Eastham Murugan
இலண்டன் ஸ்ரீ முருகன் துதிப்பாமாலை
கும்பாபி ஷேகம்
ஆலயம் என்பது ஆவது பூவுடல்
காலமும் தேசமுங் காணத் தெளிவது!
ஸ்தூல சரீரம் துப்புற வடிகள்
கால்கள் வாசல் கடந்திடும் படிகள்
அன்னப் பிராண அருமன ஞானப்
பின்னங் கடந்த பெருமகிழ் கோசம்
போலத் தெரிவது புரிமதில் பிரகாரம்
சாலச் சமைவது சக்கர வாயில்
கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு
வழக்க மாகும் வானம் என்றைந்து
வழியினை வைத்து வாழ்விது ஐம்புலன்
தழுவிய மாயத் தத்துவம் என்பது!
கோபுர மாகக் கூம்பிய சிகரம்
நேர்வுறுஞ் சென்னி நிமிர்த்திய நகரம்
சின்னதும் பெரிதும் சிலையெனும் சித்திர
வண்ணமும் மனத்தின் வடிவே தத்துவம்
கோபுரத் திடையே குறித்திடும் மாடம்
தீவிர மனத்திடை திகழ்ந்திடும் தியானம்
கணகண வெனஒலி களித்திடும் மணிகள்
தினசரி ஹரஹர திளைத்திடும் செவிகள்
தாண்டிடும் படிகள் தவிர்த்திடும் வழிகள்
தூண்டிடும் விளக்கு துளிர்த்திடும் அறிவு!
நன்று துவஜஸ் தம்பம் என்பது
நின்று நிலைத்து நேர்கொண் டழைப்பது
முதுகில் முனைத்து மூளைக் கிணைத்து
பொதுவில் நாடிகள் பூவென முளைத்து
மூலா தாரம் மூடிய சக்தியை
காலா தேசம் கடந்திடும் வழியை
எடுத்துக் காட்டி எழுப்பிய கம்பம்
படுத்துப் பணிந்து பக்தியில் டம்பம்
பகட்டு கோபம் பாவம் விடுத்து
புகட்டும் ஞானப் புறத்திடை செல்ல
காவல் நிற்கும் கற்பகத் தருவின்
ஏவல் ஏற்கும் இருபுறங் காக்கும்
துவார பாலகர் தூக்கிய ஈரல்
ஆவ தாவது அருளிய தேறல்!
கர்ப்பக் கிருஹமே காந்தம் இதயம்
அற்பச் சொற்களில் அடங்கா உதயம்
கடந்து உள்ளே கடவுள் என்றே
படர்ந்த ஜோதி பகவன் ஆதி
அப்பன் அம்மை அரும்பே ரீசன்
கப்பிய கணபதி கந்தன் மாலன்
என்றே துதித்து ஏற்றிடும் வடிவே
நின்றே பார்க்க நிலைத்திடும் ஆன்மா!
இதயத் துள்ளே இதனில் இதுவாய்
அவயத் துள்ளே அதனில் அதுவாய்
செய்யும் செயலில் சேரும் நினைவில்
உய்யும் வழியில் உணர்வில் அருளில்
இருத்திய ஆத்மா இதுவென இதுவென
பொருத்திய கடனே புண்ணியர் கடமை
என்பதைச் சொல்ல எழுந்தது கோவில்!
அன்புடன் நடத்திடும் கும்பாபி ஷேகம்
நமக்கு நாமே நடத்திடும் யக்ஞம்!
உனக்கு எனக்கென உருபயன் விட்டு
அன்பு கருணை அடுத்தோர்க் கிரங்கும்
பண்பு பக்தி பணியிலே யோகம்
உண்மை பொறுமை உயரிய நோக்கம்
வன்மை விடுத்த வாழ்வெனும் ஆக்கம்
ஏற்பத னாலே எல்லோர் மனமும்
சேர்ப்பது ஆலய சீரபி ஷேகம்!
