Shivanandalahari – Verse 56
56 – நல்லான் நவினுலகை நாட்டுவான் அடி போற்றி!
सत्यायादिकुटुम्बिने मुनिमनः प्रत्यक्षचिन्मूर्तये |
मायासृष्टजगत्त्रयाय सकलाम्नायान्तसंचारिणे
सायं ताण्डवसंभ्रमाय जटिने सेयं नतिः शंभवे ||५६ ||
காத்யாயனீஶ்ரேயஸே
ஸத்யாயாதி₃குடும்பி₃னே முனிமன:
ப்ரத்யக்ஷசின்மூர்தயே |
மாயா ஸ்ருஷ்ட ஜக₃த்த்ரயாய
ஸகலாம்னாயாந்த ஸஞ்சாரிணே
ஸாயம் தாண்ட₃வஸம்ப்₄ரமாய ஜடினே
ஸேயம் நதி: ஶம்ப₄வே ||56 ||
அற்கும்திரு முப்புரமூறிய
நற்கும்அருள் நற்றுமைவூதிய – நலனாகி
கற்கும்திரு மெய்பொருளீதென
முற்றும்முது நற்குடும்பீயென
பொற்புங்கவ ருற்றவரூள்மதி – புலர்வோனே
சிக்கும்பெரு மாயையில்மூவுல
கொக்கும்படி ஆளுமையாமறை
நிற்கும்நடு நாயகனாய்சடை – முடியாகி
அற்கும்பக லாகிய மாலையில்
சொக்கும்படி ஆடுகதாண்டவம்
கற்றுன்னது காலடியேதுணை – சிவசம்போ
(56)
நிலையானதாய், முக்குணங்களின் வெளிப்பாடுகளுக்கும், மூவுலகங்களுக்குள்ளும் ஆதாரமானதாய், உமையன்னையின் நற்றவப் பயனாய், உண்மையாய் இருப்பதுவாய், பிறப்பற்ற முதற் குடும்பத்தினனாய், நல்லறிவும் தவமும் உடைய முனிவர்களின் மனதில் தூய அறிவாக விளங்குபவனாய், மாயையினைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து, மூவுலகங்களையும் படைத்தாள்பவனாய், வேத முடிவில் நாயகனாய், மாலைப் பொழுதில், சடை முடிதவழ ஆனந்த நடனம் ஆடுகின்ற சிவசம்போ, உன்னையே பணிந்து வழிபடுகிறேன்.
குறிப்பு:
ஆடுவதால் அசைகிறது அகிலமெல்லாம் என்பதனால், ஆடுவான் ஆட்டத்தை அடிபணிந்து இரசிப்பதுவே நமது பயன். இதுவே இப்பாடலில் காட்டப்படும் பொருள்.
நிர்க்குணமாகிய பரம்பொருளே, தனது சக்தியால், முக்குணங்களையும், அதன் வேறுபாடுகளாக, பல கோடி உலகங்களையும், உயிர்களையும் ஆக்கி, வளர்த்து, அழித்து, அருள் காட்டி வருகின்றது. அதற்கு ‘சிவ சக்தி ஐக்கியம்’ எனும் நிலையே முதற் குடும்பமாகக் கருதப்படுகின்றது.
ஶிவானந்த₃லஹரீ முதற் பாட்டில் காட்டியபடி, அப்படி சிவனும் சக்தியுமாக விளங்கும் பரம்பொருளின் வெளிப்பாடே, உலகங்களை வளர்ப்பது. அதுவே ஶிவானந்த₃லஹரீ எனும் ஆனந்த வெள்ளத்தை, உணர்வோர் மதியில் ஊற்றுவிப்பது. அப்பரம்பொருளின் ஆனந்த நடனம் வேதாந்தங்களில் உண்மையாகவும், வெளிப்படும் உலகங்களின் மாற்றங்களுக்கு எல்லாம் ஆதாரமாகவும் விளங்குகிறது.
இதுவே பாடலின் முக்கியக் கருத்து ஆகும். (56)