79. ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
அத்தகைய ஆனந்தத்தில், மாணிக்கவாசகர் இசைத்த மாபெரும் உண்மையே சிவபுராணம் எனும் இந்நந்நூல்.
‘மிக்காய் நின்ற’ என்பதற்குத் தள்ளிவிட முடியாத தத்துவம் எனப் பொருள்.
உபநிடதங்கள், ஆத்ம விசாரணை எனும் தவத்திற்கு ஏற்ற ஒரு வழியாகக் காட்டுவது, ‘நேதி, நேதி’ அதாவது, ‘இது நான் அல்ல, இது நான் அல்ல’ என ஒவ்வொன்றாகத் தள்ளிக் கொண்டே இருத்தல்.
அப்படிச் செய்து, தள்ள முடியாத ஒன்றில் நம் சிந்தனை நிலைத்து நிற்க நேரிடும் என்றும், அத்தள்ள முடியாத ஒன்றே, ‘நான், நான்’ எனும் இடைவிடாத் தவத்தினால், ஒவ்வொரு உயிர்களுக்குள்ளும் எப்போதும் இருக்கும் ‘ஆத்மா’ எனவும் மறையுண்மையை இவ்வரி காட்டுகின்றது.
‘நான், நான்’ என நம்முள் இடைவிடாமல், நம் முயற்சியில்லாமல், நடந்து கொண்டேயிருக்கும் அந்த ஜபத்திற்கு ‘அஜபா ஜபம்’ என வேதங்கள் பெயரிடுகின்றன. கடவுளான பரமாத்மா எல்லா உயிர்களுக்குள்ளும் இந்த மஹா யோகமாகிய ஜபத்தை எப்போதும் செய்து கொண்டே இருக்கிறது. எனவேதான், சிவபிரானை மஹாயோகி என்றும் அழைக்கிறோம்.
80. தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
அதாவது, ‘ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்’ எனும் மறைபொருள் உண்மையினை, ‘ஏகன் அனேகன்’ என்று முன்பு அறிவித்த மாணிக்கவாசகர், அதனை மீண்டும் இங்கே நினைவூட்டுகின்றார்.
புலன், மனம், அறிவு என யாவற்றையும் கடந்த அவ்வுணர்வினைச் சொற்களாலும், வாக்கினாலும் எப்படி விளக்க முடியும்! அந்த ஆத்ம அனுபவம், ஒவ்வொருவரின் உள்ளத்தில் மட்டுமே விளங்கும் பேரின்ப நிலை! அது சொல்லில் விளக்க முடியாத சுகம்.
81. மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
அறிவியலும் அதன் கருவிகளும், மாறிக்கொண்டே இருக்க வேண்டிய உலகத்துக்குள்ளேயே அடக்கம் என்பதால், எல்லா அறிவியற் கண்டுபிடிப்புக்களும், மாற்றத்தால் தடுமாறிக் கொண்டே இருக்கும்.
எனவே காரணம்-காரியம் (cause and effect) எனும் வகையில் வெளியுலகங்களை ஆராய்ந்து, ‘இறைவன்’ இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன் என்றெல்லாம், முடிவில்லாமல் பலரும் வாதிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அப்படியாயின், எதுதான் முடிவு? இது அடுத்த வரியில் காட்டப்பட்டது.
82. தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
அத்தெளிவின் பயன், உள்ளத்துக்குள் எப்படி வருகிறது என்பதை அடுத்த வரிகள் காட்டுகின்றன.
83. ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
78. காக்கும் என் காவலனே காண்பரியப் பேர் ஒளியே
84. வேற்று விகார விடக்குடம்பின் உள்கிடப்ப