06 Dhyana Yoga
ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம:
அத₂ ஷஷ்டோ₂(அ)த்₄யாய: . ஆத்மஸம்யமயோக₃:
பாகம் 6 – (தியான நெறி)
அனாஶ்ரித: கர்மப₂லம் கார்யம் கர்ம கரோதி ய: .
ஸ ஸம்ன்யாஸீ ச யோகீ₃ ச ந நிரக்₃னிர்ன சாக்ரிய: (6-1)
ந ஹ்யஸம்ன்யஸ்தஸங்கல்போ யோகீ₃ ப₄வதி கஶ்சன (6-2)
ஸ்ரீகிருஷ்ணர் உரை
தருமத்தை மறந்து நிற்கும் தனஞ்சயன் அறியச் சொல்வான்
உருவத்தை வைத்து யாரும் உண்மையை அறிய மாட்டார்
பருவத்தே பயிரைச் செய்யும் பாடத்தைக் கூறக் கேட்க
2 (1-2) பலனை எதிர்பார்க்காது கடமை செய்வதே உண்மைத் துறவு. கடமையைப் புறக்கணித்து, காவி உடை தரித்து வேஷம் போடுவதல்ல துறவு.
சுடலையைப் பூசி மெளனம் சூன்யம் நிலைத்த பார்வை
உடமையே விடுத்து வாழ்தல் உண்மைத் துறவு அல்ல
மடமையே மனதால் மட்டும் மாட்சியைக் காணக் கூடும்
3 (2) எண்ணங்களைத் தியாகம் செய்வதே யோகமாகும். இந்த யோகமே துறவு ஆகும். (தியாகம், துறவு இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தது என்ற உண்மையை அறிந்து கொள். )
எண்ணமே தியாக மாக்கும் ஏற்றமே துறவு ஆகும்
வண்ணமே வாழக் கரும வழியினைப் பற்றும் சீவன்
முன்னமே வைத்த பாவ முடிவினில் அடையும் சீலம்
யோகா₃ரூட₄ஸ்ய தஸ்யைவ ஶம: காரணமுச்யதே (6-3)
4 (3) இயற்கைக்கு ஒட்டிய கர்மத்தைச் செய்வதே யோகத்திற்கு வழி. யோகம் அடைந்த பின்னே, செயலற்ற துறவே குறிக்கோள். (அதாவது, முதலில் கர்ம யோகத்தைப் பழுதறக் கடைப்பிடித்துப் பின், அதனால் வரும் பலாபலன்களைத் தியாகம் செய்து, செயல் துறவேற்க வேண்டும்.)
விதிதான் உவக்கும் கடன் விளையும் பெறும் பேறு
மதிதான் அப் போது மனதை நிலை நிறுத்திக்
கதிதான் செயல் துறவு கட்டியத்தை நிலை யாக்கும்
ஸர்வஸங்கல்பஸம்ன்யாஸீ யோகா₃ரூட₄ஸ்ததோ₃ச்யதே (6-4)
5 (4) எண்ணத் தியாகமே யோகமும், துறவும் ஆகும்.
நுார்க்கும் செயலில் சிந்தை நுழைத்து உழைக்க வேண்டும்
வார்க்கும் நலமோ துயரோ வருவது ஏற்க வேண்டும்
சேர்க்கும் குணத்தால் தன்னைச் சீரியன் ஆக்க வேண்டும்
ஆத்மைவ ஹ்யாத்மனோ ப₃ந்து₄ராத்மைவ ரிபுராத்மன: (6-5)
6 (5) மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தன்னம்பிக்கையும், சந்தேகமுமே ஒருவனுக்கு நண்பனும், எதிரியும் ஆகும்.
பயிருங் களை வேரும் பதிந்து முளைத் தாற்போல்
உயர வைக்கும் அருள் உன்னுள்ளே இருக் கிறது
அயர வைக்கும் இருள் அங்கே தானிருக் கிறது
அனாத்மனஸ்து ஶத்ருத்வே வர்தேதாத்மைவ ஶத்ருவத் (6-6)
7 (6) கட்டுப்பாடு உடையவன் தனக்குள்ளே உறுதியாகிய நண்பனையும், கட்டுப்பாடற்றவன் ஐயம் என்கிற எதிரியையும் உருவாக்கிக் கொள்கிறான்.
