Eastham Murugan
இலண்டன் ஸ்ரீ முருகன் துதிப்பாமாலை
(1)
முருகென்றால் அழகென்றும் இளதென்றும் இனிதென்றும்
முத்தமிழ் என்று வேதம்
முப்புரம் எரித்தசிவன் அப்பனுக் குபதேச
மூர்த்தியாய் நின்று ஓதும்
அருகுமலர் ஆனைமுக அண்ணல்கனி வுற்றதால்
அறுபடை வீடு தோறும்
அருணகிரி வருமருவி உருகுதமிழ்ச் சந்தமும்
அவ்வை அமிழ்தாகும் சாரம்
பருகுதலை அறிவதால் பவவினை களைவதால்
பன்னிருகை ஐயனே உன்
பாதார விந்தமே ஆதார பந்தமாய்
பற்றுதலால் கற்ற தாலே
கருவுமுதல் உயிரெலாம் கலையெலாம் உலகெலாம்
காத்தருளும் மூர்த்தி யாகக்
கண்டதால் உருகினேன் லண்டன்மா முருகனே
கதியெனது மதியில்உன் தாள் (1)
In the trinity of Tamil as the sanctity of Vedas, “Muruga” means beauty, fresh and sweetness.
O Muruga, You embraced Guruship to Parameswaran,the annihilator of all three worlds,
Through the divine-play of reasoning with Ganesha who wears the garland of “Arugu” grass,
You have taken abode as the fruit of wisdom at six houses.
With Your grace, Arunagiri did indite his opus like the majestic flow of water
Avvaiyar gave her verses in nectar; In tasting this essence, I witness the erosion of my sins.
O Lord of twelve hands! Your divine feet are our succour.
Indeed You are the saviour of life, right-from the womb to all worlds and all entia!
By seeing you, I am moved, the Greatest Muruga,
reigning in the temple of London my salvation and senses are at Your divine feet!
(2)
எங்கே கடவுள் என்பேன் ஒருநாள்
எதிர்வாத சாதகங் களால்
எல்லாம் அறிந்ததாய் எண்ணுவேன் மறுபடி
எல்லாம் உதிர்ந்து நிற்பேன்
அங்கே இங்கென அலையுவேன் பூசைகள்
ஆயிரம் செய்து காட்டி
அறிவியலும் மனவியலும் ஆனதே உலகென்று
அகங்கார வாதம் செய்வேன்
தங்கா இளமையும் தாய்தந்தை சுற்றமும்
தளரயான் முதுமை காணத்
தவிக்கையில் விரக்தியும் தனித்திடும் விசனமும்
தாக்கியதால் ஞான தாகம்
பொங்கா அமுதமாய்ப் பொழிகின்ற அருள்மேகப்
பொய்கையே சுப்ர மண்யா
கண்டதால் உருகினேன் லண்டன்மா முருகனே
கதியெது மதியில்உன் தாள் (2)
Arguing against all,I declare that I knew all;
Again, by the fall of all,I don’t stand tall ;
Roaming here and there in insanity,
Performing numerous rituals in vanity,
I argue to rationalise the world as nothing
But of matter in science and psychology;
With temporal youth leaving,
Parents and relatives ageing,
Ailments and solitude only to endure,
Then I yearn for the thirst of knowledge….
And there You are!
The rarest flow of nectar pouring
As the surest form of graceful rain cloud,
My Lord, Subramanya.
By seeing you, I am moved, the Greatest Muruga,
Reigning in the temple of London,
my salvation and senses are at Your divine feet! (2)
(3)
ஆத்திகனா யிருப்பின் அனுதினமுன் ஆலயம்
அண்டியே வாழ வேண்டும்
அறிவியலும் அணுவியலும் ஆய்வதா னாலுமுன்
ஆதாரம் நோக்க வேண்டும்
நாத்திக னாயினும் நல்லவனாய் உனை
நாள்தோறும் மறுக்க வேண்டும்
நாடாளும் போதிலும் நானுந்தன் அடிமையெனும்
ஞானம் சிறக்க வேண்டும்
சாத்தியம் இல்லாது சத்தியம் நில்லாது
சதிராடும் பதரான என்
சங்கடம் களைவது உன்கடன் அல்லவோ
சமயமிது உறுதி சொல்வாய்
காத்திருந் தென்னைநீ காணவைத் தாயுனைக்
கந்தனே கருணை வடிவே
கண்டதால் உருகினேன் லண்டன்மா முருகனே
கதியெனது மதியில்உன் தாள் (3)
If I dwell in the science of atom for the search of Truth,
yet let my contemplation for its origin be on You!
Should I be an atheist, foster goodness in me and
let me have Your thoughts without fail, for the daily denial of You!
Even if I rule the world, engrave the true wisdom
that I am Your eternal slave.
With no worthy accomplishments and no steadfast approach to truthfulness,
I am here as a dirt; Is it not Your duty to rid of my grief?
Promise me, here is the time to save me!
You have waited for me and ventured to make me see You.
Kandha, You are the embodiment of love!
By seeing you, I am moved, the Greatest Muruga,
reigning in the temple of London,
my salvation and senses are at Your divine feet! (3)
(4)
சுருள்முடி மகுடமும் அருள்முக வதனமும்
சூரியப் பிரகாச வரவும்
சுடர்விழி கருணையும் மடல்செவி கவனமும்
சூடிய மாலை அழகும்
அருள்வடி வேலும் அபய கரமும்
ஆளும் சேவற் கொடியும்
ஆதார உதரமும் அழகான அதரமும்
அன்பிலே முகிழ்த்த நகையும்
குறமகள் வள்ளியும் திருமகள் தேவானை
கூடவே நிற்கும் தகையும்
கோலமயில் வாகனம் காலடியில் ஏகிடும்
கோடானு கோடி நலமும்
கருளிருட் காலம் கழித்திடுங் கோடி
கதிரெனும் சிவக் கொழுந்தே
கண்டதால் உருகினேன் லண்டன்மா முருகனே
கதியெனது மதியில்உன் தாள் (4)
Graceful face, Sun’s radiance dare,
Bright lit eyes with love and sheen,
Flowery ears that listen so keen,
Beautiful wreaths, Spear that care,
Blessing hands show mercy there,
Reigning the banner with Rooster mark
All worlds, Thy stomach that stock,
Beautiful lips, with a smile that clips,
Sylvan Valli and celestial Deivanaai
Standing on Your sides,
Beauteous Peacock at Your feet,
Eternal bliss, is this ever indeed!
By seeing you, I am moved, the Greatest Muruga,
reigning in the temple of London,
my salvation and senses are at Your divine feet! (4)
(5)
காவடி எடுக்கவோ சேவடி பதிக்கவோ
கந்தர் அனுபூதி சொல்லி
கரையத் துதிக்கவோ மறைகள் படிக்கவோ
கல்மனதில் உறுதி இல்லை
பூவடி பிரிக்கவோ மாலைகள் தொடுக்கவோ
பூசைக் குதவி செய்து
புனலாடி விரதங்கள் வனமேகுந் தருமங்கள்
புத்தியில் பிறப்ப தில்லை
நானடி மையானதும் நின்னுடமை யாவதும்
நலத்தினால் உணர்வ தாலே
நயப்பதுன் கடமையென் னடத்தையுன் கருணை
நானெதற்கு அஞ்ச வேண்டும்?
கோவடி வானவா குருபரா சண்முகா
குமரனே சுப்ர மண்யா
கண்டதால் உருகினேன் லண்டன்மா முருகனே
கதியெனது மதியில்உன் தாள் (5)
I do not follow the rites by taking Kavadi
or to surrender to Your divine feet
or render Kandaranuboothi to tender my heart!
Neither I commit to segregate flowers,
nor make garlands in the service of Your worship!
Nor I see in my intellect the need for bathing in holy rivers,
no fasting or penance!
However, the fact that I am Your slave
and that You own me are clear to me by Your grace.
So, to be kind to me is Your duty!
As all my actions are by Your blessing, why am I to fear?
You are the ruler, Teacher, O six faced Kumara, O Subramanya.
By seeing you, I am moved, the Greatest Muruga,
reigning in the temple of London,
my salvation and senses are at Your divine feet! (5)
(6)
நிறுத்தாத வழிதேடி நீரோடும் என்னூட
நீங்காத செல்வங்கள் தா
நிற்காமல் தக்கோர்க்கு எக்காலும் உதவிடும்
நேரான காருண்யம் தா
வருத்தாத வார்த்தையும் வாய்மையும் நேர்த்தியும்
வாழ்வினில் தூய்மையும் தா
வலிமையில் பணியவும் வடிவினில் கனியவும்
வரமாகக் கரமீது தா
பொருத்தாத போகத்தைப் பூசித்து யாசிக்கும்
புத்தியைச் சுத்தி கரித்து
புரிந்துள்ளே உன்னுரு தெரிந்துயரச் சந்நிதி
புலனாகும் ஞானத்தைத் தா
கருத்தான வேதத்தின் விருத்தான வேலனே
கடம்பனே கார்த்தி கேயா
கண்டதால் உருகினேன் லண்டன்மா முருகனே
கதியெனது மதியில்உன் தாள் (6)
Bless me to be an aidant with the flood of wealth
that shall pass to those who deserve;
Let my words hurt none;
with truthful and pious living as my discipline,
let me have humility in power, sweetness in conduct;
Give this boon on my hand.
For seeking unfitting material pleasures from You,
my eluded intellect is the cause, Please cleanse!
With such clarity, I should see You within myself;
Please give me that great knowledge and experience.
You are the true essence of the most profound Vedas,
O Vela, Kadamba and Kartikeya!
By seeing you, I am moved, the Greatest Muruga,
reigning in the temple of London,
my salvation and senses are at Your divine feet!