ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம:
அத₂ ப்ரத₂மோ(அ)த்₄யாய: . அர்ஜுனவிஷாத₃யோக₃:
பாகம் 1 – அர்ச்சுனன் துயரம்
உரையாடலில் ஸ்ரீ பகவத்கீதை பாகம் – 1
1 (குருட்சேத்திரத்தில் போர் ஆரம்பிக்கிறது. அந்தகன் திருதராட்டிரன் சஞ்சயன் மூலமாக நடப்பதை நடந்தவாறு அறிய விரும்புகிறான்.)
ஆண்டவர் சாட்சியாக அணையு போர் முகத்தே
நீண்டதோர் செயலை எல்லாம் நிகழ்த்திடும் சஞ்சய னையன்
வேண்டுந் திருதராட் டிரனுக்கு விளம்பிட முயலு கின்றான்
த₄ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: .
மாமகா: பாண்ட₃வாஶ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய (1-1||
திருதராட்டிரன் கேள்வி
2 (1-1) அறநிலமாகிய குருநிலத்தில் திரண்ட பாண்டவர்களும்,நம்மவர்களும் என்ன செய்கிறார்கள்? சஞ்சயா, நடப்பதைச் சொல்.
தரம்பெறத் தகுதி இல்லாத் தயக்கத்தால் விழியில் நற்கோ
திறம்பெறப் பொருது வோர்கள் தீயெனப் புறப்பட் டாரா
நிறம்எது நிலமை எதுவாய் நீபுகல் சஞ்சய என்றான்
3 (கண்ணனின் தூது தூதுமறுத்ததால் வரும் துயரங்கள்தான் எத்தனை? )
சூதுவிளை யாடும் கூடம் சுற்றிடும் பேய்கள் கண்ணன்
துாதுகுறை யாகிப் போனால் துன்பமே ஆகும் என்ற
வாதுஉணர் சஞ்சய னையன் வழக்கினைக் கூறு கின்றான்
த்₃ருஷ்ட்வா து பாண்ட₃வானீகம் வ்யூட₄ம் து₃ர்யோத₄னஸ்ததா₃ .
ஆசார்யமுபஸங்க₃ம்ய ராஜா வசனமப்₃ரவீத் || 1-2||
சஞ்சயன் உரை
4 (1-2) பாண்டவரது படையைப் பார்வையிட்டுவிட்டுத் தனது குருவாகிய துரோணர் அருகில் தனது தேரை நிறுத்தி, துரியோதனன் ஆற்றாமையினால் அவரைக் கூவி அழைத்துச் சொல்கிறான். துரியோதனன் துருபதனும் துரோணரும் எதிரிகள் என்பதை நினைவுபடுத்தும் வகையாக, திருஷ்டுத்யுமனை துருபதனின் பிள்ளை என்பதைச் சொல்லி
மேவது பார்க்க எண்ணி மெல்லத்தன் தேரைத் தள்ளிப்
பாவல னாவான் துரோணர் பக்கத்தில் நிறுத்திச் சொல்லும்
நாவது நயந்த வார்த்தை நவிலுவேன் அறியக் கேட்க
வ்யூடா₄ம் த்₃ருபத₃புத்ரேண தவ ஶிஷ்யேண தீ₄மதா || 1-3)
5 (1-3) துரோணரே, உமது சீடரன துருபதனின் மகன் யூகியின் படை அமைப்பைப் பாருங்கள் என்று தமது குருவான துரோணரைக் கூவி அழைக்கிறான்.
அருமையாம் ஐவர் வீரர் அமைப்பினை வந்து காண
குருவெனுந் துரோணர் தம்மைக் கூவியே யழைத்த மூடன்
திருதராட் டினனின் மூத்த தீயினை ஒத்த மைந்தன்
யுயுதா₄னோ விராடஶ்ச த்₃ருபத₃ஶ்ச மஹாரத₂: (1-4)
6 (1-4) இங்கு யுயுதனன், விரதன், தேர் ஓட்டத்தில் சிறந்த துருபதன் என வில்லாளிகளுக்குத் தலவர்களுமான வில்விற்பன்னர்களும் அர்ச்சுனனையும் பீமனையும் நிகர்த்தவராயிருக்கிறார்கள்.
வீர விரதன் யுயுதனன் விரைதேர் அதிபன் துருபதன்
ஆக வலியர் ஆனவர் ஆர்ப்ப ரித்துப் போர்க்களம்
வேக மாகக் காரிய வினை முடிக்க நிற்கிறார்
புருஜித்குந்திபோ₄ஜஶ்ச ஶைப்₃யஶ்ச நரபுங்க₃வ: (1-5)
7 (1-5) திருஷ்டகேது, கேசிதானம், வீரனான காசிராஜன், புருஜித்,குந்திபோஜன், சைப்யன் எனும் சிறந்தோர் இருக்கிறார்கள்.