தன்னைத் தானே விட்டுவிடத் தன்மனம் போன போக்காகும்
விண்ணைத் தொட்ட பேராண்மை விளையச் செய்யும் நம்பிக்கை
மண்ணில் பட்ட மரமாக மாளச் செய்வது சந்தேகம்
ஶீதோஷ்ணஸுக₂து₃:கே₂ஷு ததா₂ மானாபமானயோ: (6-7)
8 (7) கட்டுப்பாடு உள்ளவனுக்கு, வெப்பமும், குளிரும், இன்பமும், துன்பமும் ஒன்றாய்க் காணத்தக்க சமநிலைப் போக்கிருக்கும். அதனால் உறுதியும் அமைதியுமிருக்கும்.
தட்டுப்பாடு கிடை யாது தன்மையில் சீற்றம் மீறாது
முட்டுப்பாடு என்ப தில்லை முழுதும் சமனே மாறாது
திட்டப்பாடு மலர் வதனால் திடத்தில் குறைவு ஆகாது
யுக்த இத்யுச்யதே யோகீ₃ ஸமலோஷ்டாஶ்மகாஞ்சன: (6-8)
9 (8) தன்னைப் பற்றிய உண்மையை அறிவினாலும், அனுபவத்தாலும் உணர்ந்த யோகி, கலக்கமின்றிப் பொன்னையும், கல்லையும் ஒரே நோக்கில் பார்க்கும் பக்குவம் பெற்றிருப்பான்.
தவமான யோகத் ததனால் தங்கத்தைக் குழவிக் கல்லாய்
உவமானப் படுத்திப் பார்தது உபயோகப் படுத்த லாகா
நவநாக ரீகன் யோகி நடுநிலை அறிந்த சீலன்
ஸாது₄ஷ்வபி ச பாபேஷு ஸமபு₃த்₃தி₄ர்விஶிஷ்யதே (6-9)
10 (9) யோகியானவன் நல்லோர், தீயோர், பெரியோர், சிறியோர் என்ற பாகுபாடு இன்றி, சமத்துவமாய்ப் பழகுவான். அனைவருக்கும் இனியவனாய் விளங்குவான்.
உள்ளதெலாம் வெள்ளை என்று உறவுமுறை பகையும் இன்றி
நல்லதென எதையும் ஏற்று நடுநிலைப் படுவன் யோகி
வல்லவனே அவனே சித்தன் வாழ்வாங்கு வாழும் புத்தன்
ஏகாகீ யதசித்தாத்மா நிராஶீரபரிக்₃ரஹ: (6-10)
11 (10) அத்தகைய யோகி, தனிமையில் இருந்து புலன்களை அடக்கி, சமநிலையில் என்றும் சுகவாசியாக இருப்பான். (தனிமை என்பது உடலால் தனித்திருப்பது அல்ல, மன ஓய்ச்சல் இல்லாது அமைதியாய் இருப்பது. )
சத்த மடக்கி யவன் சமன்பாடு காண்ப துண்டு
பித்த மடங்கி மனப் பெருஞ்சக்தி வெளிப் பட்டு
நித்த மானந்த சுக நிலைஞானம் பெறுவ துண்டு
நாத்யுச்ச்₂ரிதம் நாதினீசம் சைலாஜினகுஶோத்தரம் (6-11)
உபவிஶ்யாஸனே யுஞ்ஜ்யாத்₃யோக₃மாத்மவிஶுத்₃த₄யே (6-12)
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்₃ரம் ஸ்வம் தி₃ஶஶ்சானவலோகயன் (6-13)
12 (11-13) இவ்வாறு யோகப் பாதை ஏற்பவர்கள், தர்ப்பையும் மான் தோலும் (எளிமையும், அமைதியும்) அமைத்து, உடல் நிமிர்த்தி (நேர்மை வழி நடந்து), கருணையுடன் இருந்து, அகமுகமாய் ஆன்மஞானம் தேடுவர்.
