Eastham Murugan

Pages: 1 2 3 4 5 6
Pages: 1 2 3 4 5 6

இலண்டன் ஸ்ரீ முருகன் துதிப்பாமாலை

ஸ்ரீ நடராஜர் துதி

அம்பலத்து அரசே அருஞ்சிவனே நடராசா
எம்புலத்து எழுமுணர்வு எல்லா முனதாக
மெய்சிலிர்த்து நின்று மேதினியில் யாதினிலும்
ஐயாவுன் ஆட்டத்தின் ஐக்கியமே பார்க்கின்றேன்!
நடமாடும் தோற்றத்தில் நாதா நீஎனக்கு
முக்கண்ணால் எக்காலும் முழுதுணரக் காண்பிப்பாய்,
முடியடங்கும் கங்கையினால் மூவுலகும் வாழ்விப்பாய்,
தக்கும்பிறை அணிவாய், தவறாமல் காலநிலை
தருவிப்பாய், கலங்குமதி தவிர்த்தடியார் தகைவிப்பாய்,
வலச்செவியில் ஆணழகாய் வடிமகர குண்டலமும்
இடச்செவியில் பெண்மைக்கு இலக்கணத்தா டங்கமும்
புலப்படவே தாங்கிப் புண்ணியனே பாலிரண்டும்
புரிபடவே சரிசமனாய்ப் போதிப்பாய், பூவுடலில்
சுழிப்படரும் அரவத்தால் சுகித்தடையும் குண்டலினி
முனைப்படைய ஞானமெனும் முப்புரிநூல் சேர்விப்பாய்,
கண்டம் நிறுத்திவிடம் காப்பிடமாய்க் காண்பிப்பாய்,
கனிதுயரும் வலக்கரத்தில் கவினிசையைத் தமருகத்தில்
அண்டம் படைக்க அசைவிப்பாய், அடிக்கரத்தில்
அஞ்சேல் என்றருளும் அபயவரம் தருவிப்பாய்,
இடதுகரம் மேல்தூக்கி எரியுமொளித் தீவடிவால்
இயற்கையிது இயற்கையிலே இறையா வதறிவிப்பாய்,
இடதுகரம் கீழ்கனிந்து இணையடியைத் துணையடியாய்
இருப்பதனைக் காட்டி இன்னறிவு இயல்விப்பாய்,
ஆழப் பதிந்தவலப் பாதம் நிலவுலகை
அறியத்தரும் அடியில் அடங்கும் முயலகனை
ஊழை உண்மையிலா உலகியலை அஞ்ஞான
மாயை மடக்கியதன் மகிமை உணர்விப்பாய்,
இடப்பதமோ மேலெழும்பி எல்லாம் ஈதென்னும்
அனுக்ரஹம் செய்கின்ற அருநடனம் தெளிவிப்பாய்,
ஆட்டுவிப்பாய் எல்லாம், ஆடுகின்றாய் அம்பலத்தே,
ஆட்கொள்வாய் என்மனத்தில் அன்பாலே மேடையிட்டு
காட்டுவித்தை கவினுலகுக் கருமங்கள்துடைத்தென்னைக்
கூட்டுவிக்க ஞானத்தால் கும்பிட்டேன் அய்யாவே!

சிவகாமி அம்மை துதி

ஆட்டுவான் ஆடிக்காட்ட ஆதார வேதங் காட்ட
கூட்டுவாழ் குணத்தைக் காட்ட குறிப்பினால் பொருளைக் காட்ட
நாட்டுவான் வையங் காட்ட நாயகி மையங்காட்ட
நீட்டுவாழ் நிற்பாளருளே நிர்மலிசிவ காமிஉமையே

Prayer to Sri Natarajar

O Nataraja, King of the Cosmic Stage, O Siva! All these worlds and the lives therein are all Yours! Lord, in ecstasy, I witness Your dance and in its dynamics the cause of universe and all its manifestations. In the trinity of Your eyes are the three phases of time. Adorned with tufts of hair locks, Your head contains the fleeting river Ganges, signifying the abundant weal and wealth that You shower. The crescent Moon in these tufts, bestows the material pleasures; the phasing of Moon implies that You are the controller of Time; By crowing the waxing moon with all its faults, Your generosity to elevate all souls, irrespective of their illusive ignorance is evident.

The Makara Kundala on the right ear denotes masculinity and the Tatanka on left ear lobe marks the divine feminine beauty, a poignant illustration of equality of gender. The serpent creeping around Your body is Kundalini, the innate power of any being. The holy thread hangs from the left shoulder to the underneath of right arm, symbolises the Purity of Being. By holding the poison in Your neck, You show mercy and unbounded compassion. Your right arm raised above, carries the drum, the sound of which is the source of creation of the whole universe. The lower right hand is the blessing hand and it symbolises the existence. The raised left hand carries the fire which is the source of energy in the nature that consummates the nature itself in the end cycle. The lower left hand points to the divine feet as the refuge to all. Your right foot firmly staying on the ground, asserts Your omnipresence. The demon underneath the firm right foot represents the illusive nature of the material existence and the ignorance. Your divine feet is the escape to wisdom. The left leg is raised from the ground as a dance posture. This is the all bestowing foot.

You are the dancer who is the cause of all changes. Please bless me with the divine vision of Your dance, for in love, I have set my mind-heart as Your stage. By removing the unreal worries of the illusionary world and the karmic bonds, let me be with You! I worship you, my Lord!

Sivakami Ambal

The Supreme God who controls the cosmos is performing the cosmic dance, thereby showing the basis of all Vedas! O Mother Sivakami! Only to illustrate the virtue of partnership and the purpose of team work, as the Lord shows the Universe through His dance, You show the core of its purpose, by standing tall! You are the purest, Uma, my Mother!

Pages: 1 2 3 4 5 6

Related Posts

Share this Post

Leave a Comment