Shivanandalahari – Verse 98
98 – கவிதைஇளங் கன்னியெனக் கலந்தோன் அடி போற்றி!
सद्भिःसंस्तूयमानां सरसगुणयुतां लक्षितां लक्षणाढ्याम् |
उद्यद्भूषाविशेषामुपगतविनयां द्योतमानार्थरेखां
कल्याणीं देव गौरीप्रिय मम कविताकन्यकां त्वं गृहाण ||९८ ||
ஸாது₄வ்ருத்தாம் ஸுவர்ணாம்
ஸத்₃பி₄:ஸம்ஸ்தூயமானாம் ஸரஸகு₃ணயுதாம்
லக்ஷிதாம் லக்ஷணாட்₄யாம் |
உத்₃யத்₃பூ₄ஷாவிஶேஷாமுபக₃தவினயாம்
த்₃யோதமானார்த₂ரேகா₂ம்
கல்யாணீம் தே₃வ கௌ₃ரீப்ரிய மம
கவிதாகன்யகாம் த்வம் க்₃ருஹாண || 98 ||
தகையு முளவாகிப் – பொன்மேனி
மிகையி லுயர்வாகி முனியர் உடனாகி
இனிய குணமாகி – கனியான
நெறியு முறையாகி மிளிரும் அணியாரம்
ஒளிரப் பொருளோடுங் – கரமாகி
நிறையு சுகமாகி உரையும் கவிமாது
நினது துணையாகி – நிலைவீரே
(98)
இறைவா, உமை மணாளா, எல்லா அணிகளும் அணிந்தவளும் (அணி இலக்கணம் அமைந்து), நந்நடை உடையவளும் (அழகிய சந்த நடைகள் கொண்டதும்), பொன்னான உடலுடையவளும் (பொருளால் ஒளி பொருந்தியதும்), நல்லோரால் சூழப்பட்டவளும் (நல்ல மொழித் தகைமை கொண்டதும்), இனிய குணமுடையளும் (இனிய பொருளுடையதும்), கனிவும் உயர் ஒழுக்கம் கொண்டவளும் (இனிமையும் ஒழுங்கான இலக்கண அமைப்புக்கள் கொண்டதும்), ஒளிரும் அணிகலனால் அலங்கரிக்கப்பட்டவளும் (எதுகை, மோனை என மனம் கவரும் சொல்லணிகளால் சிறப்புற்றதும்), முறையான அடக்கமுடையவளும் (மிகை இல்லாமல் இருப்பதும்), செல்வ ரேகைகளைக் கரத்தில் கொண்டவளும் (பொருட் கோடினைக் காட்டுவதாகவும்), மங்களமானவளாக இருப்பவளும் (சுகமானதாக உரைக்கப்படுவதும்) ஆகிய உமையாகிய மங்கையை (எனது கவிதையாகிய கன்னியை) மணந்து (ஏற்று) நிலைப்பீராக!
குறிப்பு:
இப்பாடல் நல்ல கவிதை, ஒரு நல்ல நங்கைக்கு ஒப்பு எனக் காட்டி இறைவனிடம், இப்பாடல்களைப் பரிந்து ஏற்க வேண்டுகின்றது. நல்ல கவிதை என்பது குவிந்த மனத்தாலும், குறித்த நோக்காலும், தெளிந்த அறிவாலும், பரந்த நோக்கமுடனும், பொதுப் பயனுக்காகப் படைக்கப்படுவது. அதில் இறைத்தன்மை இருப்பது இயல்பு. (98)