Sabarimalai Yatra 2017 Tamil
பரம்பொருள் ஸ்வாமி ஐயப்பனாக அருள்பாலிக்கும் சபரிமலைக்கு யான் முதன்முறையாக இந்த ஆண்டு சென்ற அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரை. இது யாத்திரைக்கான வழிகாட்டியாகவோ, வரைமுறை விளக்கமாகவோ எழுதப்படவில்லை. அதற்கான தகுதியும் எனக்கில்லை. வேதாந்தப் பார்வையில், சபரிமலை யாத்திரைக்கான தவமும், நியமங்களும் ஆன்மீக உயர்வுக்கான ஒப்பரிய வழியே என்பதே இக்கட்டுரையின் அடித்தளம். அத்துடன் விளக்கமுடியாத என் மகிழ்ச்சியையும், அளக்கமுடியாத அய்யன் திருவருளையும் பகிர்ந்து கொள்வதும் இக்கட்டுரையின் நோக்கம்.