09 Rajavidya Rajagugya Yoga
ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம:
அத₂ நவமோ(அ)த்₄யாய: ராஜவித்₃யாராஜகு₃ஹ்யயோக₃:
பாகம் 9 – பர அறிவுப் பர ரஹஸ்ய நெறி
இத₃ம் து தே கு₃ஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யனஸூயவே .
ஜ்ஞானம் விஜ்ஞானஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே(அ)ஶுபா₄த் (9-1)
ஸ்ரீகிருஷ்ணர் உரை
1 (1) பொறாமை முதலிய கேடுகளற்றவனாய் தகுதியுடன் நீ இருப்பதால், விசயா, உனக்கு அறிவதற்கு அரிதான பரஅறிவைப் பற்றிச் சொல்கிறேன்.
தர நெறியைப் பெறஉனக்குத் தகுதியிருப் பதால் விசய
வர முறையை ரஹஸயத்தை வழங்குவது கேட் டுயரச்
சிர முடைய தானாய்துயர்ச் சிந்தை யழித் தாளாவாய்
ப்ரத்யக்ஷாவக₃மம் த₄ர்ம்யம் ஸுஸுக₂ம் கர்துமவ்யயம் (9-2)
2 (2) தலைசிறந்த கல்வியாகிய ஆத்ம வித்தை, அறிதற்கு அரியது. அனுபவத்தில் உணர்வது. தெளிவானது. மிகத் தரமானது. இதுவே கற்கத் தகுந்தது.
செறிவதில் ஜெகத்தில் மேலாய்ச் சேர்வது அனுபவ த்தால்
தெரிவதில் அறிவாய் நின்று தெளிவது எளிதில் நன்மை
புரிவதில் புவன மெல்லாம் புகழ்வது இந்தக் கல்வி
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மனி (9-3)
3 (3) பரந்தாபா, இத்தகைய ஞான வித்தையில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை அடையாமல் மீண்டும் பிறவித் துயரை அடைகிறார்கள்.
நுார்த்திட நுழைத்த மாலை நூதன மான தோங்கும்
நேர்த்தியை வளரும் நெஞ்சம் நேர்ந்திடும் ஞானம் சொன்ன
வார்த்தையை மறப்ப தாலே வளர்ந்திடும் பிறவிப் பேறு
மத்ஸ்தா₂னி ஸர்வபூ₄தானி ந சாஹம் தேஷ்வவஸ்தி₂த: (9-4)
4 (4) உலகம், அண்டம் எல்லாம் பரம்பொருளாகிய என்னுள் அடங்கும். எனினும் நான் அவற்றுள் இல்லை.
துாங்கிடும் மாயப் போர்வைத் துகிலுனுள் மறையும் அண்டம்
நீங்கிடும் நிலைக்கு மெந்தன் நினைவினால் வளரும் உண்மை
ஏங்கிடும் விசயா கேட்க என்னுளே எல்லாம்அடங்கும்
பூ₄தப்₄ருன்ன ச பூ₄தஸ்தோ₂ மமாத்மா பூ₄தபா₄வன: (9-5)
5 (5) உயிரினங்கள் என்னுள்ளே உண்மையிலே இருப்பதில்லை. அது மாயத் தோற்றம். ஆனால் அதனை ஆக்கியவன் நானே.
கண்மையாய் வளரும் மாயக் காட்சியால் காண்ப தெல்லாம்
அண்மையாய் அடங்கும் என்னுள் ஆயினும் அவற்றி லெந்தன்
மென்மையாய் அறிவ தேது மெய்ப்பொருள் காண்ப தேது
ததா₂ ஸர்வாணி பூ₄தானி மத்ஸ்தா₂னீத்யுபதா₄ரய (9-6)
6 (6) எங்கும் பரந்த காற்றாக, பரவெளியாக நான் இருப்பதால், எல்லாம் என்னுளே நிலை பெற்றுள்ளன. இதுவே இயற்கையென உணர்ந்திடுக.
நிரந்து விரிந்த வெளி நிலைத்து இருப்பது போல்
பிறந்து வளரும் உயிர்ப் பிறவிப் பொருள்க ளெனுள்
இருந்து மிறந்து வரும் இயற்கை அறிந் திடுக
கல்பக்ஷயே புனஸ்தானி கல்பாதௌ₃ விஸ்ருஜாம்யஹம் (9-7)
7 (7) இவ்வாறு பரந்திருக்கும் உலகங்களை நானே ஓர்நாள் என்னுள் கலந்து அழிப்பேன். பிறிதொரு காலம் அவற்றை எனது சக்தியால் மீண்டும் படைப்பேன்.
