Shivanandalahari – Verse 32
32 – திருநீல கண்டத் தெய்வம் அடி போற்றி!
दृष्टः किं च करे धृतः करतले किं पक्वजंबूफलम् |
जिह्वायां निहितश्च सिद्धघुटिका वा कण्ठदेशे भृतः
किं ते नीलमणिर्विभूषणमयं शंभो महात्मन् वद ||३२ ||
க்ஷ்வேல: கத₂ம் வா த்வயா
த்₃ருஷ்ட: கிம் ச கரே த்₄ருத:
கரதலே கிம் பக்வஜம்பூ₃ப₂லம் |
ஜிஹ்வாயாம் நிஹிதஶ்ச ஸித்₃த₄கு₄டிகா
வா கண்ட₂தே₃ஶே ப்₄ருத:
கிம் தே நீலமணிர்விபூ₄ஷணமயம்
ஶம்போ₄ மஹாத்மன் வத₃ ||32 ||
ஆனவிடங் காணுதகை – எதனாலே
ஓயவது வேயுறைய சேருகைய தேயடைய
சாருங்கரு நாவலதோ – எவ்வாறு
நாவிலது வேயுறவே நோவருகும் மூலிகையோ
நட்டகழுத் திட்டமணி – நந்நீலம்
யாவுமறி வேபரம ஆன்மநிலையே தருக
மூவுநிலையே மொழிக – சிவசம்போ!
(32)
தீயாய்க் கொழுந்து விட்டெரிவதும், எல்லாத் தேவர்களுக்கும் அச்சத்தைக் கொடுப்பதும் ஆகிய (ஆலகாலமாகிய) விஷம், எப்படித்தான் உம்மால் பார்க்கப்பட்டதோ! மேலும் கையில் அது அப்படித்தான் ஏற்கப்பட்டதோ! உள்ளங்கையில் வைக்கப்பட்டதே, அது என்ன கருநாவல் பழமா என்ன, உமது நாக்கில் வைக்கப்பட்டதே, அது என்ன, சித்த மருந்தா! கழுத்திலே நிறுத்தப்பட்டதே, அது என்ன நீலமணி கோர்த்த அணிகலனா என்ன! ஓ, பரமாத்மனே, சொல்லுக!
குறிப்பு:
யாராலும் எடுக்கவோ, அடக்கவோ, ஏற்கவோ, சேர்க்கவோ முடியாத ஒன்றை, பரமாத்மனாகிய இறைவனே ஆளமுடியும். அத்தகைய பொருள் இங்கே, ஆலகால விஷமாகக் காட்டப்படுகின்றது.
31ம் பாடல் குறிப்பின்படி, அவ்விஷம், ‘ஈரல்ல’ என எல்லாவற்றையும் ஒன்றாக்கி விடுகின்ற அத்வைதமாகிய பேரறிவுப் பெருந்தீ! அதுவே அறியாமை எனும் வியாதியினை அழிக்கின்ற பெருவிஷம். அதனை முற்றும் தெளியப் பார்க்கும் பார்வையும், அதனை மிக எளிதாக ஏற்கும் திறமையும், அப்பேரறிவே நோயறுக்கும் மருந்து என மாற்றும் வலிமையும், அம்மருந்து தேடி வருவோர்க்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்பதால், அதனைக் கழுத்திலே அணிந்திருக்கும் நல்லிரக்கமும் – இவை எல்லாமுமே இறைவனின் கருணை என்பதனையே இப்பாடல் உணர்த்துகின்றது. (32)