Guru-Sishya-Discourse-09

Guru Sishya – Day 9

சீடனின் கவலை – குருவின் கருணை (9)

(9)

What is Yoga in the term Karma-Yoga

Guru:

Karma and Yoga, together they blend,
To form Karma-Yoga, the path to transcend.
Since you ask of its deeper lore,
Let us learn, and wisdom restore.

The word “Yoga” is vast in its range,
Its meaning shifts, like the ocean’s change.
From the root ‘yuj’, it speaks of union,
A joining of paths, in perfect communion.

When paired with Karma, it takes new form,
Not just action, but the intent to transform.
It’s the way we act, with purpose and grace,
In every deed, finding the sacred space.

Thus, Karma-Yoga is more than mere task,
It’s the how and the why, the deeper ask.
Learned from teachers, with wisdom profound,
In their guidance, the true path is found.

Sishya:

O Guru, please explain to me,
The nuances you mention, so I can see,
In the intent and method of each deed,
What’s the true way to act, to succeed?

Guru:

Tell me, dear student, what’s your intent,
When you perform any act, what’s meant?
What drives your heart, what guides your mind,
In the actions you take, of every kind?
Intentions and Attitude to Action

Sishya:

To gain from my deeds, I own them, true!
Isn’t that the reason, for me and you?
Don’t we all act, for self-benefit’s sake,
In every step, for our own good we take?

Guru:

Is it only to own the fruits you strive,
That you do each act, to feel alive?
If this is your intent, I must say,
You are bound to weaken, along the way.

So pause, and reflect on all you do,
Examine your intent, clear and true.
First, appraise the action you’ve planned,
Is it right for you, in life’s great span?

The action must be rightful, and you must know,
You have the authority to let it flow.
Once confirmed, according to Dharma’s way,
Perform it with focus, without delay.

Give it your best, with effort whole,
But remember, the outcome’s not your control.
The result, shaped by nature’s grand plan,
Is beyond your grasp, in the hands of Ishvara’s span.

When the fruits of action come your way,
Accept them as gifts, without dismay.
This is the path, the way to align,
Your Karma as Yoga, pure and divine.

Sishya:

Are there more qualities you wish to share,
Beyond the two you’ve taught with care?

Action and Acceptance by Freewill

Guru:

Let me explain, my dear student true,
As you act with focus, and see it through,
Know that the outcome, its course and sway,
Is in the hands of Ishvara’s way.

Do not claim the fruits, nor the right to possess,
Whatever comes, accept with no distress.
Embrace the result, both joy and pain,
And learn from it, to refine again.

Sishya:

So you say, act without expectation,
And let go of desire for any affirmation?

Guru:

Aim, yes, for what your action must achieve,
On that, there’s no compromise, you must believe.
But the outcome, dear one, is not solely yours,
It’s the gift of God, who opens all doors.

So, do your duty with devotion and grace,
But accept the result, as Ishvara’s embrace.

Act as if you are paying the last debt

Sishya:

Can one act without seeking gain?
Is it truly possible, or all in vain?

Guru:

It may seem hard, I understand,
But let’s reflect with wisdom at hand.
Think of paying off a long-held debt,
When you make the last payment, no regret.

There’s no new benefit that you gain,
But the freedom from bondage, no more strain.
So, too, in every action you take,
If you do it as if a debt you forsake,

The mere completion sets you free,
And the result, a gift from God, you see.
Any outcome is grace, a bonus bestowed,
A blessing along your destined road.

Sishya:

So, every task is a service true,
A devotion to God, in all we do.
Is this why we say, work is worship,
In every task, we honor God’s script?

Oh, Sir! Not to argue, but to clear my doubt,
As Yoga, when can my actions count?

Does it take years of practice and toil,
Or can it be done without delay or spoil?
If only in old age I learn this art,
It would be a waste of this life, my heart!

Guru:

Understand, dear student, the key is clear,
When the foundation of Karma Yoga is here,
There comes sacrifice, as willingly given,
A heart detached, yet with effort driven.

When you act along the Karma Yoga path,
You’ve already made the sacrifice that lasts.
The key is to be dispassionate, true,
Act without attachment to what’s due.

Poised in action, unmindful of gain,
You’ll find your intellect free from strain.
When work is worship, the result, divine,
Accepted as God’s gift, pure and fine.

No quarrels rise, no failures wound,
The mind is pure, in peace it’s found.
That’s the goal, the treasure we seek,
A mind that’s clear, steady, and sleek.

For when the mind is freed from all strife,
It perceives the truth of this sacred life
In Advaita where the Self and God as One!
Your every step towards what is to be won!

