Mount Kailash Parikrama (in Tamil)
கயிலை பயணக் கட்டுரை
மானசரோவர்
அச்சார மானசிவம் அசையாது பரசக்தி
உற்சாக மாயுலகம் உருவாக்கும் – இச்சா
சக்திஉரு மான சரோவரைத் தரிசித்தோம்
முக்திதர மூழ்கும் வரம்
அச்சார மானசிவம் அசையாது பரசக்தி
உற்சாக மாயுலகம் உருவாக்கும் – இச்சா
சக்திஉரு மான சரோவரைத் தரிசித்தோம்
முக்திதர மூழ்கும் வரம்
சிவகயிலை
நந்நீர் நதிமுடிந்த நாதன் பனிலிங்கம்
விண்மீன் மதிவடியும் விரிகயிலை – கண்முன்னே!
கண்ணீர் கரவக் காலடியால் பரிக்கிரமம்
நண்ணும் நமக்கே நலம்
நந்நீர் நதிமுடிந்த நாதன் பனிலிங்கம்
விண்மீன் மதிவடியும் விரிகயிலை – கண்முன்னே!
கண்ணீர் கரவக் காலடியால் பரிக்கிரமம்
நண்ணும் நமக்கே நலம்
பயணம்
சத்யம் பயணீட்டார் சேவையினால் எங்கட்கு
பக்தியில் பனிக்கயிலை நற்பயணம் – நித்தியன்
சிவரூப மானதிருச் சீர்கயிலை தரிசனத்தால்
பவபயம் இல்லை இனி
சத்யம் பயணீட்டார் சேவையினால் எங்கட்கு
பக்தியில் பனிக்கயிலை நற்பயணம் – நித்தியன்
சிவரூப மானதிருச் சீர்கயிலை தரிசனத்தால்
பவபயம் இல்லை இனி
நம் உறுதி
ஆய்ந்தறிய முடியா அருஞ்சிவத்தை அன்பாலே
தோய்ந்துணர முடியுமெனத் துலங்கியது – காய்ந்தமனம்
கனியுமினி, இயற்கை கலந்`துலகு வாழ்விக்கும்
இனியுலகு எல்லாம் சுகம்
ஆய்ந்தறிய முடியா அருஞ்சிவத்தை அன்பாலே
தோய்ந்துணர முடியுமெனத் துலங்கியது – காய்ந்தமனம்
கனியுமினி, இயற்கை கலந்`துலகு வாழ்விக்கும்
இனியுலகு எல்லாம் சுகம்