Shivanandalahari – Verse 93
93 – கண்ணில் களித்தாடும் கற்பகத்தின் அடி போற்றி!
सोमकलाधरमौलौ
कोमलघनकन्धरे महामहसि |
स्वामिनि गिरिजानाथे
मामकहृदयं निरन्तरं रमताम् ||९३||
कोमलघनकन्धरे महामहसि |
स्वामिनि गिरिजानाथे
मामकहृदयं निरन्तरं रमताम् ||९३||
ஸோம கலா-த4ர-மௌலௌ
கோமல க4ன-கந்த4ரே மஹா-மஹஸி |
ஸ்வாமினி கி3ரிஜா நாதே2
மாமக ஹ்ரு2த3யம் நிரந்தரம் ரமதாம் ||93||
கோமல க4ன-கந்த4ரே மஹா-மஹஸி |
ஸ்வாமினி கி3ரிஜா நாதே2
மாமக ஹ்ரு2த3யம் நிரந்தரம் ரமதாம் ||93||
கலைக ளாடத் தலையில் சூட
நிலவு லாவும் – நெறியனை
கருமை யான முகில்க ளாடும்
கழுத்த னான – விருத்தனை
உலக நாத மலையின் மாது
உமைய னான – ஒருத்தனை
ஒளிய னான பரனை யானும்
ஓரொரு நாளும் – களிப்பனே!
(93)
நிலவு லாவும் – நெறியனை
கருமை யான முகில்க ளாடும்
கழுத்த னான – விருத்தனை
உலக நாத மலையின் மாது
உமைய னான – ஒருத்தனை
ஒளிய னான பரனை யானும்
ஓரொரு நாளும் – களிப்பனே!
(93)
கலைகளைத் தருகின்ற பிறை அணிந்த பெருமானே, கருமேக நிறத்தில் கழுத்து உடையவனை, ஒளி மயமானவனை, உலக நாதனை, மலை மகளான பார்வதியின் மணாளனை, என் உள்ளம் எப்போதும் நினைத்து மகிழட்டும்.