Poem Collection-1
ஆண்மை
Read at ELAB
ஆளுமையே ஆண்மை அன்புடனே உறவாடிப்
பேணுமையே பெண்மை எனக்கொண்டால் – சூழுலகில்
பெண்மை ஆண்களுக்கும் பேராண்மை பெண்களுக்கும்
மென்மை போர்த்திருக்கும் மெய்
பேணுமையே பெண்மை எனக்கொண்டால் – சூழுலகில்
பெண்மை ஆண்களுக்கும் பேராண்மை பெண்களுக்கும்
மென்மை போர்த்திருக்கும் மெய்
உமையாள் தலைவன் உமைஆள் சிவனாய்
அமைவான் ஆள்உமை அதுவே – இமையாய்
ஆணோடு பெண்ணே அனுசரித் தினித்திருக்க
நாணோடு இழைத்த வீணை
மாரைநிமிர்த்தி மயிர்க்கூரை இதழ் பரத்தி
ஊரையடக்கும் உயர்வீரம் – கூரையிட்டு
குலத்தின் நலங்காக்க குனிந்துழைக்கும் செயல்பாடும்
நிலத்தில் ஆண்மையிது நிஜம்
ஈராக்
எதிரும் புதிரும் பதியும் பகையும்
விதியில் விதைத்து உயிரில் உதைத்து
சதியில் சறுக்கி மதியில் சுருக்கி
உதிரம் உதிரும் வதனம் விசனம்
பொதுவில் புவனம் அதுவென் றறியா
புதிரின் விடையை எதுவென் றறிய?
எதனைச் சொல்ல?
விதியில் விதைத்து உயிரில் உதைத்து
சதியில் சறுக்கி மதியில் சுருக்கி
உதிரம் உதிரும் வதனம் விசனம்
பொதுவில் புவனம் அதுவென் றறியா
புதிரின் விடையை எதுவென் றறிய?
எதனைச் சொல்ல?