திசையெலாம் நின்ற காட்சி திருட்டகே துகேசி தானம்
இசையுடன் காசி ராசன் இன்னுமோர் தீரன் சைப்யன்
வசையிலாக் குந்தி போதன் வல்லவன் புருசித் தோடு
ஸௌப₄த்₃ரோ த்₃ரௌபதே₃யாஶ்ச ஸர்வ ஏவ மஹாரதா₂: (1-6)
8 (1-6) வலியன் உதாமன்யு, ஆண்மை மிக்க உத்தமெªஜஸ் எனும் சுபத்திரையின் மகன் அபிமன்யு மற்றும் திரௌபதியின் மக்கள் அனவரும் தேர் வல்லுனர்கள்.
வில்லவன் உத்த மௌஜஸ் வீரராய் திரௌபதி உற்ற
பிள்ளைகள் எல்லாம் வல்லர் பேருடை தேர்களம் சுற்ற
வெல்லுவர் போலே வீரம் விளம்பிட நிமிர்ந்து நின்றார்
நாயகா மம ஸைன்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்த₂ம் தான்ப்₃ரவீமி தே (1-7)
9 (1-7) அந்தணரான துரோணரே, மற்றும் உள்ள வீரர்களே, நம்முடைய படைகளையும், எதிரிகளுடைய பெயர்களையும் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் அதனால் சொல்வேன். (கேட்டு எதிரிகளை அழியுங்கள்.)
வரைமுறை ஏற்பா லிங்கே வந்திட்ட வீரா சேனா
மறுமுறை நிலைப்ப தறியா மரணத்தை அஞ்சாப் படைகாள்
ஒருமுறை பெயரைக் கேட்பீர் ஒழிப்பீர் பகையைத் தூராய்
அஶ்வத்தா₂மா விகர்ணஶ்ச ஸௌமத₃த்திஸ்ததை₂வ ச (1-8)
10 (1-8) நம்முடன் பீஷ்மர், கர்ணன், விரோதிகளை வெல்லும் கிருபன், அசுவத்தாமன், சயரதன், சோமதத்தன் என்று வலியோர் உள்ளனர்.
பூவினி தான துரோண புத்திரன் அசுவத் தாமன்
சாவினி தென்ற தறியா சயரதன் சோம தத்தன்
மேவினி களத்தே நின்று மெய்சிலிர்த் திருப்ப தென்ன?
நானாஶஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்₃த₄விஶாரதா₃: (1-9)
11 (1-9) இன்னும் பலவீரர்கள் என்பொருட்டு உயிரையும் கொடுக்க முன்வந்து, பலவிதமான அயுதங்களுடன் யுத்தத்தில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.
தாவியே பாட்டன் வள்ளல் தனயன் உறவு மற்றும்
மேவியில் உள்ள வீரம் மேம்பட்ட பலரும் இன்று
கூவிநிற் கின்ற காட்சி குறிப்பதே உமது மாட்சி
பர்யாப்தம் த்வித₃மேதேஷாம் ப₃லம் பீ₄மாபி₄ரக்ஷிதம் (1-10)
12 (1-10) பீஷ்மரால் காக்கப்படும் படை போதுமானதாக இல்லை (அளவற்றது?). பீமனால் காக்கப்படும் படை போதுமானது (அளவுக்கு அடங்கி உள்ளது?) (துரியோதனன் ஒருபுறமும் தமது படையை அளவற்றதாக உயர்த்தியும், அதே சமயத்தில் பொருத்தமற்றதாகப் பயந்தும் வியக்கிறான்.)
போது மானது எல்லை போர்த்திய பீம சேனை;
போது மோஇது! இவண் போருக்கு எனவே மனம்
மோது வோன் இவன் மொழிகின்ற துரியோ தனனே
போர்ப்பறிக்க வந்தது நாமே போராத காலத் தாலே
நூற்பறித்த துகிலைப் போலே நுணுங்கிய புழுவைப் போலே
பார்ப்பறித்த படைகள் தானே பாண்டவர் பக்கம் காண்பேன்
பீ₄ஷ்மமேவாபி₄ரக்ஷந்து ப₄வந்த: ஸர்வ ஏவ ஹி (1-11)
13 (1-11) எனவே, எல்லோரும் தம்முடைய இடத்தினை ஏற்று, பீஷ்மரையே காக்கக் கடவீர்.
ஏகட்டும் வெற்றி இன்று எதிரிகள் தோல்வி உற்று
சாகட்டும் நமது பீஷ்மர் சமீபத் திருந்து காற்றும்
தேகத்தைத் தொடாத வாறு தேக்கியே கடமை ஆற்று
14 (துரியோதனன் தமது படைவீரர்கள் முக்கியமாக பீஷ்மரைக் காக்க வேண்டும் என்றும், அதற்காக உயிரையும் கொடுக்க இதுவே நேரம் என்றும் ஊக்குவிக்கிறான்.)