இனிதாய் ஆச னத்தை இருத்தி உடல் நிமிர்த்தி
கனியாய் மனங் கனிய கண்ணறிவு உள் முகமாய்த்
துணிவார் யோக நிலை துரிதத்தில் காணு வரே
மன: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர: (6-14)
ஶாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தா₂மதி₄க₃ச்ச₂தி (6-15)
13 (14-15) சாந்தமாக, உடலும், மனமும் சரளமாக இயங்க, புறப்பொருள் மயக்கம் இல்லாது யோகவழி நடப்பவனே பிரம்ம ஞானம் அடைகிறான்.
ஏசுவ தும் உலகோர் ஏற்று வதும் விலக
பேசுவ தறியா மலுளம் பிரம்ம நிலையே யிருந்து
நேச முடன் ஆன்ம நேயம் வளர்ப் பாயே
ந சாதிஸ்வப்னஶீலஸ்ய ஜாக்₃ரதோ நைவ சார்ஜுன (6-16)
யுக்தஸ்வப்னாவபோ₃த₄ஸ்ய யோகோ₃ ப₄வதி து₃:க₂ஹா (6-17)
நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்₄யோ யுக்த இத்யுச்யதே ததா₃ (6-18)
14 (16-18) இத்தகுதி வருவதற்கு, முதலில் உடலையும், மனதையும், அறிவையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். (அதற்கு உணவின் மூலம் உடலையும், தியானத்தின் மூலம் மனதையும், கல்வியின் மூலம் அறிவையும் தெளிவுறச் செய்ய வேண்டும். )
கண்ணா லுறக் கத்துக் கணக்கி ணையே வளர்க்காதே
எண்ணா திருக் காதே எண் ணத்தைப் பெருக்காதே
தன்னா லறியு முறைத் தவத்தைநீ வேண்டு வதால்
யோகி₃னோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோக₃மாத்மன: (6-19)
15 (19) அத்தகைய கட்டுப்பாட்டினால், யோகியானவன், காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட விளக்கைப் போல நிலைத்திருப்பான்.
ஆற்றில்லா அலை யடங்கும் ஆழியுடைத் தீரம் போல்
மாற்றில்லா பசும் பொன்னும் மாறா திருத்தல் போல்
வீற்றிருப் பான் யோகியென விசயா அறிந் திருக்க
யத்ர சைவாத்மனாத்மானம் பஶ்யன்னாத்மனி துஷ்யதி (6-20)
16 (20) மனதின் முயற்சிக்கு விடைஅளித்து அமைதி தருவது விடா முயற்சியுடன் கடைப்பிடித்து வரும் யோகப் பயிற்சியே.
நடைமுறை தான் வழியெனும் நம்பிக்கை கொண் டுள்ளம்
தடையறியாத் தன்மை யினால் தளராது எடுத்த பணி
கடையடியப் புலன் அடங்கக் கருத்துஒரு மித்த வரே
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்தி₂தஶ்சலதி தத்த்வத: (6-21)
17 (21) அத்கைய விடாமுயற்சியின் பயனாக, ஆன்ம தரிசனம் கிடைக்கும் போது, புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்த நிலையை அடையலாம்.
கண்ணைத் திறந்து ஆன்மக் காட்சி கிடைத்த போது
இன்னல் தொலையு மாசை ஏக்கம் அழியும் வானம்
மின்னல் அடித்த தென மிக்கும் மெஞ் ஞானந்தம்
யஸ்மின்ஸ்தி₂தோ ந து₃:கே₂ன கு₃ருணாபி விசால்யதே (6-22)
18 (22) எதை அடைவதால் அதைவிட அடைய வேண்டுவது உலகில் வேறு ஒன்றும் இல்லை என நம்புகிறானோ அதை தியானத்தால் அடைந்ததும், எந்தத் துயராலும் அவன் வருத்தம் அடைவதில்லை.
அதை அடைவ தாலே ஆன்வி வேகத் தாலே
புதை மனம் அடக்கிப் பூத உடல் ஒடுக்கிச்
சிதை யாத மைதியிலே சீலம் தரும் தியானம்
ஸ நிஶ்சயேன யோக்தவ்யோ யோகோ₃(அ)நிர்விண்ணசேதஸா (6-23)
மனஸைவேந்த்₃ரியக்₃ராமம் வினியம்ய ஸமந்தத: (6-24)
19 (23-24) துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதே யோகம். இதனை அடைய விடாமுயற்சியும், பற்றற்ற செயலும் தேவை.
