Sri Kanchi Maha Periva – Namaskarams

புதியவரும் இளையவரும்
பூரணத்தை நோக்கிநடை
பதியவரச் செய்தருளும்
பரமகுரு நமஸ்காரம்!

மாகுருவே பெரியவரே மனிதகுலப் புனிதமுதே!
மறையறிவு தரவெழுந்த மாதவமே நமஸ்காரம்!
இதுபாதம் பணிஎன்று இடக்கரத்தால் காட்டினையோ!
புதுநாதன் இளையகுரு புண்ணியரைக் கூட்டினையோ!
ஆள்காட்டும் விரலாலே ஆளுமையைக் காட்டினையோ!
அறிவுமறை பரிவுணர்வார் அறிவிலொளி ஏற்றினையோ!
கூர்த்தவிழிக் கூர்மையிலே குறிப்பொருளைக் கூறினையோ!
குருசிஷ்யப் பரிவுமொழிக் கொள்கையினைக் காட்டினையோ!
பார்த்தவுடன் படமிதனால் பனிவிழியில் கோர்த்ததய்யா!
பரமகுரு! தயவுதரு! பாதமலர் நமஸ்காரம்!
நேர்த்தவமே! நிமிர்ந்தசிவ நிச்சயமே! நமஸ்காரம்!
நினைத்தாலே இனிக்கிறதே! நிர்மலனே நமஸ்காரம்!