கந்தா குமரா கார்த்தி கேயா
நந்தா குறமகள் நாயக நேயா
நகையென தேம்ஸெனும் நதிவடி வணிந்து
தகையெனும் லண்டன் தரணியில் சிறந்து
ஈஸ்ட்ஹாம் ஆலயம் இன்படை வீடாய்
ஆஸ்தா னமென அருளி அமர்ந்து
மாமயில் காலடி மணிக்கொடி சேவல்
தூமணி மாலை துயரறு செவ்வேல்
குறமகள் சுரமகள் கூட அணைத்து
நிற்பாய் முருகா நிமலா உந்தன்
பொற்பா தத்தை பூசித் ததனால்
திருவரு ளாக திகழ்ந்திடும் கோவில்
கும்பா பிஷேகம் குவலய நலத்தை
அன்பா லுயிர்கள் அடையும் வளத்தைத்
தரவே வருவாய் குருவாய் முருகா
சரவண பவகுரு சங்கரி பாலா!
சரணம் சரணம் சிவகுரு நாதா
சரணம் லண்டன் திருமுரு கேசா
Holy Consecration
Like the head held high, the Gopuram (tower) raises above the ground. It is adorned with innumerable sculptures and art, of varied sizes and colours, similar to active mind-heart filled with diverse desires, thoughts and memories. In the midst of these figures, the tower has interlude of void spaces only to illustrate that amid the jittery of thoughts, there is bliss within our mind-heart for the divine realisation. The bells that ring are to the ears that hear the primordial sound; the steps we skip as we enter into the temple denote the distractions we need to avoid in the pursuit of pious living. Inside there is lamp and light is at the tip of it’ s oil soaked thread – so is the illuminating intellect at the focused mind.
In front of the main entrance, there is a column with its base firmly rounded on the ground; pointing upwards, the column is decorated with flags and bells, and entwined with a holy cord – as if it identifies with the spinal column, sprouting from the base of the body, erecting the back, connecting to the brain and weaving infinite neural connections along its way. The holy cord indicates the main neural connections (Nadis) that carry the yogic energy – Kundalini. It is pregnant with the latent power on the realisation of which we conquer the boundaries of time and space. After prostrating in front of the column, without any burden of vain ego, anger and sin, we enter into the inner abode to witness the bliss.
At the doors of the Sanctum, where the true wisdom is revealed, are the two guarding angels, poised to grant entrance only to the deserving, similar to the pair of bulging lungs, filtering and protecting the life breath. Finally, the heart of the temple is the place where the omnipresent God is personified. This cannot be explained in mere words but only to be experienced with the dawn of realization that He is inside our hearts. Such is the light eternal who we adore as Bhagawan, Ancient, divine Father, divine Mother, Lord Parameswaran, Omnipotent Ganapathy, Kandhan, Vishnu and in other infinite forms and names. That is in our heart as the Aanma. It is there, within there, as everything; It is there and everywhere. In all deeds and thoughts, in all noble ways, we realize this bliss; by such resolute focus, we hold the spark of God within us and discharge our divine duty. Only to illustrate this eternal truth, temples are raised.
With love, the consecration or the holy bath we perform to the temple, is in essence the holy cleansing we do to ourselves; – Renunciation of petty thoughts, selfish desires and material motives – love and compassion to others – righteousness in our worldly and spiritual duties – commitment to truth – tolerance with acceptance – higher ideals of life that is devoid of violence and steadfast engagement to righteousness : by adhering to these principles and their practise, all our mind-hearts unite and we do the performance of the holy consecration to the temple and God therein.
O Kandha, Kumara, Karthikeya! With the consort of sylvan Valli and celestial Deivannai, in the beautiful city of London, which is garlanded by the fleeting Thames river, at the heart of East Ham town, is the temple that is Your divine abode. Deem this as Your eternal abode and please be seated to bless. With the beatific Peacock at Your feet, holding the banner of rooster, adoring wreath of beads and flowers and the holy Spear, with the consort of sylvan Valli and the celestial Deivannai, You are standing Muruga! O the Puritan! By worshipping Your golden feet, we are blessed; By Your grace we perform the holy consecration for the peace and welfare in the world. In this love, all shall prosper! To give this boon, Muruga, please come as my teacher!
Surrender to You, Saravanabava, son of Sri Shankari!
Surrender, Surrender to You, the divine teacher to Lord Siva!
Surrender, Surrender to You, London Sri Muruga.