திங்கு
பூத்தவளே கனக துர்க்கே (5)

Through flowers and mantras, prayers and rites, taking holy baths in great rivers and fasting austerities, symbolic rituals, reciting mantras and such pious acts, with or without the understanding of their true purpose, in the balance of virtuous and sinful deeds, we seek the truth! All great religious thoughts ultimately lead to this One Truth that is eternal and our salvation! True Veda is this, which asserts love as everything; love as the nucleus, the building block of the entire universe. Perhaps only to illustrate this, You have manifested in the form of loving Mother, most beautifully dressed. When filled with love, minds rid stress; abundance of happiness and zeal arise; with the dawn of courage and true wisdom, we face and accept whatever comes ahead!
As universal love, You blossom Sri Kanaka Durge!

(6)

கங்கையணி திங்களணி சங்கரரு மங்களவி
தங்கள்சிவ சக்தி துர்க்கே
கௌமாரி காமகலா காமேஸ் வரிஞான
கட்கமஹா சக்தி துர்க்கே
பொங்குகடல் சங்குகர வெங்கடவன் அங்கமித
பங்கயஸ்ரீ விஷ்ணு துர்க்கே
போகாதி விடயங்கள் யோகாதி முத்திரைகள்
புலனா வரண துர்க்கே
எங்குநிறை ஸ்ரீசக்ர அங்கமுறை யோகினிகள்
ஏற்கும்நவா அம்ச துர்க்கே
ஏகாந்தி சிந்முத்ர ஞானாந்த காரிணீ
எண்கோண வசீனீ துர்க்கே
மங்களஸ்ரீ சக்ரவடி வங்களதி உக்கிரமே
மாலலித விஜய துர்க்கே
மாகாளி ஸ்ரீமாதா மதிஞானசு தந்திரந்தா
மாதங்கி கனக துர்க்கே (6)

With river Ganges tucked in the tuft and crescent moon on the head, Sankara is the holiest and in His form, You are the Siva Durge! You are Kaumari, Kamakala kameshwari and the ‘katkam’ wearing Shakthi Durge! As integral to Lord Venkatesan who bears the conch and in yogic slumber upon the tidal miky ocean, You manifest as Mahavishnu Durge! All sensuous, sensory and super-sensory enjoyments, yoga mudras and the power of maya are Your grace! Protecting the fortress of Sri Chakra, You are the Avarana Durge and therin, in varied forms as Navaamsa Durge! In the multitudes, You are One, alone, the intrinsic meaning of tantric and yogic symbols, root cause of wisdom and manifest in eight forms such as Vaseeni Durge! Sri Chakra, the supreme divine geometry is Thy symmetry! Your potent is intense and as one with Sri Lalitha, You are the Vijaya Durge, the magnificent mother Kali! Please give me the complete free will and the absolute knowledge, O, Mathanki, Sri Kanaka Durge! 

(7)

படிவளரும் பதுமையாய் நெடிபுவனப் புதுமையாய்ப்
பயில்மனது நினைவுருவ மாய்
பார்க்குமுரு யார்க்குமுயிர் சேர்க்குமருட் தீபமாய்
பவித்திரக் கொலுவுருவ மாய்
நொடிமலரும் காலமாய் வடிவமையும் தேசமாய்
நூதனம் படைத்தமா தாய்
நூற்றுலகு வார்த்ததாய்ப் போற்றுமறை ஈர்த்ததாய்
நுண்ணணுவில் பின்னுமணு வாய்
நெடியவளர் நலமுமாய் நிறையுமருட் சிவமுமாய்
நேரிழை நிறைகருணை யாய்
நின்றாள என்னுளம் நன்றாக நின்பதம்
நிச்சயப் படுத்தவா ராய்
அடிமலரும் அடியரவர் அடிபணியும் நல்லறிவு
அளித்தெனை உயர்த்தவா ராய்
அம்மா நவதுர்க்கே ஆதிபரா மாசக்தி
அருள்தரும் கனக துர்க்கே (7)

