Highgate Murugan
உயர்வாசற்குன்று ஸ்ரீ முருகப்பெருமான் துதி
ஆன்மவிவேகம்
திருவாய் புவனந் திகழ்வா யழகாய்
விழியாய் நின்று விழியால் அறியா
மொழியாய் நின்று மொழியால் உணரா
புலனாய் நின்று புலனால் அடையா
புவியாய் நின்று புவனம் அளந்த
மோனப் பொருளே முனைவோர்க் கருளும்
ஞானச் சடரே ஞாலத் தெளிவே
சைவம் வைணவ சமணம் பெளத்தம்
வையம் விரிந்த கிறித்தவம் இஸ்லாம்
மாயா தீதம் மலையோர் மந்திரம்
சாயா வேதம் சாங்கியம் தர்க்கம்
இயற்கை வணக்கம் இல்லா நாத்திகம்
பயிற்சி யாளர் பகுத்தறி வாதம்
தத்தம் வழியில் உத்தமர் யாரும்
நித்தம் நடக்கும் நெடுவழி ஓர்வழி
விக்ன விநாயகன் வேலன் காலன்
தட்சிணா மூர்த்தி தாரகன் மாலன்
கலைமகள் திருமகள் கயிலை மலைமகள்
பலவகை யான பக்தியும் ஓர்வழி
கடமையைச் செய்பலன் இறையரு ளென்ற
கர்ம யோகக் கலிநெறி ஓர்வழி
சயநல மில்லாப் பொதுநல நோக்கால்
பவபய மில்லாப் பாதையும் ஓர்வழி
மூச்சை அடக்கி முக்குணந் தவிர்த்து
பேச்சைக் குறைத்த பெருவழி யோகம்
வேதப் பொதுமறை சாரப் பொருளறி
வோதப் பயன்தரு ஞானமும் ஓர்வழி
எப்படி எங்கே எவ்வழி மூலம்
தப்படி மாயத் தடைகள் அகற்றி
பரமா னந்தப் பரவெளி காணுந்
திரமாய் ஞானத் திருநெறி காட்ட
எதிரில் தெரியும் எதிலும் விளங்கும்
புதிரில் புதிரே புரியாப் பொருளே
வித்தே வித்தில் விதைத்திடு வேளோன்
முத்தே முத்தின் முழமதிச் சுடரே
அன்னப் பிராண அருமன ஞானப்
பின்னந் திறந்து பேரா னந்தக்
கோசங் கடந்து கொலுவிருப் பதையே
பேசக் கேட்டுப் பேச்சறு பட்டு
கடந்து உள்ளே கலந்தே இருக்கும்
கடவுள் யாதெனுங் காட்சியைத் தந்து
நானே ஆன்மா நானே தெய்வம்
நானே அகன்ற சச்சிதா னந்தம்
நானே பிரம்மம் நானே பெருவெளி
நானே நீயெனும் நடைமுறை யறிய
அருள்வா யுனையே அடியேன் பணிவேன்
குருவாய் வருவாய் திருவேல் முருகா
குருவாய் வருவாய் திருவேல் முருகா
குருவாய் வருவாய் திருவேல் முருகா
குருவாய் வருவாய் திருவேல் முருகா
In the forms rare and in the formless
as the near minuscule or the remote expanse
You are the beatitude, all pervading grace!
You are – In the eyes, yet unseen by the eyes,
In the words, yet unknown by the words,
In the senses, yet untouched by the senses;
You are the world, transcending all its fold,
The extract of serenity, blessing in divinity,
You are the blissful wisdom,
The elixir of knowledge eternal!
In many paths such as Saivism or Vaishanavam,
Jainism or Buddhism, Wide spread Christianity or Islam,
Mysticism or the magical rituals,
Majestic Vedic methods and Rites
Sankhyam or such theories rational,
Nature-worship, negating Atheism,
Reductionists and thus many more,
Seekers seek You, To see this one way!
Another way is to adore You simply,
In whatever forms of sacred imagery!
Ganesan, Velan, Kalaan,
Dhakshinamurthy, Sakthi and Ambal
Devotion in perfect harmony!
By the Righteous duties, Unattached to its fruits
as Karma-Yoga, yet another way!
Selfless motives in serving other
Pledging the life and all its deeds
For common welfare is yet another way!
Controlled breathing, stilling the mind of inert qualities,
Silent in thoughts in the ways of Yoga
Indeed another way!
By listening, reciting, feeling and contemplating
on the Elixir of Vedanta is yet another way!
How, where and through which way, do I sway,
To keep the misdeeds and the darkness away,
To rid of my follies? How am I to know?
In the vastness of space, how am to search with efficiency,
To witness the eternal wisdom?
You are in front, in everything!
Mystic in the mystics, the incomprehensible elite
You are the Seed, seeding within the Seed,
Holder of the holy spear,
Pearl and the moon-like shine of the pearl are You;
Crossing beyond the five layers of this bodily abode,
Physical, Respirational, Mental, Intellectual
And the Blissful sheaths – You are seated within me!
That glorious seating is what is spoken (by the great seers);
By hearing such speech, I am speechless!
To enlighten me with the truth That God is
the One, within, with all
Pure and Single yet pervading all!
I am that Atma, I am the God,
I am the truth, bliss and eternal,
I am the Brahmam, I am the Space, I am You,
To realize this basic truth,
May You benign grace bless me, as I surrender to You!
Come as my Teacher, Muruga, the holder of the holy spear!
Come as my Teacher, Muruga, the holder of the holy spear!
Come as my Teacher, Muruga, the holder of the holy spear!
Come as my Teacher, Muruga, the holder of the holy spear!
Mee. Ra