நேற்றது நாளை மாறும் நியமத்தை அறிந்து கொண்டு
காற்றதில் அசையாச் சுடராய்க் கருத்தொரு மித்து வாழும்
தேற்றலே யோகம் தியானம் தெரிந்திடு விசயா என்றான்
ஆத்மஸம்ஸ்த₂ம் மன: க்ருத்வா ந கிஞ்சித₃பி சிந்தயேத் (6-25)
ததஸ்ததோ நியம்யைததா₃த்மன்யேவ வஶம் நயேத் (6-26)
20 (25-26) மனம் நில்லாதது. எந்தெந்தக் காரணங்களால் மனம் அமைதியைப் பறித்துக் கொண்டு எங்கெங்கெல்லாம் போகிறதோ, அங்கெங்கெல்லாம் சென்று, மனதை மீண்டும் இழுத்து வந்து, அறிவால் உணர்த்தி, அதன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
தினமொரு பொருளுஞ் செயலும் திசைபல சென்ற போதும்
அணமிடு புத்தி யாலே அங்கங்கு சென்று எண்ணத்
தினவினை இழுத்து ஞானத் தீயினில் வாட்ட வேண்டும்
21 ( மனமானது, உடலை விட நுண்ணியது. அதனால், நினைத்த பொருளை உடல் சென்று அடைவதற்கு முன்னே ஆசை அதைச் சென்றடையும். உடலால் அவ்வாறு அதனை அடைய முடியாததால், தாபத்தையும், சினத்தையும் எழுப்பி மனத்தைத் துன்புறுத்தும். )
நுண்ணிய வடிவம் அதனால் நுட்பமாய் நினைத்த தெல்லாம்
திண்ணிய மாகப் பற்றும் தேகத்தா லாகா ததனால்
தன்னிலை மறந்து தாபத் தவிப்பிலே கிடக்க நேரும்
உபைதி ஶாந்தரஜஸம் ப்₃ரஹ்மபூ₄தமகல்மஷம் (6-27)
22 (27) எவனுடைய மனம் அமைதியாயும், ஆசைகளற்றும் இருக்கிறதோ, அவன் யோகத்தால் பிரம்மமாகவே மாறுவான்.
குணத்தில் ஸாத் வீகம் குறிக்கும் பண்பு கூடும்
தினத்தில் நன்மை யாகும் திளைக்கும் யோக ஞானம்
களத்தில் பிரம்ம னாகும் கருத்தொரு மித்தல் ஆகும்
ஸுகே₂ன ப்₃ரஹ்மஸம்ஸ்பர்ஶமத்யந்தம் ஸுக₂மஶ்னுதே (6-28)
ஈக்ஷதே யோக₃யுக்தாத்மா ஸர்வத்ர ஸமத₃ர்ஶன: (6-29)
23 (28-29) மனதில் ஒருமைப்பாடு இருந்தாலே, ஆன்ம தரிசனமும், பலமும் உண்டு. இல்லையேல், மனதில் அமைதியில்லை.
மனமே அமர்க் களந்தான் மாய்த்திடு ஆசை கோபம்
தினமே கடமை யாற்று திசைகள் போலே யாதும்
இனமே ஒருமை என்று இருந்திடப் பழகிக் கொள்க
தஸ்யாஹம் ந ப்ரணஶ்யாமி ஸ ச மே ந ப்ரணஶ்யதி (6-30)
24 (30) எவன் (தியானத்தால்) என்னிடத்தில் எல்லாற்றையும் பார்க்கிறானோ, என்னை எதனிலும் பார்க்கிறானோ, அவனை நான் நீங்குவதில்லை.
விண்ணிலே முளைத்த விண்மீண் விழலிலே நிறைத்த நிலவாய்
மண்ணிலே விளைத்த மாந்தர் மத்தியில் சிறக்க வாழக்
கண்ணிலே நிறைவேன் யானே கருணையும் புரிவேன் நானே
ஸர்வதா₂ வர்தமானோ(அ)பி ஸ யோகீ₃ மயி வர்ததே (6-31)
25 (31) அத்தகைய யோகி பற்றறுத்துத் தனது கடமை எதுவாகச் செய்தாலும், அதனால் அவனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. (அதாவது, அவன் பாவம் என உலகம் நினைக்கும் செயலைச் செய்தாலும், அதனால் பாதிக்கப்படுவதில்லை. )
மற்றொரு கருமத் தாலே மயக்கமோ குழப்பம் இல்லை
முற்றிலுஞ் சரண டைந்து முயற்சிநற் செயலை எல்லாம்
நற்றவன் பாத கமலம் நயந்திட வைப்ப தாலே
ஸுக₂ம் வா யதி₃ வா து₃:க₂ம் ஸ யோகீ₃ பரமோ மத: (6-32)
அர்ஜுன உவாச .
யோ(அ)யம் யோக₃ஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேன மது₄ஸூத₃ன .
ஏதஸ்யாஹம் ந பஶ்யாமி சஞ்சலத்வாத்ஸ்தி₂திம் ஸ்தி₂ராம் (6-33)
26 (32) இன்ப துன்பங்களில் சமநோக்கு உடையவனே யோகி. அவ்வாறு இல்லாதவன் படித்தும் படிக்காதவன். பயன் ஏதும் பெறாதவன்.
பொல்லார் நல் லோரென்ற போர்வை விஷம் என்றும்
இல்லார் இவரே இங்கு இருப்பார் அவர் என்றும்
கல்லார் கடைத் தேறார் காண்டீபா கேட்க என்றான்
தஸ்யாஹம் நிக்₃ரஹம் மன்யே வாயோரிவ ஸுது₃ஷ்கரம் (6-34)
விசயன் வினா
27 (33) என்னுடைய சஞ்சலத்தால், உனது வார்த்தைகள் புரியவில்லை. நீ கூறியபடி, எல்லாவற்றையும் சமநிலையால் நோக்கும் பக்குவத்தால், யோக சக்தி வரும் என்ற உண்மை விளங்கவில்லை.
நேர்முகம் அறிய வொண்ணா நெஞ்சமே குழம்பிப் போகும்
நீர்முகத் தெரியும் நிழலை நிஜமென நினைத்து மாளும்
போர்முகம் நிறுத்தி உன்னைப் போதிக்க வேண்டு கின்றேன்
28 (34) மனத்தைக் கட்டு என்று சுலபமாகச் சொல்லி விட்டாய். அது காற்றைக் கயிற்றில் கட்டுவது போலல்லவா? எனக்குப் புரியவில்லை. கருணை செய். இதன் கருத்தை எனக்கு விளங்கச் செய்.
வளியினை வலையில் கட்டி வசப்படச் செய்வ தேது
பழியிது மனதோர் மாயம் பறந்தெனை இழுக்கும் காயம்
வழியெது காட்டி வாய்மை வளமெனக் கருள்க என்றான்
ஶ்ரீப₄க₃வானுவாச .
அஸம்ஶயம் மஹாபா₃ஹோ மனோ து₃ர்னிக்₃ரஹம் சலம் .
அப்₄யாஸேன து கௌந்தேய வைராக்₃யேண ச க்₃ருஹ்யதே (6-35)
வஶ்யாத்மனா து யததா ஶக்யோ(அ)வாப்துமுபாயத: (6-36)
ஸ்ரீகிருஷ்ணர் உரை
29 (35) மெய்தான். மனத்தைக் கட்ட தேக வலிமை உதவாது. (ஏதேனும் துயரம் வந்தால், அதன் பொருட்டு மனம் வெறுத்து, துறவேற்பது, ஆசையை அடக்கியதாகாது. )
திண்மையில் மட்டும் நெஞ்சத் தினவினை மாற்றல் அரிது
இன்மையால் எப்போ தேனும் இருந்திடும் துயரால் துறவால்
வண்மையாய் மனதைக் கட்டி வகுத்திடச் செய்வ தேது
அர்ஜுன உவாச .
அயதி: ஶ்ரத்₃த₄யோபேதோ யோகா₃ச்சலிதமானஸ: .
