Shivanandalahari – Verse 7
7 – சிவ நினைவால் பிறநினைவுச் சீர்மை அடி போற்றி!
करौ चाभ्यर्चायां श्रुतिरपि कथाकर्णनविधौ |
तव ध्याने बुद्धिर्नयनयुगलं मूर्तिविभवे
परग्रन्थान् कैर्वा परमशिव जाने परमतः ||७ ||
கரௌ சாப்4யர்சாயாம் ஸ்1ருதிரபி கதா2கர்ணன விதௌ4 |
தவ த்4யானே பு3த்3தி4ர் நயன யுக3லம் மூர்தி விப4வே
பரக்3ரந்தா2ன் கைர்வா பரமஶிவ ஜானே பரமத: ||7 ||
நிதம் உந்தன்புகழ் – தவறாதே
கரம் நிந்தன்துதி தினம் எந்தன்செவி
வரம் உந்தன்கதை – அதுபோலே
கணம் எந்தன்மதி சிவம் எந்தன்விழி
வசம் உந்தனுரு – அதனாலே
இனும் எந்தவிதம் பிறர் தந்தமொழி
பெறல் உந்தவரும் – பெருமானே
(7)
மனம் உந்தன் திருவடி மலரினைச் சூட, மொழி உனது புகழைப் பாட, கரங்கள் உன்னை ஆராதிக்க, செவிகள் நின் பெருமையைக் கேட்டிருக்க, எப்போதும் அறிவு உன்னை தியானித்து இருக்க, எனது (அக, புற) விழிகள் நின்னையே பார்த்துக் கொண்டிருக்க, (அவ்வுயரிய நிலையில் யான் இருந்து விட்டால்), அதற்குப்பின், எந்த வழியிலே யான் மற்ற எதனையும் அறிவேன்? (வேறு எதனை அறியவேண்டிய அவசியம் இருக்கிறது!)
குறிப்பு:
பகுத்தறிவு வாதங்கள் உதவாது என்று ஆறாம் பாடலில் நாட்டிய பகவான், இந்த ஏழாம் பாடலிலே, ஒருவேளை, தாம் படித்தது போதாதோ, இன்னும் பல நூல்களைக் கற்க வேண்டுமோ, என்று அஞ்சி, அதுவும் முடியாதே, அறிவுக்கு ஆயுதங்களான எல்லா உறுப்புக்களும், மனதும், மதியும் எப்போதும் சிவசக்தி நினைவிலேயே முழ்கிக் கிடக்கிறதே, யான் என்ன செய்வேன் என வியக்கிறார்.
பகவான் இப்பாடலில் ‘நயன யுகலம்’ அதாவது, தமது இரண்டு விழிகளும் சிவனுடைய உருவத்திலேயே திளைத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார். இவ்விரு விழிகளும், முகத்தில் இருக்கும் விழிகளாகக் காட்டாமல், அகவிழி (அதாவது மனதில் ஏற்படும் விழிப்புணர்ச்சி), புறவிழி (வெளிப்பொருளை மதியில் சேர்க்கும் விழிகள்) என்று பொருள் கொள்ளுமாறு, ‘எந்தன் விழி’ (என் விழி, தன் விழி) என மொழி பெயர்க்கப்பட்டது. அதானலே, மனதாலும், உடலாலும் சிவ விழிப்பால் இருத்தல் எனும் சீருண்மை புரிகின்றது. (7)