Eastham Murugan
இலண்டன் ஸ்ரீ முருகன் துதிப்பாமாலை
ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடேஸ்வரர் துதி
பங்கயத்தில் பூத்தாளைப் பதுமாவதித் தாயாரை
எங்கருத்தில் எந்நாளும் ஏற்பதனால் – நங்கையவள்
காலடியில் காதலினால் நான்கிடப்பேன் ஆதலினால்
மாலனவன் இதயம் புகல்
(Since Her abode is in the heart of Lord Venkateswara),I am thus in the heart of Lord Venkateswara!
திருமலையில் நின்றாளும் திருப்பாற் கடலாடும்
எழுமலையான் என்றோதும் நலனே – திருமதியாள்
பதுமா வதியாரின் பக்கத்தில் வெங்கடவன்
அதுதான் இனியென் கதி
ஸ்ரீ ஜெயதுர்க்கை துதி
காளி சூலி கடம்பவன வாஸினி
காத்யாயனி சங்கரி
காமாக்ஷி மீனாக்ஷி கருணா விலாஸினி
காசிவி சாலாக்ஷிநீ
மாரி மாலினி மாங்கல்ய சாக்ஷிநீ
மகிஷாசுர மர்த்தினி
மாதரசி பார்வதி மங்களப்ர ஹாசினி
மதுசூதனி சுந்தரி
நீலி நிரந்தரி நித்யஆ னந்தினி
நீலா பரணாசதி
நிர்மலி நிரங்கரி நிர்ப்பய விமோசனி
நீங்காத சந்தோஷினி
வாணி வல்லவி வரலக்ஷ்மி ரூபிணி
வைகரி சிவதுர்க்கைநீ
ஆதரி அம்பிகே அகிலாண்ட ஈஸ்வரி
அபயம்நீ துர்க்காம்பிகே
ஸ்ரீ குருவாயூரப்பன் துதி
கண்ணபிரான் கருணையினால் தூயதாய்ந்து
கலிதீரக் குருவுடனே வாயுசேர்ந்து
சொன்னபடி சிவனருளால் ருத்ரகீதை
சோபித்த பூலோகச்சொர்க்க மாகும்
அண்ணலரு குருவாயூர் அப்பன்நாமம்
அறிவுணரப் பாடுவதே முக்தியாகும்
நண்ணுவது நாராய ணீயமாகும்
நாராயணம் அதுவே நமச்சிவாயம்
by the divine instruction of Bhagavan Sri Kannan,
the most sacred place on the earth was chosen
by celestial angels Guru and Vayu;
That place was where Lord Parameswaran recited the Rudra Geetha;
That is Guruvayur, the heaven on earth.
By lovingly reciting the name of the Lord Guruvayurappan,
with focused mind-heart, we attain true liberation.
This is the essence of Narayaneeyam.
Its essence is that Narayanam is Namasivayam.
ஸ்ரீ ஐயப்பன் துதி
விரிசடை மகுடம் அணிந்து
வீரா சனத்தில் அமர்ந்து
கரிசனம் கண்ணில் கரந்து
கதிமணி கண்டம் பரந்து
அரிசிவ சுதனாய் வளர்ந்து
ஐயப்ப னாக மலர்ந்து
தரிசனம் தருங்கிரி சபரி
தர்மசாஸ்தா திருவடி போற்றி
Seated yogic Veerasana posture
Blissful and lovely glaze
Flowing eyes full of grace,
Eternal sound of the bell,
Adoring the neck as jewel,
Manifested as the divine son
When Hari and Hara in unison,
You are Aiyappan, the guiding Father
On the hills of Sabari, as the ruler
You offer the divine presence;
You are the Lord of Dharma,
My surrender at Your divine feet!
ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி
தூதனாய் வேதனாய்தோழனாய்வீரனாய்
தோற்றத்தில்அகன்றதிருவாய்
நாதனாய் நாரணன்நடத்திடும்அவதார
நாயகன்ராமன்அருகாய்
பக்தனாய் சித்தனாய்பரசிவனின்சக்தியாய்
பகவனாய்வாயுபெற்ற
முக்தனாய் முதல்வனாய்முனிவனாய்த்தனியனாய்
மூலமறிந்தகுருவாய்
நிற்பவா நிரந்தராநேயாஞ்சநேயனே
நிர்மலராமதாசனே
அற்புதா அனுமனேஅரிசிவனுருவனே
அடைக்கலம் அருள்கநீயே
As the best of pals and the victor gigantic,
Beautiful, blissful and ever near Sri Raman
who is the divine incarnation of Sri Narayanan;
You are the best devotee,Saintly, all powerful, Sivam,
O Lord, born as the Son of Wind God,
Liberated, Chief, serenely alone and all knowing Guru,
You stand as eternal, loving Sri Anjeneya!
You are the purest, O the disciple of Sri Rama!
O Wonderful Hanuman! You are both Hari and Siva!
Please give me the refuge!
நவக்கிரஹ துதி
சுற்றிவரும் கிரஹதேவர் சுற்றிக் காணச்
சூரணமாம் காரணனைச் சுகந்த வேலைப்
பற்றிவர நலம்படவே பற்றும் குற்றம்
பழுதுபடச் சுகம்வளர விளைந்த வேளை
நற்றுணையே நமக்கினிமேல் கவலை இல்லை
நடக்கின்ற காரியங்கள் ஜெயமே எல்லை
இற்றுவிழும் கிரஹதோஷ இன்னல் முற்றும்
இனியமனச் சாந்தியினால் இனிக்கும் சுற்றம்
In worship, let us go around the planets that go around for sure!
To do well, troubles and errors that bind us undone,
Peace be ! Uberty flourish! This is such a good time!
Guiding us with abundance of grace,
We have no dread or grief to trace
Deeds well done,
The harrowing shackles of the faltering Karma,
And any adversity of planetary impact –
Shall be all null and our troubles thus end!
May inly peace prevail in all souls!