அப்ராப்ய யோக₃ஸம்ஸித்₃தி₄ம் காம் க₃திம் க்ருஷ்ண க₃ச்ச₂தி (6-37)
30 (36) அதற்கு அறிவின் தெளிவும், உறுதியும் தான் உதவ முடியும்.
தப்போதும் மனதின் கூவல் தடுத்திடச் செய்யும் காவல்
அப்போதைக் கப்போ தாகும் அறிவினாற் செய்யக் கூடும்
இப்போதும் வேதா சாரம் இருத்திடு இதயம் என்றான்
அப்ரதிஷ்டோ₂ மஹாபா₃ஹோ விமூடோ₄ ப்₃ரஹ்மண: பதி₂ (6-38)
விசயன் வினா
31 ( பகவான் உரைத்த உண்மை புரிந்தும், தன்னுள் உறுதி இல்லாததால், மனதைக் கட்டுப்படுத்தத் தன்னுடைய அறிவால் முடியாமல் போனால் என்ன ஆகுமோ எனப் பயந்து பார்த்தன் மீண்டும் கேட்பான்.)
தினவினைப் பெற்றும் உள்ளம் திரும்பவுங் குழம்பித் தீரன்
முனைவுடன் இருப்பே னாயான் முயற்சியில் நிலைப்பே னாஎனத்
துணையென அமைந்த மாயன் துாயமா தவப்ை பார்த்தான்
32 (37) யோகத்தில் முயற்சி செய்தும், தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் மனம் தான் போன போக்கில் போய்விட்டால், அவன் யோகத்தில் தோற்று விடுவானே? அவனுடைய கதி என்ன ஆகும்?
என்னால் முடியும் முடியா தென்றே மாற்றங் கொள்வேன்
தன்னால் முயன்ற மட்டும் தகைமை முயற்சி செய்தும்
பின்னால் தோற்கும் மாந்தர் பெறுவது ஏது சொல்க
த்வத₃ன்ய: ஸம்ஶயஸ்யாஸ்ய சே₂த்தா ந ஹ்யுபபத்₃யதே (6-39)
33 (38-39) யோகத் தோல்வியால், அவன் சிதறுண்ட மேகம் போல் மறைவானோ? என்னுடைய சந்தேகத்தைத் தீர்ப்பாயா? உன்னை விட்டால் எனக்கு வேறு யாரே கதி? (அதாவது, நல்ல எண்ணமும், அறிவும் இருந்தும், செய்யத் தொடங்கிய காரியங்களைச் செய்து முடிக்கும் உறுதி இல்லாததால், செய்து முடிக்காமல் போய்விடுமே. அத்தகையோருக்கு என்ன வழி?)
புகையெனப் போகும் மேகப் பூசலாய் ஆவா ரோயென்
வகைபெறக் காட்டும் ஆசான் வரமது சூதன் மாலன்
மிகையுற யாரால் கூடும் மீட்டிட விசயன் கேட்டான்
ஶ்ரீப₄க₃வானுவாச .
பார்த₂ நைவேஹ நாமுத்ர வினாஶஸ்தஸ்ய வித்₃யதே .
ந ஹி கல்யாணக்ருத்கஶ்சித்₃ து₃ர்க₃திம் தாத க₃ச்ச₂தி (6-40)
ஸ்ரீகிருஷ்ணர் உரை
34 (கு என்ற இருளை அழிக்கும் ரு என்கிற ருத்திரன் தானே குரு? பகவான் ஸ்ரீகிருஷணரே குருவாக அருளும் பாடமல்லவா தை? அறியாமையாகிற இருளை அழிக்க வந்த ஞான ஆசான் அல்லவா ஸ்ரீகிருஷணர்? )
நாவினும் வதியும் வாக்கும் நயம்படத் தருளும் நம்பி
மேவிடும் மதியும் சீவன் மெய்த்தவ ஞானச் சீலன்
குவெனும் இருளின் காலன் ருத்திரன் குருவே மாலன்
35 (40) நல்லோன் யோகத்தில் முயன்று தோற்றாலும் அவனுக்கு அழிவில்லை.
