Shivanandalahari – Verse 27
27 – மனப்பொருளை ஏற்றென்னை மாற்றும் அருள் போற்றி!
गृहस्थे स्वर्भूजाऽमरसुरभिचिन्तामणिगणे |
शिरस्थे शीतांशौ चरणयुगलस्थेऽखिलशुभे
कमर्थं दास्येऽहं भवतु भवदर्थं मम मनः ||२७ ||
க்₃ருஹஸ்தே₂ ஸ்வர்பூ₄ஜா(அ)மரஸுரபி₄சிந்தாமணிக₃ணே |
ஶிரஸ்தே₂ ஶீதாம்ஶௌ சரணயுக₃லஸ்தே₂(அ)கி₂லஶுபே₄
கமர்த₂ம் தா₃ஸ்யே(அ)ஹம் ப₄வது ப₄வத₃ர்த₂ம் மம மன: ||27 ||
பூத்தநிதி ராசனுமுன் – அருகாலே
பொலியுந்தரு கற்பகமும் தேனுமதி அற்புதமும்
புகழுமணி நற்பலனும் – அதிபோகம்
தண்ணிலவு தலைவதியும் மன்னுமுயிர் நிலையுயரும்
தந்துதவுந் திருவடிகள் – அதனாலே
தருவதென எதையுமினித் தரமுடியும் ஆதலினால்
தந்தென்மனம் உந்தன்வசம் – மலையீசா
(27)
கைகளில் பொன்மலை, அருகே (ஏவலுக்கு) குபேரனாகிய நிதியரசன், இருப்பிடத்தில் கற்பகமரம், காமதேனு, சிந்தாமணி என (எல்லாம் அளிக்கும்) நற்செல்வங்கள், தலையில் இனிய குளிர்ச்சியைத் தரும் நிலவு, திருவடிகளில் எல்லாச் சுகங்களும் அளிக்கும் கருணை – என அனைத்தும் கொண்டு விளங்குகின்ற மலையரசே, உமக்கு யான் எதனைக் கொடுக்க இயலும்! (அதனால்), என்னுடைய மனமே நினக்குப் பரிசாக ஆகட்டும்!
குறிப்பு:
எல்லாமுமாய் இருக்கும் இறைவனுக்கு, நாம் எதனைப் பரிசாகக் கொடுக்க முடியும்? அவரிடம் இல்லாததுதான் என்ன! இருந்தாலும், அவரைத் தரிசிக்கும்போது, நம்முடைய அன்பளிப்பாக எதையேனும் கொடுக்க வேண்டும் அல்லவா?
இறைவனுக்குக் கொடுக்க நம் இதயத்தை விட வேறு எப்பொருளும் இல்லை. அப்படிக் கொடுத்துவிட்டால், நம்முடைய மனம் இறைவனுக்குச் சொந்தமாகிவிடும் அல்லவா? அதனால், அம்மனதும் தூயதாகிவிடும் அல்லவா?
கட்டுப்படாததும், கண்டதை எல்லாம் நினைத்து அலைவதுமான மனம், இறைவனுக்கு மட்டுமே என்று அர்ப்பணிக்கப்பட்டுவிட்டால் (அதாவது, அம்மனதில் எப்போதும் இறைவனையே இருத்திக் கொள்ளுவதால்), நிச்சயமாக, மனம் தூய்மையுற்று, காமதேனுவாய்க் கற்பகமரமாய்ச் சிந்தாமணியாய் உயர்ந்து, நல்லன என நாம் விழைவனவெல்லாம் நடத்திக் கொடுக்கும் இறையருட் செல்வமாக மாறிவிடும் என்பதே இப்பாடலின் உட்பொருள். (27)