91. அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று br>
92. சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் br>
93. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் br>
94. செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் br>
95. பல்லோரும் ஏத்தப் பணிந்து.
‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து’ என்று மாணிக்கவாசகர் கூறியிருப்பதால், பாடலின் மறைந்திருக்கும் பொருளை, உணர்வினால் ஏற்பதே கருத்தெனக் காட்டப்பட்டது. எனவே, பொருள் உணர்தல் என்பது, சிவச்சிந்தனை கொண்டுள்ள ஒவ்வொருவரின் மன முதிர்ச்சிக்கும், பயணப் பயிற்சிக்கும் ஏற்ப மாறியிருப்பது கூடும்.
சொற்களின் பொருளை, பிழையில்லாமல், அதே சமயம், நம்முடைய தவத்திற்கு உதவி செய்யும் கைவிளக்காக மாறும்படியாக எடுத்துக் கொள்வது நலமே. அதனை விரும்பியே, மாணிக்கவாசகப் பெருந்தகை, அளப்பரிய சிவபுராணத்தை இவ்வாறு முடித்து, உணர்வுபூர்வமான பொருளைத் தேடுபவர்களுக்கும், ஒரு அன்பு அனுமதியினை அருளி இருக்கிறார்கள்.
அதனை நாம் கட்டளையாக ஏற்று ஆய்வதும், அதனால், அறிவில் முதிர்ந்து உய்வதும் நமது கடன்; அதுவே பிறவியில் நாமடையும் நற்பயன்.
திருச்சிற்றம்பலம்
இவ்வாறு ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
சிவபுராணம் எனும் திருமுறை நூலின்
மறைபொருள் விளக்கம் நிறைவுற்றது
90. தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே