07 Gyana Vigyana Yoga
ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம:
அத₂ ஸப்தமோ(அ)த்₄யாய: ஞானவிஜ்ஞானயோக₃:
பாகம் 7 – மெய்யறிவு நெறி
ஶ்ரீப₄க₃வானுவாச .
மய்யாஸக்தமனா: பார்த₂ யோக₃ம் யுஞ்ஜன்மதா₃ஶ்ரய: .
அஸம்ஶயம் ஸமக்₃ரம் மாம் யதா₂ ஜ்ஞாஸ்யஸி தச்ச்ரு₂ணு (7-1)
ஸ்ரீகிருஷ்ணர் உரை
1 (1) என்பால் அன்பு செலுத்துவதால், என்னைச் சரணடைந்து யோகத்தில் நிலைத்து முற்றிலும் என்னை உணர்வது எப்படி எனத் தெரிந்திடு.
முன்பால் வினைகள் முடிந்ததும் முற்றும் என்னை உணர்வதால்
அன்பால் உனக்குக் கூறுவேன் அரிய ஞானவிக் ஞானமே
நண்பா நயந்துரை கேட்பதால் நாரண னாமென நவிலுவான்
யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூ₄யோ(அ)ந்யஜ்ஜ்ஞாதவ்யமவஶிஷ்யதே (7-2)
2 (2) ஆன்மாவைப் பற்றியும், அதை அறிவதற்கு உடல் எப்படி கருவியாகலாம் என்பது பற்றியும் உனக்குச் சொல்கிறேன்.
ஊனமா வாகிய தேகமே உபயோக மாவதும் எப்படி
ஏன்மா தவத்தா லன்றியே ஏதும் ஆகா தெவ்வணக்
காண்மா தவமுர ளீதரன் கருணையா லாற்றிய பேருரை
யததாமபி ஸித்₃தா₄னாம் கஶ்சின்மாம் வேத்தி தத்த்வத: (7-3)
3 (3) உலகில் ஆயிரமாயிரம் பேர்கள் என்னை அடைய முயன்றாலும், உண்மையில் ஒருவனே என்னை அடையும் வாய்ப்பைப் பெறுகிறான்.
தேடியே நாடுவர் தன்னுளே தேஜோ மயப்படும் ஆன்மனை
மூடியே கிடத்திய வீணையை மூழ்கியே மறைத்திடும் முத்தினை
சூடியே ஆன்மநற் றரிசனம் சுகமுறல் ஒருவனே சாத்தியம்
அஹங்கார இதீயம் மே பி₄ன்னா ப்ரக்ருதிரஷ்டதா₄ (7-4)
4 (4) (இப்போது என்னுடைய இயற்கை விதிகளை உனக்குச் சொல்கிறேன்.) என்னுடைய இயற்கை நிலையாவன மண், நீர், தீ, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டு வகைப்பட்டது ஆகும்.
தன்வழி காட்டும் மனமும் தத்துவ முதிர்க்கும் அறிவும்
என்வழி எல்லாமும் நானே என்றுவக்கு மகங்கார நிலையும்
இன்வழி என்றான எட்டு இயற்கை இயற்றியது நானே
ஜீவபூ₄தாம் மஹாபா₃ஹோ யயேத₃ம் தா₄ர்யதே ஜக₃த் (7-5)
அஹம் க்ருத்ஸ்னஸ்ய ஜக₃த: ப்ரப₄வ: ப்ரலயஸ்ததா₂ (7-6)
5 (5-6) மேலே சொன்ன எட்டும் ழ்நிலைப் பட்ட இயற்கை எனக் கொள்க. மேல்நிலையான இயற்கை என்னவென்றால், நுண்ணிய உணர்வுகளால் எதனையும் புரிந்து கொண்டு இயக்கும் அறிவே ஆகும்
தட்டாத புலனறிவால் நுகரும் தருமனதின் வருமுணர்வு களையும்
மட்டாத மதிநுகரும் முடிவும் மாறுபடும் மேலியற்கை யாகும்
கிட்டாத ஞானவுரை கூறும் கிருஷ்ணபர மாத்மபே ராசான்
மயி ஸர்வமித₃ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக₃ணா இவ (7-7)
6 (6-7) இவ்விரு இயற்கைகளுமே அனைத்துக்கும் மூலாதாரம். இதனை நுாலில் கோர்க்கப்பட்ட மணிகளைப் போலச் சேர்த்து, விதவிதமான உலகங்களையும் உயிர்களையும் செய்தது நானே. (பஞ்சீகர்னம் உலகில் உள்ள சடப் பொருட்களும், உயிர்களும் இயற்கையின் கலவை எனப் பறைகிறது. )
பின்னிடும் நுாலில் மாலை பிணைத்தவை போலே ஆகும்
உன்னிலும் உலகில் காணும் ஒவ்வொரு உயிரில் பொருளில்
எண்ணிடு எத்துணை பேதம் ஏற்புடன் கோத்தி லங்கும்
ப்ரணவ: ஸர்வவேதே₃ஷு ஶப்₃த₃: கே₂ பௌருஷம் ந்ருஷு (7-8)
7 (8) மனிதரிடத்து நானே ஆண்மை (ஆளும் தன்மை). நானே சூரிய சந்திர ஒளி. நானே நீரில் சுவை. நானே பிரணவ முதற்பொருள்.