ஆற்றுவான் கடமை யோகம் அயராது முயற்சி செய்தும்
தோற்றவன் ஆனால் என்ன தொடரநற் பணியே செய்ய
ஏற்றுவன் பிறவிப் போகம் எய்தியென் னிடமே சேர
ஶுசீனாம் ஶ்ரீமதாம் கே₃ஹே யோக₃ப்₄ரஷ்டோ(அ)பி₄ஜாயதே (6-41)
ஏதத்₃தி₄ து₃ர்லப₄தரம் லோகே ஜன்ம யதீ₃த்₃ருஶம் (6-42)
யததே ச ததோ பூ₄ய: ஸம்ஸித்₃தௌ₄ குருனந்த₃ன (6-43)
36 (41-43) அவன் மீண்டும் நல்ல குடும்பத்திலோ, புண்ணிய சீலர் மத்தியிலோ, யோகிகள் குலத்திலோ பிறந்து, தன்னுடைய யோகப் பயிற்சியை இன்னும் ஈடுபாட்டுடன் தொடருவான்.
வல்ல கருமத் தின் வழக்கத்தைத் தொடர் வதனால்
மெல்ல முயற் சித்து மேன்மேலும் உய்யும் வழி
செல்ல உதவியுந் தான் செய்திடுவேன் விசயா கேள்
ஜிஜ்ஞாஸுரபி யோக₃ஸ்ய ஶப்₃த₃ப்₃ரஹ்மாதிவர்ததே (6-44)
37 (44) அவன் முன் பிறப்பில் கொண்ட பழக்கத்தின் காரணமாக அவனை அறியாமலேயே தக்க பிறவி எடுத்து, தக்க சமயத்தில் மீண்டும் யோகநிலையை அடைவான்.
நட்டு நடுவில் செய்யும் நற்பணிப் பதிமம் இட்டு
தொட்டு விடாமல் ஆசைத் துயரக் களைகள் விட்டு
மட்டு மறியாத நெஞ்ச மயக்கந் தவிர்க்க வரும்
அனேகஜன்மஸம்ஸித்₃த₄ஸ்ததோ யாதி பராம் க₃திம் (6-45)
38 (45) இவ்வாறு பாவத்திலிருந்து நீங்கி, தனது யோக முயற்சியில் நிலைத்திருப்பவன், பல பிறவிகளில் தனது கடமையை ஆற்றி இறுதியில் தனது இலட்சியத்தை (பரம்பொருளை) அடைகிறான்.
முயற்சி உடைய வானாய் முற்பிறவி வழக்க மென
அயற்சி அடை யாதுமன மாசை வளராது நெறிப்
பயிற்சி நடையா லுயரப் பரத்தை நிலையா யடைவன்
கர்மிப்₄யஶ்சாதி₄கோ யோகீ₃ தஸ்மாத்₃யோகீ₃ ப₄வார்ஜுன (6-46)
39 (46) (ஏனெனில்) தவம் செய்பவரை விட யோகி சிறந்தவன். அறிவிற் சிறந்தவனைக் காட்டிலும் யோகி சிறந்தவன். யோகிகளில், கர்மயோகியை விட தியானத்தில் நிலைத்த யோகி சிறந்தவன்.
நாதம் இசைத்து இறை நயந்து துதிப் பவர்க்கும்
பூத மந்திரத் தால் புவனம் அளப் பவர்க்கும்
மேதாய் நிலைப்பர் யோக மெய்த்தவ முயற்சி யாளர்
ஶ்ரத்₃தா₄வான்ப₄ஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத: (6-47)
40 (47) எல்லோரையும் விட எவனொருவான் என்னுள் புகுந்து என்னையே பூசித்து வருவானோ அவனே உயர்ந்த நோக்கம் உடையவன். என் அருளுக்கு என்றும் உரித்தானவன்.
அயர்ந்த போதும் நெஞ்சின் ஆதங்கம் யோகம் என்றால்
நயந்து வாய்ப்பு வரும் நற்பிறவி வரும் கருணை
இயைந்து இறை யருளால் எல்லாமே நன்மை என்றான்
ஆத்மஸம்யமயோகோ₃ நாம ஷஷ்டோ₂(அ)த்₄யாய: (6)
இவ்வாறு தியாக நெறி எனும் ஆறாம் பாகம் நிறைவுபெறுகிறது