(To be continued….)

Mee. Ra

கருமயோகம் என்பதில் யோகம் யாது?

குரு:

கருமத் தோடு யோகம் சேர்ந்தால்
கரும யோகம் ஆகிற தேனெனக்
கேட்பத னாலே கேள்விக் கொருவிடை
பார்த்திடு வோமது பயனிட லாமே!

இடத்திற் கேற்ப இயற்பொருள் மாறும்
தடத்திற் கொப்ப தகையுரு வாகும்
பற்பல முனிமொழிச் சொற்பொரு ளாகும்!
கற்பவ ரதிலொளி பெற்றுயர் வாகும்!

`யோகம்` என்பதன் சொற்பொருள் `சேர்க்கை`
`யுஜ்` எனும் வடமொழி வித்ததன் யாக்கை!
யோகம் கருமத் துடன்வரும் போது
யோகம் என்பது செயலிடும் நோக்கம்!

செயல்தான் கருமம்! சேர்ந்திடும் யோகம்
செயலின் நோக்கம்! செவிகொள் வாயே!
செயலும் செய்பவர் செயல்நோக் கெனவும்
இயல்வது கரும யோகமென் பாயே!

செயல் நோக்கமும், முறையும்

சீடன்:

நோக்கம் என்பதில் நுணுக்கம் என்ன?

குரு:

ஆக்கும் செயலால் ஆவது என்ன?

சீடன்:

செயற்பயன் என்னைச் சேர்ந்திடல் நோக்கம்!
செயலுற அதுதான் எமக்கிடும் ஊக்கம்!

குரு:

செய்பயன் எனக்கெனச் செய்வது தானா
செய்திடும் உனது செயலின் நோக்கம்?
மெத்தகு செயலும் மெலிவுறச் செய்யும்
அத்தகு நோக்கம் ஆய்வுறல் வேண்டும்!

விதியறக் கடனா, விலக்கென நெறிகள்
மதிபதித் தனவா, மறையறி வித்த
எதுவுனக் கான செயலெனக் காணல்
அதுவுனக் கான அடிப்படைக் கடமை!

உரியது கருமம் உமக்கெனத் தெளிந்து
நெறியுற அதனை நிகழ்த்திட விழைந்து
புரிவது தானுன் முதல்முதற் தகுதி!
சரிவர யோகமென் றாக்கிடும் உறுதி!

அடுத்தொரு தகுதி ஆற்றிடுஞ் செயலை
நடத்திடும் பொழுது நாமிதைச் செய்யக்
கொடுத்ததும் கடவுள், கோதற நடத்தி
முடிப்பதும் கடவுள், முனித்தன வெல்லாம்

ஆற்றிடல் ஈஸ்வர அர்ப்பணம் என்றே
நூற்றிடல் வேண்டும்! நுணுக்க மிதாக
ஏற்றிடும் கடனை இறைப்பணி யாக
மாற்றிட உழைத்தல் மற்றொரு தகுதி!

தக்கொரு செயலைத் தருமங் கருதி
ஒக்க நடக்கும் ஒருமுதற் தகுதி!
எக்கரு மத்திலும் இறைப்பணி யாகத்
தொக்கற முடித்தல் அதனொரு பகுதி!

சீடன்:

இவ்விரு தகுதிகள்! இதைவிட வேறெவை
அவ்விய மறச்செய லாக்கிடும் யோகம்?

செயல் உறுதியும், செயற்பயன் ஏற்றலும்

குரு:

செவ்விதம் உரைப்பேன்! செயல்முடித் தாலும்
எவ்விதம் எதுபயன் எவர்க்கெனும் தாகம்

அற்றிடச் செயலை ஆற்றுதல் தகுதி!
உற்றிடும் பயனில் உரிமை கொளாது
முற்றிலும் ஈஷ்வர ப்ரசாத உறுதி
நற்றிறைப் பயனை நயப்பது தகுதி!

முடிவினில் வருபயன் முழுதும் இறைவன்
மகிழ்வுறத் தரலென மனமுற ஏற்று
முகிழ்வதும் முக்கிய மாகிய தகுதி!
முடிவெதிர் பாரா முதிர்வத் தகுதி!

சீடன்:

எதைச்செய் தாலும் எதையும் எதிர்பார்த்
ததைச்செய் யாதே! அதுவா கருத்து?

குரு:

எதுவுன் செயலின் இலக்கது வாமோ
அதுவுன் செயலில் ஆழப் பதிந்து
பொதுவில் மனதுள் பொருந்தல் வழக்கு!
அதுநல் லிலக்கு! அதிற்பழி விலக்கு!