மேன்மையும் நானே மேவும் மெய்ப்பிரணவ மெனப் படும்
துாய்மையும் நானே நீரில் துய்யுஞ்சுவையே சுவைப் பதும்
வாய்மையும் நானே வானில் வைக்கும்ஒலி பரப் பலும்
ஜீவனம் ஸர்வபூ₄தேஷு தபஶ்சாஸ்மி தபஸ்விஷு (7-9)
பு₃த்₃தி₄ர்பு₃த்₃தி₄மதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்வினாமஹம் (7-10)
8 (9-10) நானே மண்ணின் வாசனை. நானே நெருப்பின் சுடர். நானே எல்லா உயிர்களுக்கும் விதை.
தண்ணிலே ஊறும் ருசியும் தழுவிடுங் காற்றின் இதமும்
விண்ணிலே விளையும் நாதம் வித்தென வித்தும் ஞானம்
பண்ணிலே பதியும் ராகம் பரந்தது எல்லாம் நானே
த₄ர்மாவிருத்₃தோ₄ பூ₄தேஷு காமோ(அ)ஸ்மி ப₄ரதர்ஷப₄ (7-11)
9 (11) பலவான்களிடத்து விருப்பும் பற்றும் அற்ற பலம் நான். எல்லா வலிமையும் என்னாலேயே கிடைப்பன.(வலிமை தேகத்தாலும், புறப் பொருளாலும் விளங்கும் அசுர பலம் என்றும், துாய மனத்தாலும், அறிவாலும் விளங்கும் ஆன்ம பலம் என்றும் இருவகைப் படும். இவை இரண்டுக்குமே ஆதாரம் ஆன்மாவே. )
புலனை அரும்பித் துய்யும் புறப்பலம் அசுர பலமாம்
நலனை நடத்தித் தர்மம் நயந்த கருத்தில் ஞானம்
வளனை வளர்க்கும் பலமே வலியது ஆன்ம பலமாம்
10 (11) எல்லாவகையான வலிவும், அதனால் விளைத்த செயலும், விளைந்த பயனும் நானே.
தெளிவும் நானே உள்ளம் தெரிந்திட்ட அகப் பலமும்
ஒளியும் நானே உண்மை ஒளிர்ந்திட்ட தாலே பரவும்
வெளியும் நானே விளங்கும் வேதப் பயனும் நானே
மத்த ஏவேதி தான்வித்₃தி₄ ந த்வஹம் தேஷு தே மயி (7-12)
11 (12) சுத்தத்தன்மை, செயற்படுந்தன்மை, அசையாத்தன்மை (அதாவது ஸாத்வீக, ராஜஸ, தாமஸ குணங்களை ) உடைய எல்லா உயிர்களுக்கும், பொருட்களுக்கும், செயல்களுக்கும் நானே பொறுப்பு.
இசைவுறச் செய்திடுங் கடனை இயைந்திடு ராஜஸம் என்றே
மிசைவுறத் துாய்மை யாகும் மிதமெனுஞ் சமநிலை காணும்
திசைபெறுந் தன்மை யினையே தெரிந்திடு ஸாத்வீக மென்றே
மோஹிதம் நாபி₄ஜானாதி மாமேப்₄ய: பரமவ்யயம் (7-13)
12 (13) இந்த =ன்று குணங்களாலேதான் உலகு (அதாவது உலகத்தமைந்த மனிதர்கள்) மயக்கம் அடைந்து என்னுடைய திறத்தினை மறக்கின்றது.