தீரர்காள் திசைகள் பரந்த திண்மையின் தலைவன் தன்னை
சாரமாய் வகுத்து நின்று சமரிட்டு உய்வ தற்கு
நேரமே இதுதா னென்று நின்றனன் துரியோ தனனே
ஸிம்ஹனாத₃ம் வினத்₃யோச்சை: ஶங்க₂ம் த₃த்₄மௌ ப்ரதாபவான் (1-12)
15 (1-12) துரியோதனனின் கலக்கத்தை உணர்ந்து, அவனை உற்சாகப் படுத்த கெªரவர்களின் பாட்டன் பீஷ்மர் சிங்கநாதம் செய்து தமது சங்கினை ஊதினார்.
துலங்கிடச் செய் வதற்கு தூக்கிய சங்க நாதம்
விளங்கிடப் பீஷ்ம தேவன் விரித்திடும் சிங்க நாதம்
தளும்பிடத் திசைகள் பறைகள் தாரைகள் முழங்க லாகும்
ஸஹஸைவாப்₄யஹன்யந்த ஸ ஶப்₃த₃ஸ்துமுலோ(அ)ப₄வத் (1-13)
16 (1-13) அதனைத் தொடர்ந்து கெளரவர்களின் சங்கங்களும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும் தீடிரென ஒலிக்கத் தொடங்கி, அது எல்லா இடத்திலும் பேரொலியாகப் பரவியது.
தததம் தமதம முழக்கம் தம்பட் டங்கள் பறைகள்
மோதிடும் பேரிகை கொம்பு மூட்டிய பேரொலி வகைகள்
தீதெனத் தீடிரெனக் கிளம்பும் திசைகள் வலியால் புலம்பும்
மாத₄வ: பாண்ட₃வஶ்சைவ தி₃வ்யௌ ஶங்கௌ₂ ப்ரத₃த்₄மது: (1-14)
17 (1-14) அப்போது வெள்ளைக் குதிரை பூட்டிய தேரில் இருந்த, விசயனும், கிருஷ்ணனும் தங்கள் தெய்வீகத்தன்மை வாய்ந்த சங்கங்களை முழங்கினார்.
தண்மழை பொழியு முன்னே தந்ததோ ரிடியைப் போன்று
பண்ணினை இசைத்து நல்லோன் பார்த்தனை உடன் இருத்தி
கண்ணனும் தேரில் வந்தான் கடியவெண் புரவி பூட்டி
பௌண்ட்₃ரம் த₃த்₄மௌ மஹாஶங்க₂ம் பீ₄மகர்மா வ்ருகோத₃ர: (1-15)
18 (1-15) கண்ணன் தனது பாஞ்சசைன்யம் என்ற சங்கினை முழங்க, அர்ச்சுனன் தேவதத்தம் எனும் சங்கை ஊத, அரிய செயலைச் செய்பவனும், ஓநாய் வயிற்றைப் போன்ற வயிற்றை உடைய பீமன் பவுந்தரம் எனும் சங்கினை எடுத்து ஒலித்தான்.
தேனாய் முழங்கும் தனஞ்ஜயன் தேற்றுதல் தேவ தத்தம்
ஓநாய் வயிற்றால் ஒட்டிய ஒப்பிலாப் பலத்தால் கட்டிய
தானாய் வல்லிய பீமனும் தகைத்த சங்கு பவுந்தரம்
நகுல: ஸஹதே₃வஶ்ச ஸுகோ₄ஷமணிபுஷ்பகௌ (1-16)
19 (1-16) குந்தி மகன் தருமன் அனந்த விஜயம் எனும் சங்கையும், நகுலனும், சகாதேவனும் முறையே சுகோஷம், மணிபுஷ்பகம் எனும் சங்கங்களை ஊதினர்.
நகுலன் வளர்த்த சங்கு நல்லது சுகோஷம் என்றும்
பகலத் தக்க சீலம் பார்க்கும் சகா தேவன்
மகுடம் வைத்த சங்கு மணிபுஷ் பகமே ஆகும்
த்₄ருஷ்டத்₃யும்னோ விராடஶ்ச ஸாத்யகிஶ்சாபராஜித: (1-17)
20 (1-17) வில்வீரன் காசிராஜன், தேர் ஓட்டத்தில் தேர்ந்த சிகண்டி, திருஷ்ட்யுத்மன், விராடன், சத்யாகி ஆகிய பாண்டவரின் தளபதிகளின் சங்க நாதம்.
செல்லுவன் சிகண்டி யோடு சீரியன் திருஷட்யுத் மனனும்
மல்லவன் விரதன் மற்றும் மாவலி சத்யாகி என்று
உள்ளவர் எல்லாம் தத்தம் ஒலியினைப் பெருக்கி னாரே
ஸௌப₄த்₃ரஶ்ச மஹாபா₃ஹு: ஶங்கா₂ந்த₃த்₄மு: ப்ருத₂க்ப்ருத₂க் (1-18)
21 (1-18) துருபதனும், திரெªபதியின் மக்களும், பூமியின் தலைவனான திருதராட்டிரனே, சுபத்திரையின் மகனும் தத்தம் சங்கினை முழங்கினர்.
காமியாள் திரெªபதி ஈன்ற காரியக் காரர் ஊத
நேமியாள் சுபத்திரைக் கன்று நிச்சயித்தூத ஊத
பூமியாள் நாதம் அங்கே போர்க் கீதம் ஆனதென்ன!
நப₄ஶ்ச ப்ருதி₂வீம் சைவ துமுலோ(அ)ப்₄யனுனாத₃யன் (1-19)
21 (1-19) பாண்டவர் எழுப்பிய போர் ஒலி, விண்ணிலும் மண்ணிலும் எதிரொலியைக் கிளப்பி, கெளரவரைக் கலக்கியது.
ஐவரும் தத்தம் சங்கை அனுபவித் தூத ஊத
ஐவரின் வீரர் கோடி யாகவர் ஊத ஊத
கையறு நிலையில் அதனைக் கவுரவர் காணும் காட்சி
பதில் ஒலி யாகப் பாண்டவர் போர் ஒலி
எதிர் ஒலி யாகி எதிர் வரும் பேரழி
புதிர் விதி யாகிப் புசித்தது கவு ரவர்
விதிர் விதிர்ப் பாகி வியர்த்தது வீரம்
ப்ரவ்ருத்தே ஶஸ்த்ரஸம்பாதே த₄னுருத்₃யம்ய பாண்ட₃வ: (1-20)
23 (1-20) திருதராட்டிரப் படை அணிவகுப்பைப் பார்த்துப் பிறகு குரங்குக் கொடியுடைய விசயன், திருதராட்டிரனே, வில்லைக் கையில் ஏந்தியபடி (இறுமாப்புடன்) கண்ணனிடம் தனது தேரைப் பகைவருக்கு நடுவில் நிறுத்தச் சொல்லுவான்.
ஆற்றுவர் அமரில் வீரர் அனைவரைக் காண்ப தற்குப்
போற்றுவர் கண்ணா தேரைப் புறப்படச் செய்க என்பான்
வீற்றிறு செம்மல் மந்தி விளையுநற் கொடிபிடித் தோன்
அர்ஜுன உவாச .
ஸேனயோருப₄யோர்மத்₄யே ரத₂ம் ஸ்தா₂பய மே(அ)ச்யுத (1-21)
விசயன் உரை
24 (1-22) போரை விரும்பி வந்தவர்களையும், ஆரம்பத்தில் யார்யாருடன் போர் செய்யவேண்டியிருக்கும் என நான் பார்க்க வேண்டும் என்று விசயன் கேட்டான்.
சாவினை அள்ளத் தானே சமரிட எண்ணத் தாலே
மேவிய தாவர் என்றே மேற்கொண் டறிய வேண்டும்
காவிய நாதா கண்ணா காட்டிட விசயன் கேட்க
கைர்மயா ஸஹ யோத்₃த₄வ்யமஸ்மின் ரணஸமுத்₃யமே (1-22)
தா₄ர்தராஷ்ட்ரஸ்ய து₃ர்பு₃த்₃தே₄ர்யுத்₃தே₄ ப்ரியசிகீர்ஷவ: (1-23)
25 (1-23) கெடுமதி கொண்ட துரியோதனனைப் போரால் திருப்தி செய்வதற்காக இங்கு கூடியிருப்பவர்களை நான் பார்க்க விரும்புகின்றேன் என்றான்.
வெகுமதி யாகத் தத்தம் வேதத்தை ஆயு தத்தைத்
தருமதி யாளர் தம்மைத் தம்மிரு விழியில் நோக்க
கருமதி ஞானக் கண்ணா காட்சியை விசயன் கேட்க
ஸஞ்ஜய உவாச .
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஶோ கு₃டா₃கேஶேன பா₄ரத .
ஸேனயோருப₄யோர்மத்₄யே ஸ்தா₂பயித்வா ரதோ₂த்தமம் (1-24)
சஞ்சயன் உரை
26 (1-24) பரத நாட்டரசே, இவ்வாறு பார்த்தன் உரைத்ததைக் கேட்ட கண்ணன், தேரை இரண்டு படைகளுக்கும் இடையில் நிறுத்தி,
மாரத முன்னே மின்ன மத்தியில் அமர்ப் பணிக்க
நேரத னாலே என்ன நிலையதை சுவர்ப் பிரிக்க
தேறுத லறியக் கண்ணன் தேர்தனை நிலை நிறுத்த
உவாச பார்த₂ பஶ்யைதான்ஸமவேதான்குரூனிதி (1-25)
27 (1-25) பீஷ்மருக்கும், துரோணருக்கும், மற்றுமுள்ள அரசர்களுக்கும் எதிரில் ஸ்ரீகிருஷ்ணர் தேரை நிறுத்தி, பார்த்தா, இங்கு ஒன்று திரண்டு இருக்கும் கெªரவர்களைப்பார் என்றார்
பூத்தோர் அரசர் முன்னே போரிட வந்தார் முன்னே
காத்தோன் இரதத்தைக் கட்டிக் காணடா கவுரவர் இங்கே
சாத்தோன் றறியா சாட்சி சந்திப்ப தறிவாய் என்றான்
ஆசார்யான்மாதுலான்ப்₄ராத்ரூன்புத்ரான்பௌத்ரான்ஸகீ₂ம்ஸ்ததா₂ (1-26)
28 (1-26) அங்கு அர்ச்சுனன் இருதரப்பிலும், தந்தையரும், பாட்டன்மார்களும், ஆசிரியர்களும், மாமன்மாரும், சகோதரர்களும், பிள்ளைகளும், நண்பர்களும் (எதிரெதிராக) நிற்பதைக் கண்டான்.
பாங்கென்ன பாட்டன் தந்தை பயன்குரு மாமன் தமயர்
தீங்கென்ன பிள்ளை நண்பர் திரும்பிய இடத்தில் தெரிவர்
நீங்கெனால் நீங்காச் சுற்றம் நின்றிங்கே விடத்தில் எரிவர்
தான்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வான்ப₃ந்தூ₄னவஸ்தி₂தான் (1-27)
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீத₃ன்னித₃மப்₃ரவீத் .
29 (27) அவ்வாறே மாமன்களும், நண்பர்களும் இருதரப்பிலும் நிற்பதைக் கண்டான். இரக்கம் மிகுந்து கவலையுடன் சொல்வான்
பார்தனைப் பார்த்தன் பார்த்தான் பார்த்தனை எல்லாம் அந்தோ
சேர்த்தனை உற்றார் உறவு செல்வமாம் நண்பர் என்று
வேர்த்தனன் உடலும் உள்ளம் வெந்தனன் துயரால் வெம்மை
அர்ஜுன உவாச .
த்₃ருஷ்ட்வேமம் ஸ்வஜனம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்தி₂தம் (1-28)
விசயன் உரை
30 (1-28) போரை விரும்பி இங்கு வந்திருக்கும் சுற்றத்தைக்கண்டு என் கைகால்கள் சோர்வடைகின்றன.
கண்டதனால் கைகால்கள் இற்றும் கவலையினி நெஞ்சத்தைச் சுற்றும்
விண்டதனால் உள்ளத்தில் குற்றம் விரயமிதால் விளைவென்ன முற்றும்
தண்டனையோ தளருவது கொற்றம் தாங்காது சோர்வென்னைப் பற்றும்
வேபது₂ஶ்ச ஶரீரே மே ரோமஹர்ஷஶ்ச ஜாயதே (1-29)
31 (1-29) வாய் உலர்கிறது. என்னுடல் நடுங்கும். மேனியின் மயிர்க்கால்களும் சிலிர்க்கும்.
சொன்னால் மனம் பதைக்கும் சோர்வா யென் னுள்ளம்
புண்ணாய்ப் போகும் நான் புரிவேனோ அமர் இந்த
மண்ணா பெரி தெனக்கு மன்னித்து விடு என்றான்
ந ச ஶக்னோம்யவஸ்தா₂தும் ப்₄ரமதீவ ச மே மன: (1-30)
நடுங்கிடும் உடல் நாவு நரம்புகள் புடைத் தது
மடங்கிடும் மயிர்க் கால் மரமென முளைத் தது
படர்ந்திடும் வயிற்றில் தீ பற்றியே எரிந் தது
கடந்திவன் தோள் வழி காண்டீபம் விழுந் தது
33 (1-30) ஆயுதமும் கை நழுவி விழும். உடலெங்கும் பற்றி எரிகிறது. என்னால் நிற்க முடியவில்லை. மனம் பதைக்கும்.
நழுவும் வில் தவறும் நலியும் மனம் முறியும்
ஒடுங்கும் நிழல் அடியில் ஒளியும் பயம் தெரியும்
ஒழுகும் விழி பொழியும் உறவும் இனி அழியும்
ந ச ஶ்ரேயோ(அ)நுபஶ்யாமி ஹத்வா ஸ்வஜனமாஹவே (1-31)
34 (1-31) கேசவா, விபரீதமான சகுணங்களைக் காண்கின்றேன். சுற்றத்தாரைக் கொன்று என்ன சுகத்தைக் காணப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. (உறவினரைக் கொல்வது பாவம். என்னைக் கோழை என்றாலும் பரவாயில்லை. நான் இவர்களைக் கொல்லேன் என நினைத்துப் புலம்புகிறான்.)
பூசுவ தாலே எந்தன் புத்திதடு மாறும் வாயும்
பேசுவ தறியா தாகும் பேரிடர் வருவ தாகும்
கூசிய தாலே கால்கள் குற்றத்தால் தங்க லாகும்
கூடப் பிறந்த கூட்டம் கொல்வது மிகவும் வாட்டம்
தேடக் கிடைத்த தென்ன தேறுதல் அறியா தாகும்
வாடப் பிறக்க வில்லை வாழ்க்கை அழிவில் இல்லை
பேடன் என்று என்னைப் பேசினால் ஒன்றும் இல்லை
கிம் நோ ராஜ்யேன கோ₃விந்த₃ கிம் போ₄கை₃ர்ஜீவிதேன வா (1-32)
36 (1-32) போரில் நான் வெற்றியை விரும்பவில்லை. கிருஷ்ணா, நான் அரசுரிமையையோ சுகபோகத்தையோ விரும்பவில்லை. ஏனெனில் சுகபோகங்களால் என்ன பயன்? அல்லது உயிர் வாழ்வதில்தான் என்ன பயன்?
பாரிலே பரிசாய் அரசோ பாவிக்கும் சுகமும் வேண்டாம்
யாருக்கு வேண்டும்? வேண்டாம் யாதுநல மாகும்? வேண்டாம்
பேருக்கு உயிர் வாழ்கின்ற பெருமையால் பயனோ? வேண்டாம்
த இமே(அ)வஸ்தி₂தா யுத்₃தே₄ ப்ராணாம்ஸ்த்யக்த்வா த₄னானி ச (1-33)
37 (1-33) எவருக்காக நாம் அரசு, போகம், சுகம் இவற்றை விரும்புகிறோமோ, அவர்களெல்லாம் எல்லாவற்றையும் துறந்து (இங்கே சண்டையிட்டுச் சாக) வந்துள்ளாரே? என்னே பயன்?
போருக்காய் அவரே இங்கு புறப்பட்ட கொடுமை என்ன
வேருக்காய் விட்ட நந்நீர் வெறுந்தரைப் பட்ட தாகும்
பேருக்காய் வெற்றி பெற்று பெறுபவை மட்ட மாகும்
மாதுலா: ஶ்வஶுரா: பௌத்ரா: ஶ்யாலா: ஸம்ப₃ந்தி₄னஸ்ததா₂ (1-34)
38 (1-34) ஆசிரியர்கள், தந்தைமார், சகோதரர்கள், பாட்டன்மார், அம்மான்மார், மாமன்மார், மைத்துனர்கள், மற்ற உறவினர்கள் (எல்லாம் இங்கே சண்டையிட வந்துள்ளார்களே, இவர்களை வென்று நான் அடைவது ஏது என விசயன் அயர்கின்றான்).
கூடப் பிறந்த சோதரர் குடும்ப முதியோர் மாமனார்
நாடக் கலந்த உறவினர் நல்மாமன் மைத்துனர் மருமனார்
வேடம் புனைவரோ போரெனும் வேளைகழிக்க நின்றனர்
பாட்டனும் அன்பான மாமனும் பள்ளி வளர் தோழனும்
கேட்டால் உயிர்தந் தென் கேடறுக்கும் கேளி றும்
நாட்டால் நான் அடைவ தாகுமோ சொல் மாதவ
ஓட்டுவாய் தேரை ஓர் ஓரமாய் என்றயர்ந் தான்
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே (1-35)
40 (1-35) என்னை இவர்கள் கொல்வதாயிருந்தாலும், நான் மூன்று உலகத்தை ஆள்வதாயிருந்தாலும், நான் இவர்களைக்கொல்ல உடன்படமாட்டேன் என்றால், பூமிக்கு ஆசைப்பட்டு, இவர்களைக் கொல்வேனா?
காவுள கற்றோ ருற்றோர் கருணையைக் கொல்வ தேது
பூவுல காட்சிக் கோவோ புரிவேன் இந்தப் பாவம்
நாவுள நல்ல நீதி நயந்துயான் செல்வேன் என்றான்
பாபமேவாஶ்ரயேத₃ஸ்மான்ஹத்வைதானாததாயின: (1-36)
41 (1-36) ஜனார்த்தனா, துரியோதனன் முதலானவரைக் கொல்வதால் என்ன பயன்.
இப்பாவிகளைக் கொல்வதால், நமக்குப் பாவம்தான் வந்து சேரும்.
பொருத லாகுமோ இங்கே போரிடல் நலமோ பாவம்
வருத லாகும் அதனால் வம்புக்குச் செல்ல வேண்டாம்
கருத லானது உள்ளம் கலங்கல் ஆனது ஜனார்த்தனா
கோவிந்தா எனக்குச் சொல்க கொள்வது யாது இந்தப்
பாவிகள் வதைவ தாலே பாவத்தைத் தவிர நாமே
ஏவிடும் பயன்தான் என்ன எண்ணத்தில் கொன்ற தாக
தீவினைப் படுதல் வேண்டும் தீராத கவலை ஏகும்
ஸ்வஜனம் ஹி கத₂ம் ஹத்வா ஸுகி₂ன: ஸ்யாம மாத₄வ (1-37)
43 (1-37) ஆகையால் நாம் சுற்றத்தார்களாகிய துரியோதனன் முதலியோரைக் கொல்வது பாவம். மாதவா, நம்முடைய சுற்றத்தைக் கொன்று, நாம் எப்படி இன்பமாய் இருக்க முடியும்?
மோதலால் உற வழிக்கும் மோசமோ குற்றம் தீங்கு
ஆதலால் துரியோ தனரை அழிக்கின்ற பாவம் வேண்டாம்
மாதவா கொன்றோ யாமே மகிழ்ச்சியில் இருக்கக் கூடும்?