எதுவுன் செயற்பயன் எனவரு மாமோ
அதுவுன் உரிமை எனல்பெரு யிழுக்கு!
எதுவும் இறையருள் எனுமுணர் வாலே
எதுவந் தாலும் ஏற்றிடல் சிறப்பு!

சீடன்:

செய்வதில் பயனெனச் சிந்திக் காமல்
செய்வது எளிதா? செயலுரம் வருமா?

செயற்கடன் அடைத்தல்

குரு:

செய்வதைக் கடனெனச் செய்கிற போது
செய்பயன் செயல்முடிந் ததுஎனும் போது!

கட்டும் வீட்டுக் கடனின் தவணை
கடைசித் தவணை எனுமப் போது
கட்டும் செயலே கொட்டும் இன்பம்!
கடைசியில் வருபயன் எனக்கிடை யாது!

ஒப்புறக் கடனை உடனடைப் பதுவாய்
அப்படிக் கடமை ஆற்றுதல் இன்பம்!
கப்பிடுங் கடன்சுமை கழிகிற ததனால்
அப்புறம் வருபயன் பொருட்டா காது!

சீடன்:

செய்வதைக் கடவுட் சேவைய தென்று
செய்வதைச் சீராய்ச் செய்ய முயன்று
செய்தபின் வருவதைச் சீரருள் என்று
செய்பயன் அனுபவம் சேருக என்று

ஓதிடும் கரும யோகத் தறிவுரை
நீதியும் தந்தீர்! நெறியறிந் தேனே!

வாதிட அன்று! வளமறி வடைய
மீதிடும் அவ்விய மிரட்சியில் கேட்பேன்!

கருமம் யாவையும் கரும யோகமாய்
ஒருவன் மாற்றவும் உலகினிற் பந்நாள்
வருடம் ஆகுமோ! வருமோ அதிற்பயன்!
பருவம் போனபின் பழுத்திட லாமோ!

குரு:

யோகம் எனச்செயல் உருப்பெறத் தொடங்கின்
தியாகம் விளையும்! திருப்பெறத் தொடங்கும்!
போகம் விழையாப் பொருளிலும் விளையும்!
தேகம் மனப்புலன் தெளிவுமுண் டாகும்!

இறைப்பணி யாய்ச்செய லியற்றிடும் போதும்
இறைப்பய னாவதை ஏற்றிடும் போதும்
குறைப்படும் மனம்விடும்! குதூகல மாகும்!
குறைவிடும்! தெளிமதி கொள்வது மாகும்!

சுத்தப் படுமனம் சுகப்பட லாகும்!
பித்தப் பிறழ்விடப் பெருவறி வாகும்!
அத்துவி தப்பொரு ளறிவினிற் தாகம்
நித்தப் பொருளறி நிலையுரு வாகும்!

சீடன்:

ஏட்டுச் சுரைக்காய் எனயிது எனக்குக்
கேட்டும் செரிக்கா! கேள்வியின் ஞானம்
நாட்டும் உறுதி நமக்கெது என்று
ஊட்டும் ஐயம்! உழல்வுறு வேனே

ஆசைப் படுதல் அவலம் எனினும்
ஆசைப் படாமல் யாரே உள்ளார்!
விருப்பும் வெறுப்பும் விளைவதைத் தடுக்கும்
பொறுப்பும் எனக்குப் புரிபடவில்லை!

பயனில் ஆசை! பயனுறச் செய்யும்
செயலில் ஆசை! செயற்பயன் உரிமை
முயலும் ஆசை! முரணிடக் கோபம்
பயிலும் ஆசை பலவரு கிறதே!

குரு:

ஆசைகள் வருவது அதுயியற் கைக்குணம்!
ஆசைகள் வருவதை அடக்கிடல் கடினம்!
ஆசைகள் வரட்டும்! அதனடிப் படையில்
வீசிடும் சினத்துயர் விளைவா கட்டும்!

அவைகளை அடக்குதல் ஆகா தறிக!
அவைகளை விலக்குவ தாலறி வுறுக!

சீடன்:

அடக்குதல் என்பது ஆகா தென்றீர்!
விலக்குதல் அறிவால் ஆகும் என்பீர்!
துலக்கிடு வீரே! துயரிடும் ஆசை
கலக்கிடல் தவிர்க்கும் கதியளிப் பீரே!

மீ. ரா
(தொடரும்)

 Previous Dose

 Next Dose

Related Posts

Share this Post