As the dolls on the steps, as the wondrous creations of infinite universe, in every form that the mind can conceive, in every form seen, as the flame of life in all forms, in the holy display of Kolu, O Mother, as the One Who gave birth to time and space and innumerable worlds, Who is attracted to the truth of Vedas, Who is the indwelling subatomic energy, Who is the enduring bliss and the eternal grace of Shivam, as the supremely gracious Mother, to imprint Thy divine feet into my heart, please do come! Grant me the wisdom to worship the devotees of Your divine feet, O Mother, the primordial power Who came as Nine Shakthis, O, Kanaga Dhurge, save me! (7)

(8)

முவ்வரியில் பதினாறு முகமலரில் ஓரெட்டு
முனையிதழில் விரித்த கோலம்
முக்கோணம் பதினான்கு முன்பத்து பின்பத்து
முகிழ்த்தஎண் சக்ர வாகம்
செவ்வரியில் திரிகோணம் சீர்நடுவில் நற்பிந்து
செம்மைஎன் றான தாகும்
ஸ்ரீசக்ர ராஜாதி ராஜசிம் ஹாஸினி
ஸ்ரீதேவி ஆளும் தேகம்
நவ்வுடலில் நவகோண நவமூல நந்நாடி
நயந்துயிர்ப் பயிரின் கூடம்
நலியுடலும் வளியுடலும் நழுவுமன மதிசுகமும்
நட்டசுவர் விட்ட தீபம்
எவ்வுடலில் எங்குயான் ஏதுருவாய் அடங்கினும்
எனையாண்டு மீட்க வாராய்!
எழிலரசி விளையாடும் தொழிலரசி பார்வதி
ஏகினி கனக துர்க்கே (8)

With three lines of outer boundary, the flowers of sixteen petals and eight petals as the gates, fourteen triangles followed by ten inside and ten outside triangles, converging into to an eight-petals of inner chakra, the holy triangle as the sanctum, the centre of which as the most auspicious dot or bindhu is Your abode, the Sri Chakra, upon which O Mother, You reign as the Empress of all universe, thus reside and rule all bodies; These bodies, in their nine core apexes, key ‘nadis’, that are said to be the knots of the soul, behind the physical, respirational, mental, intellectual and blissful sheaths, You are there as the still light. In whatever embodiment, wherever and however I may get trapped, You will come an rescue me! O, Paravathi, Who has taken up the divine play of creation etc., the One and Only, Kanaga Dhurge! (8)

(9)

கல்லான தனித்தசிவத் துள்ளான ஜோதி
காமகலா காமேஸ் வரி
களித்துவிளை யாடிபர சிவத்தின் உறவாடிக்
கவினுலகு படைத்த நேரி
வல்லாய் மாலக்ஷ்மி வாணீ மாகாளி
வரமருட் கருணை மாரி
வழியுமா னந்தவிழி பொழியுமா அன்பு
வாரித் தெளித்த வாரி
அல்லாய் யானுழன்று அல்லலுறல் நீதியோ
ஆட்கொள்ள வரவில் லையோ?
அம்மைநீ பொம்மைநான் ஆனதறி வானதால்
ஆள்விக்க வேண்டு மிலையோ?
நல்லாய் நீயுனது நற்பிள்ளை யானெனும்
நியாயம் எடுத்து வைத்தேன்
நாயகி அகிலாண்ட நர்த்தகி அருள்கவே
நாரணி கனக துர்க்கே (9)

From Shivam, Parabrhamam that is unmoving and alone is Shivam, You came as the light, in the most enchanting form of Kama Kala Kameshwari, to indulge with Parashivam and to give birth to all there is! O Mother, You are all-potential, Maha Lakshmi, Vani and Maha Kali, with the grace-yielding eyes that rain compassion and love! Is there any justice that I suffer on earth in vain? Why have You not come to liberate? You are my Mother, I am Your Toy; as I know this, don’t You have to come to my rescue? O Sinless, I have appealed on the basis that You are my Mother and I am Your child!. O Master of all universe, the great dancer, the sister of Narayana, save me, Kanaga Durge! (9)

Pages: 1 2

Related Posts

Share this Post

Leave a Comment