பாரத்தை கலப்பே னென்னுள் படைத்ததை எடுத்துக் கொள்வேன்
துாரத்தை காலா தேசத் துலகத்தைப் படைத்து மீண்டும்
சாரத்தை வகுத்தா ராயும் சக்தியை அறிந்து கொள்க
பூ₄தக்₃ராமமிமம் க்ருத்ஸ்னமவஶம் ப்ரக்ருதேர்வஶாத் (9-8)
8 (8) பிரகிருதி வழியாக படைப்பதும், படைத்தது காப்பதும், காத்தது அழித்திணைப்பதும் என் கடமை. இதனையே நான் காலந்தோறும் செய்து கொண்டிருக்கிறேன்.
(பிரம்மம் ஒன்றே பரம்பொருள் என்பது அத்வைத உண்மை. அப்பரம்பொருளே புருஷன் என்கிற சாட்சியாகவும், பிரகிருதி என்கிற சக்தியாகவும் மாறி, உலகங்களைப் படைத்தும், காத்தும், அழிக்கும் கடமையைச் செய்கிறது என்பது சாங்கிய உண்மை. )
துடைப்பதும் இயற்கை எந்தன் துாரிகை வடித்த பிம்பம்
இடைப்படும் உயிர்கள் எல்லாம் என்னையே சார்வ தாலே
கிடைப்பதும் விடுவது மெல்லாம் கிரியையில் அடைவ தாகும்
உதா₃ஸீனவதா₃ஸீனமஸக்தம் தேஷு கர்மஸு (9-9)
9 (9) இவ்வாறு நான் தொழில் புரிந்தாலும், நான் இதனால் கட்டுப்படவில்லை. ஏனெனில் நான் பற்றறு நிலையில் அல்லவா கர்மம் ஆற்றுகிறேன்?
இத்தனை அளவும் கட்டி இளைத்திடச் செய்வ தில்லை
வித்தினை வைத்தும் மேலாய் விளைந்திடக் கருணை செய்யும்
நித்திய ஞானா நந்தன் நிமலனை அறிந்து கொள்க
ஹேதுனானேன கௌந்தேய ஜக₃த்₃விபரிவர்ததே (9-10)
10 (10) என்னுடைய மேற்பார்வையினாலேயே இந்த உலகமும், உயிர்களும், செயல்களும், செயற் பயன்களும் நடக்கின்றன. இவற்றால் நான் செய்வதெல்லாம் நன்மையே ஆகும்.
ஊட்டி வளர்ப்ப தாலும் உலகினம் உருண்டு ஓடும்
கூட்டில் வைத்த ஆன்மக் கூற்றினை நடத்தி ஆடும்
நாட்டிய மறிக என்னால் நடப்பவை நன்மை ஆகும்
பரம் பா₄வமஜானந்தோ மம பூ₄தமஹேஶ்வரம் (9-11)
11 (11) நான் இதனை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் இருந்து நடப்பித்தாலும், அறியாமையினால், இந்த மகத்துவத்தை =டர்கள் நம்புவதில்லை. (ஏனெனில் அதற்கு உறுதியும், அன்பும் வேண்டும்.)
இனிது அமைந்த கருணை ஈர்ப்பு தெய்வ மென்னும்
புனித உணர்ச்சி காணப் புத்தி சித்தம் வேண்டும்
துணியு மறிவு மில்லாத் துச்சர் மறக்க வேண்டும்
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹினீம் ஶ்ரிதா: (9-12)
12 (12) அவர்கள் ணான ஆசையால், செயல், புத்தி, தவம் ஆகியவற்றை ணடித்து, அசுர சக்தியாகிய மயக்கத்தில் ஆழ்கிறார்கள்.(அதனால் பிறவித் துயரில் ஆழ்ந்து இன்னல் பெறுகின்றனர்.)
பூசை வீணழிப் போர் புத்தி வீணழிப் போர்
பேச வீணழிப் போர் பெருமை மறந் துழல
நீச மயக்க வலை நிலையப் பிதித்து விடும்
ப₄ஜந்த்யனன்யமனஸோ ஜ்ஞாத்வா பூ₄தாதி₃மவ்யயம் (9-13)
13 (13) புனித ஞானியரோ, புயலடங்கிய பின் தோன்றும் அமைதியாக, மனத்தின் ஓயச்சல் முற்றும் அடங்கி என்னைத் தன்னுள்ளே காண்பார்கள்.
தயவை புரிய வேண்டி தயக்கம் ஏதும் இன்றி
புயலை விடுத்த பூமி பொலியும் அமைதி போலே
துயிலை விடுத்து ஞானத் துய்க்கும் திறனைக் காண்பர்
நமஸ்யந்தஶ்ச மாம் ப₄க்த்யா நித்யயுக்தா உபாஸதே (9-14)
ஏகத்வேன ப்ருத₂க்த்வேன ப₃ஹுதா₄ விஶ்வதோமுக₂ம் (9-15)
14 (14/15) இத்தகைய நல்லோர், பக்தியாலும், துதியாலும், ஞான வேள்வியாலும் என்னைப் பலவாறான முறைகளில் பூசித்து அறிவர்.
