Eastham Murugan
இலண்டன் ஸ்ரீ முருகன் துதிப்பாமாலை
ஸ்ரீ விநாயகர் துதி
தானிந்தப் பிறவிக்குத் தக்கதுணை – வானுந்த
வாழ வகைத்தோனை வணங்கித் துதிப்போமே
வேழ முகத்தோனே விதி
கரிமுகனாம் கணபதியைக் காதலினால் கைகூப்பி
அறிமுகமாய் அடைக்கலமாய் அடைவதனால்- சரிவருமே
எல்லாம் இனிதாகும் என்றும் சுகமாகும்
நல்லார் வாழ்வென்னும் நடப்பு
பூத்தவனே வேழமுகப் புண்ணியனே ஆறுமுகன்
மூத்தவனே முடிக்கும் முதலறிவே – காத்தருள்க
கனிவாகச் செய்கின்ற காரியங்கள் கைகூடும்
இனிதாகும் இதுவேவரம்
In the adoring worship of Ganapathy, with the hands humbly clasped, and in the sweet surrender to the elephant-faced God of all angels, all shall be fine; everything shall be done well; everyday shall be sweet; To all of such good deed, this is the boon of life!
Blossomed with the face of elephant, O the purest, the elder to Sri Arumuka! O One of supernal wisdom for all accomplishments! O Ganapathi! Protect us and bless. Gracefully, let all our endeavours be achieved and fully realised! Let this be the boon!