பாவமான தாலே கொலையே பரந்தாமா செய்ய வேண்டாம்
சாவதான மாகச் செல்வோம் சகஜமாய் எடுத்துக் கொள்வோம்
நோவதான தாகும் உறவோர் நோகிடச் செய்ய வேண்டாம்
போனதான காலம் மறப்போம் புறப்பட்டுச் செல்வோம் கண்ணா
குலக்ஷயக்ருதம் தோ₃ஷம் மித்ரத்₃ரோஹே ச பாதகம் (1-38)
45 (38) பேராசையினால், குழம்பிய புத்தியுடைய இவர்கள், சமுதாயத்தில் உள்ள குடும்பங்களை அழிக்கத் துணிந்தாலும், நண்பர்களுக்குச் செய்யும் தீமையில் பாவத்தைக் காணவில்லை என்றாலும்,
தூரோசை இல்லா மல் துடைத் தழித்துக் குடும்பங்கள்
வேரோடு சாய்த் திடவும் வெட்கமின்றி நட்பி னுயிர்
கூரோடு ஏய்த் திவர்கள் கொடும் பாவம் அறியாரே
குலக்ஷயக்ருதம் தோ₃ஷம் ப்ரபஶ்யத்₃பி₄ர்ஜனார்த₃ன (1-39)
46 (1-39) குடும்ப நாசத்தால் வரும் தீமைகளை நன்றாக அறிந்து கொண்டிருக்கும் நாம், ஜனார்த்தனா, ஏன், பாவச்செயலைச் செய்யாமல் விலகிப்போகக்கூடாது?
கடும்பகை கொண்டார் இங்கு களம்புகுந் தழிக்க வந்தார்
நடுநிலை அறிவோம் குடிகள் நாசத்தை உணர்வோம் அதனால்
கொடும்பகை விடுவோம் அன்றோ கூறுவாய் ஜனார்த் தனா
த₄ர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்னமத₄ர்மோ(அ)பி₄ப₄வத்யுத (1-40)
47 (1-40) குடும்பங்கள் அழிந்தால், தொன்றுதொட்டு அவர்கள் செய்துவரும் பலவித தெய்வீகப் பழக்க வழக்கள் அழிந்து, அவை அழிவதால், விரும்பத்தகாத வழக்கங்கள் குடும்பத்தை ஆட்கொண்டுவிடும். (அதனால் கேடும் விளையும்.)
நல்லவை தளரும் இறைவன் நம்பிக்கை நலியும் அதனால்
அல்லவை வளரும் குறைகள் ஆவன நுழையும் பழக்கம்
உள்ளவை அழியும் தீமை ஊறிடும் நலம் கெடுக்கும்
ஸ்த்ரீஷு து₃ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர: (1-41)
48 (1-41) துர்ப்பழக்கங்களினால், கிருஷ்ணா, குடும்பப்பெண்கள் சீலமிழக்கிறார்கள். பெண்கள் ஒழுக்கம் கெடுவதால், சமூகத்தில் குழப்பம் ஏற்படுகிறது,
படுந்துயர் பட்டே வாழ்க்கை பாழ்பட்டு அழியப் போகும்
நடந்திடும் நியதி போகும் நியாயங்கள் மறைந்து போகும்
விடந்தொடும் சாதி பேதம் வியர்த்தம் விளைக்கக் கூடும்
ஓர்குடிப் பிறந்த மக்கள் ஒற்றுமை இன்றிப் போனால்
சீர்கெடும் செய்த தர்மம் சிதறிடும் வர்க்க பேதம்
ஊர்கெடப் பேசச் செய்ய உத்தமி உள்ளம் மாறும்
பார்கெடச் செய்வ தற்கோ பாரத யுத்தம் கண்ணா
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோ₃த₃கக்ரியா: (1-42)
50 (1-42) குடும்ப ஓற்றுமையை அழித்தவர்களை, சமுதாயக் குழப்பம் நரகத்தில் தள்ளுகிறது. ஏனெனில் அவர்களுடைய முன்னோர்களும், பிண்டமும் நீருமின்றி அழிகிறார்கள். (அதாவது, ஆதரவற்று துன்பத்தில் ஆழ்கிறார்கள்)
அவரே அவரால் முந்தை ஆனவர் நரகம் பட்டார்
தவறே அதனால் பிண்டம் தாகநீர் இல்லாக் கண்டம்
அவரே அடைவார் அணையா ஆழ்வினை சூழப் போவார்
உத்ஸாத்₃யந்தே ஜாதித₄ர்மா: குலத₄ர்மாஶ்ச ஶாஶ்வதா: (1-43)
51 (1-43) சாதிக்குழப்பத்தை உண்டாக்கும் இத்தகைய இழிச்செயல்களால், தெய்வீக தருமங்களும், குலக்கட்டுப்பாடும் அழிகின்றன.
