Shivanandalahari – Verse 70
70 – எளிதாகி இனிதாகி ஏற்பான் அடி போற்றி!
वरिवसितुं सुलभः प्रसन्नमूर्तिः |
अगणितफलदायकः प्रभुर्मे
जगदधिको हृदि राजशेखरोऽस्ति ||७० ||
வரிவஸிதும் ஸுலப₄: ப்ரஸன்னமூர்தி: |
அக₃ணிதப₂லதா₃யக: ப்ரபு₄ர்மே
ஜக₃த₃தி₄கோ ஹ்ருதி₃ ராஜஸே₂க₂ரோ(அ)ஸ்தி ||70||
நுட்புண ரும்மறி – வெளிதாக
அர்ச்சித முந்துதி அத்தனை யுந்தரும்
அற்புத னுந்திரு – வடிவாகி
நற்பய னுந்தர முற்பட னும்வெகு
பற்பல னுந்தரு – பதியாகி
கற்பித மும்புவி யப்புர மும்மதி
யுற்சிர னேமன – முறைவாயே
(70)
வெளியிலும், மனதின் உட்புறமாகவும், தெளிவான அறிவால், மிகவும் எளிதாகத் துதித்து வணங்குவதற்கு ஏற்றவராகத் தோற்றம் அளிக்கும் பரசிவனே, தாங்கள் நல்லருள் தருவதற்கு நாட்டம் உடையவராகவும், கணக்கிலடங்காத நற்பயனைத் தருபவராகவும், மாறக்கூடிய உலகங்களை எல்லாம் கடந்து இருந்து ஆள்பவராயும், பிறையினைச் சிரமணிந்த பெருமானாயும் விளங்குபவர். நீவிர், எனது உள்ளத்துள் உறைய வேண்டும்.
குறிப்பு:
படைப்பு என்றால், படைத்தவன் படைத்த பொருளுக்கு அப்பால் இருப்பதுதானே விதி! அதனால், இறைவன் எல்லா உலகங்களையும் தாண்டி இருப்பவன் என்பதே பொருள். அந்த இறைவனை நாம் எப்படி உலகங்களை எல்லாம் தாண்டி அடைய முடியும்?
இங்கே தான் படைப்பின் தத்துவம் உணரப்படவேண்டும். படைக்கப்பட்ட பொருள், படைத்தலாகிய செயல், படைத்தவன் ஆகிய மூன்றுமே இறைவன் என்பதால், எல்லாப் படைப்புக்களுக்கு வெளியேயும், அதே சமயம், எல்லாப் படைப்புக்களுக்கு உள்ளேயும் இறைவன் இருக்கின்றான்.
பிறையணிந்த பெருமானின் பரவொளியே வெளியிலும், உள்ளேயும் எல்லாமுமாய் இருப்பதாக நாம் உணர்ந்து, அதனால் ‘யாதும் சிவமயம்’ என வியந்து, எல்லோரிடத்தும், எப்பொருளிடத்தும் அன்பு மட்டுமே காட்டி நாம் வாழ முடியும். வாழ வேண்டும். (70)