Guru Sishya – Day 1
சீடனின் கவலை – குருவின் கருணை (1)
The Cause of Grief
Guru:
Come on! O Seeker! Why are you grieving?
Sishya:
What to say Sir! In thousands, doubts heaving!
Guru:
Lo! What are those! May you say so!
Perhaps we explore what we may do so!
Sishya:
Are those evil? Or good? Don’t know!
But grief and delusion, those do, I know!
Guru:
As you worry, and as I care,
May you hurry to say and share!
By sharing, you may see the shore!
In saying, grief won’t grow for sure!
Sishya:
Days not enough to unload my heart
Filled with so many wavering thoughts!
Guru:
So what! Let go! With the clouded mind
You only see, parading grief all kind!
Say it loud! By doing all around
May it end to bring the Truth to mend!
Sishya:
Sir! Peace no more! As the mind wants more!
‘Forever-lacking’ is the essence therefore!
Guru:
Is that a worry! Nay, it is a chance!
Say what’s in the mind doing that dance!
Sishya:
None so specific, I have nothing to rue,
Yet the chores of life that I have to do
Make me bored, the zeal wanes more!
Mind struggles with vain thoughts galore!
The Impurity of Mind
Guru:
Ho! Ho! It is Mud of your mind so deep!
Clogging, bringing lethargy to creep!
Sishya:
Deep mind-mud? O Teacher! What’s that?
Guru:
Those are sediments of sorrow in the mind!
The rut of suppressed desires, that remind!
The mind-mud is the what you left undone
Even in the tasks that are casually done!
It is your unfilled wants and mounting grief
Gathering dust without an outlet!
Not shared worried that are let to pile
With no one to brief or no one to bail!
The mind-dust of such anguish and guilt
Clouding your heart, as dark night!
Sishya:
Teach me Sir, How the mind gets dust!
Guru:
With all your wants that you don’t let out!
In what all you hear that causes hurt!
The pressure of all suppressed wants!
Peril of your envy on someone’s grants!
The guilt of failing to do right things!
Not praying to God, of all things!
Sishya:
I don’t envy, or hold such vice!
I am not even sure, not so wise!
But I am full of unending thoughts
This restlessness is what I got!
One day I do things with zeal!
Yet the next day, not bothered to deal!
Pondering such as “Is not life so short?”
Laundering in thoughts, my lethargy long last!
Facebook and such feeds so flaunting
Gossip, news and debates are daunting
The currency of time thus haplessly tossed
I miss out on all moments thus passed!
The Cure for the Mind
Guru:
Well then, in you, not any grief!
You are unfulfilled, even joy so brief!
Have I got your status right,
Is not Sadness of some sort, your plight!
Yet, may you know for sure its cure,
The dosage is in your heart that’s pure!
Sishya:
What is that Sir! How do I take
The dosage of cure, I seem to forsake!
Guru:
Seeing! Seeing! Seeing to snap
The Sealing! Sealing! Or Sealing entrap!
Sishya:
Way you say, Sir, like a maze and riddle!
May you please Sir, lead through the hurdle!
May the Peace I seek
Come from the words you speak!
Guru:
Listen with Care!
For your own welfare!
When the mirror shows your face
With the mist of dirt to lace
What do you do!
Sishya:
At once I do cleanse my face
To rid of all dirt and its trace!
Guru:
Even then let us suppose
Only a dirty face the mirror shows
Would you concede, for that reason
Your face is unclean all that season!
Sishya:
No Sir! I know, my face is cleansed!
So I conclude, the mirror not cleansed!
By wiping the mirror, spotlessly clean
I shall bring it back to its natural sheen!
Guru:
Then why are you asking for another way!
There is nothing more that I have to say!
When the mirror of mind is kept clean
The vision brings the world of sheen
Seeing all as those naturally are!
There is nothing fuzzy or eluding glare!
Only when your sight not straight
Bur flown by own judgement kite
What you see is what you judge
Your fancy notions and all that grudge!
Therefore may your mind-mud be gone!
In cleansing for its sheen, new ways dawn!
Sishya:
Oh Sir! Behold! I know not the means
To cleanse my mind or what it means!
May you give the cleaning broom
With the instructions on where to zoom!
(To be continued…..)
Mee. Ra
(1)
குரு:
வாவா சீடா வாடுவ தேனோ?
சீடன்:
ஆமாம் தேவா! ஆயிரங் கேள்வி!
குரு:
யாதாம் அவைகள்? கூறிடு கேட்போம்!
சீடன்:
தீதா நலமா தெரியா ததனால்
மனதுட் சலனம்! மதியிற் குழப்பம்!
குரு:
உனக்கது குடைச்சல்! எனக்கது உலைச்சல்!
கேள தனாலே கேடெது? இல்லை!
சீடன்:
நாளிது போதா! நானொரு தொல்லை!