பித்தத் தன்மை யும் பிரதிபிம் பமெனப் பிர
மித்தத் தன்மை யும் மிக்குறும் முக் குணம்
ஒத்த விளைந் திடும் ஒவ்வொரு பொரு ளே
மாமேவ யே ப்ரபத்₃யந்தே மாயாமேதாம் தரந்தி தே (7-14)
13 (14) உலகத்தைக் கவரும் தெய்வீக மாயை, என்னால், இந்த =ன்று குணங்களைக் கொண்டே படைக்கப்பட்டது. இதனை அறிந்து பணிபவர் ஞானம் அடைவர்.
ஈன்ற துலக மெல்லாம் இயக்கிடச் செய்யும் ஆற்றல்
ஆன்று அறிந் துணர்ந்த அன்பர் எனைப் பணிந்து
சான்ற மறை தெளிந்த சாரம் பெறுவ ரென்றான்
மாயயாபஹ்ருதஜ்ஞானா ஆஸுரம் பா₄வமாஶ்ரிதா: (7-15)
14 (15) இந்த உண்மை புரியமாட்டாமல், தீயவர்கள் என்னைக் காணக் கூடார். ஆனால் புத்தியில் சிறந்தவர்கள், உண்மையை உணர்ந்து, முக்கியமாக நான்கு காராணங்களால் என்னை வணங்குவர்.
செய்வரோ சிந்தை என்னைச் சேர்ந்தருள் காண மாட்டார்
மெய்யரோ புத்தி யாலே மேம்படுஞ் சீலர் நன்கு
உய்யவோ நான்கு சாரார் உதவிடத் தேடு வாரே
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தா₂ர்தீ₂ ஜ்ஞானீ ச ப₄ரதர்ஷப₄ (7-16)
15 (16) அந்த நான்கு வகையான பக்தர்கள் துன்பப்படுபவன், அறிவைத் தேடுவோன், பொருளை நாடுவோன், மற்றும் துாய ஞானத்தால் விளைந்த பக்தன் என்பவர்கள் ஆவர்.
உயரம் ஏகச் செய்ய உருகிடும் ஒருவன் பொருளாம்
வயிரம் வசதி என்றே வருபவன் ஒருவன் அருளாம்
பயிரம் ஞானச் சீலன் பக்தனும் ஒருவன் தானே
ப்ரியோ ஹி ஜ்ஞானினோ(அ)த்யர்த₂மஹம் ஸ ச மம ப்ரிய: (7-17)
ஆஸ்தி₂த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவானுத்தமாம் க₃திம் (7-18)
வாஸுதே₃வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄: (7-19)
16 (17-19) இந்த நால்வகை பக்தர்களுமே நல்லவர்கள்தான் என்றாலும், துாய அன்பால் பக்தியுடன் என்னைப் பணிபவனே சிறந்தவன். அவனே எனக்குப் பிரியன்.
மேல்வகை யாகும் என்னை மெய்யெனப் பற்றிக் கொள்ளும்
சால்புடை அறிஞர் ஆசைச் சாரலில் சரியாக் கிரியை
சூல்புடை முகிலாய்க் கருணை சூடுவர் எனக்கு அருமை
தம் தம் நியமமாஸ்தா₂ய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா (7-20)
தஸ்ய தஸ்யாசலாம் ஶ்ரத்₃தா₄ம் தாமேவ வித₃தா₄ம்யஹம் (7-21)
17 (20-21) அத்தகைய பக்தர்களில், ஆசையில்லாமல், யார் யார் எந்தெந்த வடிவில் என்னை வணங்குவரோ அந்தந்த வடிவில், நானும் அவர்களுக்கு அருள் தருவேன்.
பார்முனைப் பணியை யோகப் பார்வையில் பார்த்துச் செய்ய
நேர்முனைப் படுவேன் நானே நினைப்பவர் நினைத்த வாறே
கார்முகக் கண்ணன் சொல்லக் காதலால் உலகு கேட்கும்
லப₄தே ச தத: காமான்மயைவ விஹிதான்ஹி தான் (7-22)
தே₃வாந்தே₃வயஜோ யாந்தி மத்₃ப₄க்தா யாந்தி மாமபி (7-23)
18 (22-23) மக்கள் பக்தியாகிய நம்பிக்கையால், பலவிதமான தேவதைகளை வழிபட்டாலும், அவற்றின் வழியாக அவர்களுக்கு அருள் செய்வது நானே. அதனால் என் உண்மையை உணர்ந்து என்னை வழிபடுவதை விடச் சிறப்பானது ஏது?
