Sri Kanchi Maha Periva – Prayer1

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட ஜகத்குரு சந்நிதி துதி

பராபரத்தின் பக்குவம் உதாரணத்து நற்குணம்
சதாசிவத்தின் தத்துவம் சதாஜபிக்கும் முக்கியம்
கனாவினாவின் நித்திலம் தனாலறிந்த நித்தியம்
மனோவிசாரம் மாற்றிடும் மஹாசந்நி தானமே

ஹரேமுராரி மாதவம் ஹராசிவாய மந்திரம்
ஒரேபரத்தில் ஆழ்த்தியே உயர்த்திடும் நிறைத்தவம்
நிகழ்த்திடும்  மகத்துவம் நெறித்திறம் ஜகத்குரு
உயர்த்தருள் விதைத்திடும் உயர்ந்த ஞானபீடமே

விதானகாஞ்சி  தந்ததான சிந்தையாளும் ஸ்ரீமடம்
நிதானஞான உதாரதான தயாளனான குருபரா
பூமிநாத சாமியான ஞானஆதி சங்கரர்
காமகோடி பீடமாள மீண்டெழுந்து வந்தவர்

பெரியவாளுக் குரியவேளாய் பெருமையான மாதவா
அரியஞானம் துரியமாகும் அமிர்தபானம் பருகியே
பொருத்தமான கருத்துயாவும் திருத்தமாக விருத்தியே
சிறப்பினாலே குருக்களான பொறுப்பிலாளும் மங்களா

ஜெயேந்திராதி சங்கராவி ஜயேந்திரஞான புங்கவா
பஜேபாத பங்கஜம்  பரமஞான சந்நிதி

Share this Post

Leave a Comment