குரு:
இல்லை! மனதில் இருளிருந் திட்டால்
தொல்லை! அதனால் துயரம் வருமே!
சொல்லில் விளக்கு ! சுகப்படு மாவென
மெல்ல விளக்கி மெய்ப்படு வோமே!
சீடன்:
நிம்மதி இல்லை! நிறைவென மனதும்
சொன்னது இல்லை! சுருக்கமு மிதுவே!
குரு:
இதுவா கவலை! இது அரும்வாய்ப்பு!
எதுதான் உனதுள் இருக்கெனக் கூறு!
சீடன்:
கவலைஎன் றில்லை! கடமைகள் செய்ய
உவகையும் இல்லை! ஓருவிதச் சோர்வு!
குரு:
ஆஹா! இதுவுன் அடிமனச் சகதி
போகா தடைத்த புழுதியின் அவதி
சீடன்:
அடிமனச் சகதி? அதுஎது தேவா!
குரு:
அதுவுன் மனதுள் விழும்பலத் துயரம்!
சின்னச் சின்ன செயல்களில் கூட
பின்னிய அழுத்தம்! பேசிடாக் கவலை!
உள்மனம் இறங்கி உருண்டது திரளும்!
பள்ளமுட் பதுங்கிப் பயமெழு விக்கும்!
சீடன்:
புரிந்திடச் சொல்க! புழுதியா! என்ன?
குரு:
கேட்கத் தயங்கிய கேள்வியும் புழுதி!
கேட்ட சொல் தாக்கின் கேட்டதும் புழுதி!
ஆசையை எழுப்பி அடக்கிடின் புழுதி!
அடுத்தோர் உயர்வை ஆற்றாப் புழுதி!
கடமையை மறந்த உறுத்தலும் புழுதி!
கடவுளை மறந்து இருத்தலும் புழுதி!
சீடன்:
எனக்குள் அப்படி ஏது பொறாமை!
எனினும் பற்பல எண்ண விதானம்!
உற்சா கத்தில் ஒருநாள் இருந்தால்
பிற்சா விதற்கேன் பெருநடம் என்று
கப்பிய சோம்பல்! கவலை மறந்து
ஒப்பிய முகநூல் கணிணியில் கிடந்து
யூகமும் வம்பும் உலகியல் தாமினிப்
போகமும் என்று பொழுதைக் கழித்தும்
காலச் சில்லறை கவிழ்த்துக் கொட்டிக்
கோலம் எடுத்தும் குறைவிட வில்லை!
குரு:
ஓஹோ! துயரென உமக்கெதும் இல்லை!
ஆனால் நிறைவும் அதிற்துளி இல்லை!
அப்படித் தானே! அதற்கொரு மருந்து
உப்பிய மனக்கிணற் றுள்ளெழும் ஒன்று!
சீடன்:
எதுவது ஐயா! எப்படி எடுத்துப்
பொதுவில் இத்துயர் போயிடச் செய்ய?
குரு:
பார்வை! பார்வை! பார்வை அதுதான்
போர்வை! போர்வை! போர்த்திடும் இருட்டு!
சீடன்:
பூடகம் வேண்டாம்! புரிந்திடச் சொல்வீர்!
தேடுமென் அமைதி தெளியச் சொல்வீர்!
குரு:
ஆடியில் உம்முகம் அழுக்காய்த் தெரிந்தால்
அதற்கென எதனை அடுத்துடன் செய்வீர்?
சீடன்:
ஓடிஎன் முகத்தை ஒருமுறைக் கிருமுறை
உரசி அலம்பி ஒப்பனை செய்வேன்!
குரு:
அப்புறமும் முகம் அழுக்கெனத் தெரிந்தால்
ஒப்பனை சரியாய் இல்லை என்பீரோ!
சீடன்:
எப்படி ஐயா! எனக்கென் சுத்தம்
ஒப்புறத் தெரியும்! ஒருக்கால் காட்டும்
கண்ணா டியதில் கப்பிய அழுக்கு
முன்னா டியதாய் முடிவில் தெரிந்து
துப்புற வாயதைச் சுத்தம் செய்வேன்!
குரு:
அப்புறம் என்னிடம் ஏனிந்தக் கேள்வி!
மனக்கண் ணாடி மகிமை மிகுந்தால்
தினக்கண் ணோடித் திளைக்கும் இன்பம்!
பார்ப்பதை எல்லாம் பழுதுறக் காட்டி
வேர்ப்பது உமக்குள் விளைமன எண்ணம்!
மனத்தைத் துடைத்து மடிந்திடும் புழுதிக்
கனத்தைக் குறைத்து கழிவழிப் பீரே!
சீடன்:
ஐயா மனதை அடியேன் துடைக்கக்
கையா லாகேன்! கற்பிப் பீரே!
மனதைத் துடைக்க மருந்திடு வீரே!
மாசறு துடைப்பம் தந்திடு வீரே!
(தொடரும்)
மீ. ரா