பூவதை விடுத்து மொக்கில் புகுந்திடும் வண்டாய் ஆவர்
ஆவதை அருளை அகிலம் ஆக்கிடும் வல்லோன் அருளைச்
சாவதை விலக்கா நெஞ்சச் சாட்சியி லறிவ தேது
பரம் பா₄வமஜானந்தோ மமாவ்யயமனுத்தமம் (7-24)
மூடோ₄(அ)யம் நாபி₄ஜானாதி லோகோ மாமஜமவ்யயம் (7-25)
19 (24-25) மந்த புத்தியும் அவநம்பிக்கையும் உடையவருக்கு இந்த உண்மையும் விளங்காது. எந்தன் உருவமும் தெரியாது.
தயக்கம் வருவ துண்டு தன்னை மறப்ப துண்டு
இயக்கம் இருத்தல் பின்னே ஈர்த்து அழிக்கும் சக்தி
பயக்கும் பிரம்மா னந்தப் பரத்தினை மறப்ப துண்டு
ப₄விஷ்யாணி ச பூ₄தானி மாம் து வேத₃ ந கஶ்சன (7-26)
20 (26) நான் முக்காலத்தையும் அறிவேன். ஆனால் என்னை அறிபவர் யாரும் எவ்வுலகிலும் இல்லை.
கூற்றுப் பிரகாரத் தால் கூடிப் பிறந் தவர்கள்
நேற்று இன்று நாளை நிகழும் செயலை எல்லாம்
தேற்று அறியும் என்னைத் தெரிய முயல்வ தில்லை
ஸர்வபூ₄தானி ஸம்மோஹம் ஸர்கே₃ யாந்தி பரந்தப (7-27)
தே த்₃வந்த்₃வமோஹனிர்முக்தா ப₄ஜந்தே மாம் த்₃ருட₄வ்ரதா: (7-28)
தே ப்₃ரஹ்ம தத்₃விது₃: க்ருத்ஸ்னமத்₄யாத்மம் கர்ம சாகி₂லம் (7-29)
21 (27-29) விருப்பு வெறுப்பு இன்றி நல்லதைச் செய்து வாழும் பெரியோர் தங்கள் பாவங்கள் நீங்கி என்னையே வந்தடைவது உறுதி.
அல்லதை மாய்த்து எந்தன் அருளினைக் காணும் பேறு
வல்லமை முதுமை நீக்கி வகித்திட இறவாப் பேறு
கொள்ளமெய் ஞானத் தாலே கொற்றவர் காணும் பேறு
ப்ரயாணகாலே(அ)பி ச மாம் தே விது₃ர்யுக்தசேதஸ: (7-30)
22 (30) இதனாலேயே என்னை அதிபூதமாயும், அதியக்ஞமாயும், அதி தெய்வமாகவும் பூசிப்பர். இவ்வுண்மையை யார் மரண காலத்திலே நினைக்கிறார்களோ, அவர்களுக்கு நான் தரிசனம் அளிக்கிறேன்.
(மரணத்தில் ஆன்மா தான் போர்த்தியிருந்த பூத உடலை விட்டுத் தன்னுடன் மென்னுடலை எடுத்துச் சென்று, அம்மென்னுடலில் ஆழப் பதிந்த இலட்சியத்திற்கு ஏற்ற பிறவியை மீண்டும் அடைகிறது. இறைவனை வாழ்நாள் தோறும் உறுதியாய் நினைப்பதால், நமது மென்னுடலில் இறைவனை அடைவதான உயர்ந்த இலட்சியம் ஆழப் பதிகிறது. அதனால், மரணத்தில் பிறவித் துயரம் விட்டு, இறைவனுடன் கலக்கலாகிறது. இதனையே இப்பாடலில், மரணகாலத்தில் என்னை நினைவில் கொள்ளென இறைவன் சொல்வதாக அறிவதாகும். )
தன்னையதி யக்ஞம் என்றும் தத்துவம் மனதில் ஏற்றும்
மன்னுமுயிர் பிரியக் கூடும் மரணத்தில் அறியுஞ் சீலர்
கண்ணுமுயிர் காட்சி காணும் கருத்தது கண்ணன் சொன்னான்
ஜ்ஞானவிஜ்ஞானயோகோ₃ நாம ஸப்தமோ(அ)த்₄யாய: (7)
இவ்வாறு மெய்யறிவு நெறி எனும் ஏழாம் பாகம் நிறைவுபெறுகிறது