வேதியர் வாத மிட்டால் வேதனை தருவ தற்காய்
ஓதிய கல்விப் பேறு ஒற்றுமை விட்டு விட்டால்
பாதியாய்ப் பகற் கனவாய் பாரதம் நலிந்து போகும்
சமுதாய வளனைக் குடும்ப சந்தோஷ நலனே காட்டும்
அமுதான தாகும் மக்கள் அன்போடு வாழ்ந்து காட்டும்
சமதான மில்லாத் தன்மை சமரிட்டுத் துயரந் தன்னை
அவமானப் படுத்த லானால் அடிப்படை உரிமை போகும்
நரகே நியதம் வாஸோ ப₄வதீத்யனுஶுஶ்ரும (1-44)
53 (1-44) ஜனார்த்தனா, மதக்கோட்பாடுகளை (உணராமல்) அழிந்து போகச்செய்யும் செயலைச் செய்பவன் நரக வாழ்வைத்தான் அடையவேண்டி வரும். (நல்ல குடும்பத்தில் வந்த துயரமே நரகம். அதை நாமே செய்வதோ? (அது, குடும்ப ஒற்றுமை கெடுவதால் வருவது.))
விரதம் வேள்வி எல்லாம் விட்டவர் செய்கை தானே
பரவும் உலகம் தருமம் பாவிக்க மறந்த தாலே
இரவும் விடிவ தில்லை இன்னல் மறைவ தில்லை
54 (1-44-1) எனவே, வேண்டாம் இந்தச் சண்டை.
மோதலால் விளையும் கேடு முறிந்திடும் சமுதாய நீதி
சாதலாய் ஆகும் உயிர்கள் சந்தியில் நிற்கும் வீடு
காதலாய் ஏற்றுக் கொள்க களத்தினை மீட்டுச் செல்க
யத்₃ராஜ்யஸுக₂லோபே₄ன ஹந்தும் ஸ்வஜனமுத்₃யதா: (1-45)
55 (1-45) ஐயகோ! அரச சுகத்தை எண்ணி, சுற்றத்தாரையே கொல்கின்ற பாவத்தைச் செய்யத் துணிந்தோமே!
கொய்யவே துணிந்தேன் உயிரைக் கூடிய உறவைத் தாண்டி
நெய்யவே துணிவோ பயனோ நேயத்தில் மடமை தூண்டி
செய்யவே இருந்தேன் குற்றம் செய்யேன் செய்வினை பாவம்
தா₄ர்தராஷ்ட்ரா ரணே ஹன்யுஸ்தன்மே க்ஷேமதரம் ப₄வேத் (1-46)
56 (1-46) ஆயுதங்கள் விட்டு, எதிர்க்காமல் நிற்கும் என்னை, ஆயுதம் தரித்து துரியோதனாதியர் கொன்றாலும், அதுவே எனக்குச் சிறந்தது.
மாட்சியும் வேண்டேன் யான் மண்ணோடு பொன் வேண்டேன்
காட்சியில் கொடிய திந்தக் களத்திடை உறவை உந்தன்
சாட்சியில் கொல்வ தாலோ சந்திப்பேன் பேறு என்றான்
57 (1-46.1) தலைவர்களாய் உள்ளவர்கள் தவறு இழைக்கக் கூடாது. எனக்கு இந்த ஆயுதமும், சண்டையும் வேண்டாம் என்றான்.
எண்புறம் எரிக்கும் என்றால் ஏனவர் செய்வார் தீங்கு
அன்புடன் நிற்பேன் யானே ஆயுதம் வேண்டேன் யானே
துன்பமே வந்தால் கண்ணா துவளாது ஏற்பேன் என்றான்
ஸஞ்ஜய உவாச .
ஏவமுக்த்வார்ஜுன: ஸங்க்₂யே ரதோ₂பஸ்த₂ உபாவிஶத் .
விஸ்ருஜ்ய ஸஶரம் சாபம் ஶோகஸம்விக்₃னமானஸ: (1-47)
சஞ்சயன் உரை
58 (1-47) போர்க்களத்தின் மத்தியில் இவ்வாறு கூறி, விசயன் வில்லையும் அம்பையும் எரிந்துவிட்டு, புண்பட்ட மனத்தினாய் தேர்த்தட்டில் அமர்ந்த்து விட்டான்.
நிலமகள் மீதே போட்டு நிலைதனை இழந்து தேர்க்கால்
அலகிலே அமர்ந்து விட்டான் ஆதவன் மாலைப் போதாய்
நிலவினான் நிலைமை இதுவாய் நிறுவினான் சஞ்சய னையன்
அர்ஜுனவிஷாத₃யோகோ₃ நாம ப்ரத₂மோ(அ)த்₄யாய: (1)
இவ்வாறு உபநிஷத்தும் பிரம்ம வித்தையும் யோகநூலும் ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன ஸம்பாஷணையுமான ஸ்ரீமத் பகவத்கீதையில்
‘அர்ச்சுனன் துயரம்’ எனும் முதல் அத்தியாயம் நிறைவுறும்.