Shivanandalahari – Verse 49
49 – முனையன்புக் கொடிகனிந்த முக்தி மழை போற்றி!
स्थैर्योपघ्नमुपेत्य भक्तिलतिका शाखोपशाखान्विता |
उच्छैर्मानसकायमानपटलीमाक्रम्य निष्कल्मषा
नित्याभीष्टफलप्रदा भवतु मे सत्कर्मसंवर्धिता ||४९ ||
போ₄ஜாலவாலோத்₃யதா
ஸ்தை₂ர்யோபக்₄னமுபேத்ய
ப₄க்திலதிகா ஶாகோ₂பஶாகா₂ன்விதா |
உச்சை₂ர்மானஸகாயமானபட
லீமாக்ரம்ய நிஷ்கல்மஷா
நித்யாபீ₄ஷ்டப₂லப்ரதா₃
ப₄வது மே ஸத்கர்மஸம்வர்தி₄தா ||49 ||
விளையுமதி யானவித்து – வெளியாகி
திடவறிவுக் கோலைநட்டு அதிலுறுதி மாலையிட்டு
கிளைபலவுஞ் சூழபத்திக் – கொடியாகி
மிகவுமுயர் வானமிட்டுப் படுகைமன மேலுமுற்று
தகையுறவுந் தூயசத்துச் – செயலாலே
முகிழமலர்த் தீபமிட்டு முறைநெறிக ளேகியுற்று
நிறையுமுக்தி யானகனி – நிறைவேதா
(49)
சுகமான அமிர்த நீரால் நனைந்திருப்பதும், மலராகிய சிவனது திருவடிகளை விளை நிலமாக்கி முளைத்திருப்பதும், அதனருளால் உறுதியான அறிவு எனும் கம்பத்தினை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்திருப்பதும், (நற்செயலாகிய) பல கிளைகளாக விரிந்திருப்பதும், தெளிவான மனமாகிய படுகையின்மேல் படர்ந்திருப்பதுமாகிய (எனது) பக்தியாகிய கொடி, பிழையற்ற அறச்செயல்களால் நன்கு, ஒளியென வளர்ந்து, எனக்கு முக்தி எனும் கனியினை அளிக்க, (நினது கருணையாகிய மழை) விளங்கட்டும்.
குறிப்பு:
தெளிவான மனம், திடமான அறிவு இவ்விரண்டும் தர்மத்தின் வழியில் வாழ்வதால் மட்டுமே நாம் அடையும் பயன். பலன் கருதாப் பணியாகக் கடமைகளைச் செய்கின்ற கருமயோகத்தின் பலன் தெளிவான பலன் என்றும், உபாசனை எனும் அன்புடன் ஈடுபடும் தியானத்தின் பலன் திடமான அறிவு என்றும், பகவத்கீதை காட்டுகின்றது.
இவ்விரண்டும் கிடைப்பின், அதுவே பக்தி எனும் உயர்நிலை. அந்நிலையில், மனம் உயர்கிறது. மனதில் இருக்கும் எண்ணங்களும் உயர்கின்றன. அதனால், வீடு பேறு எனும் முக்தியாகிய புருஷார்த்தம் அல்லது நந்நோக்கு விளைகிறது. தர்மத்தின் ஆதாரத்தில் வளர்த்திய வாழ்க்கை, இப்போது ஞானத்தின் திசையில் திரும்புகிறது. இறைவனின் கருணை மழையினால், பக்திக் கொடியில் விளைவது முக்திக் கனியாகின்றது.
கருமம், தருமம், பக்தி, ஞானம் என எல்லா வழிகளையும் சுட்டிக்காட்டி, நல்வாழ்க்கைக்கும், நன்முக்திக்கும் துணை சேர்க்கிறது இவ்வினிய பாடல். (49)
48 – சித்தம் தெளிவிக்கும் சிவஞானச் சுனை போற்றி!
50 – மல்லிகார்ஜுன லிங்க மாவடிவம் தாள் போற்றி!