புலனை அடக்க ஆண்டு புத்தி வழியிற் செல்ல
பலவும் பலவு மான பக்தி மொழியி லென்னை
நிலவும் உருவு பலவாய் நிறுத்தி அறிந்து கொள்வர்
மந்த்ரோ(அ)ஹமஹமேவாஜ்யமஹமக்₃னிரஹம் ஹுதம் (9-16)
15 (16) நானே நல்லோர் நடத்தும் ஹோமம், யாகம். நானே அன்புடன் மக்கள் =தாதையருக்கு அளிக்கும் பிண்டம். நானே நலமளிக்கும் =லிகை. நானே உணவளிக்கும் தாவரம். நானே ஓதும் உண்மை மந்திரம். நானே ஆக்கும் நெருப்பு, ஆற்றும் மருந்து.
போகிடும் பிதிர்க்கள் வாழப் போட்டிடும் பிண்டம் நானே
வேகிடும் தீயும் ஒலியும் விளைத்திடும் நெய்யும் நானே
ஆகிடும் தாவ ரங்கள் அமைத்திடும் மருந்தும் நானே
வேத்₃யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச (9-17)
16 (17) இந்த உலகிற்குத் தாய், தந்தை, மற்றைய =தாதையரும் நானே. அநாதியான வேதங்களும், வேதப் பொருளும் நானே.
முன்னையும் முதியன் நானே =லப் பிரணவம் நானே
விண்ணையும் மண்ணில் எல்லாம் விளைத்திடும் வேதம் நானே
உன்னையும் உன்னில் உறையும் உண்மையும் நானே காண்க
ப்ரப₄வ: ப்ரலய: ஸ்தா₂னம் நிதா₄னம் பீ₃ஜமவ்யயம் (9-18)
17 (18) உலகத்தின் குறிக்கோள் நானே. முதலும், முடிவும் நானே.
நிழலிலே சாட்சி நானே நிலைக்குமோ ராதாரம் நானே
புலனறி பொருளும் நானே பூரணம் முதலும் நானே
அளவறி வறியா அண்ட ஆதார வித்தும் நானே
அம்ருதம் சைவ ம்ருத்யுஶ்ச ஸத₃ஸச்சாஹமர்ஜுன (9-19)
18 (19) வெயிலும், மழையும், பிறப்பும், இறப்பும் ஆகிய இயற்கை விளைவினைச் செய்வதும் நானே.
வாயிலை இதயக் கோயில் வகுத்தெனைத் துதிப்போர் காணும்
நோயினைத் தருவேன் இறவா நோம்பினை நுகரச் செய்யும்
ஆயிணை யற்ற தான அமிர்தமும் அழிவும் தருவேன்
யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்க₃திம் ப்ரார்த₂யந்தே .
தே புண்யமாஸாத்₃ய ஸுரேந்த்₃ரலோக-
மஶ்னந்தி தி₃வ்யாந்தி₃வி தே₃வபோ₄கா₃ன் (9-20)
19 (20) உண்மை உணராமல், ஆசையாகிய சோமபானக் கள்ளைக் குடித்துச் சொர்க்கமாகிய இன்ப உலகத்தை அடைய முயல்வது நிலையானது அல்ல.
காமமான தாசைக் கள்ளைக் கவர்ந்துளங் குடிக்கும் போகி
ஹோமமான தவத்தி னாலே கொள்பவை நிலையா தோடும்
சாமமான போதி லாம்பல் சரிந்திடல் போலே ஆகும்
க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஶந்தி .
ஏவம் த்ரயீத₄ர்மமனுப்ரபன்னா
க₃தாக₃தம் காமகாமா லப₄ந்தே (9-21)
20 (21) இவ்வாறு இன்பம் ஒன்றே நலமென விரும்பி நல்லன செய்தாலும், செய்வோர், எதந்கான நற்பலனை அனுபவித்து மீண்டும் மண்ணில் பிறக்க நேரும்.
பலனை விரும்பி யவர் பக்தியினால் நித்தி யமும்
நலனை நாடிய தால் நல்லுலகம் அனுப வித்து
நிலனை மீண்ட டைந்து நிலையிலா தலைக் கலைவர்
தேஷாம் நித்யாபி₄யுக்தானாம் யோக₃க்ஷேமம் வஹாம்யஹம் (9-22)
21 (22) பற்றற்றுத் தனது தருமங்களைச் செய்து பகுத்தறிபவரே யோகத்தால் நற்கதி அடைபவர்கள். அவர்களை நான் ஏற்றுக் கொள்வேன்.
புலனை யோக மெனும் புகைச்சூட்டில் அடைய விட்டு
நலனை நாடா மல் நமனுக்கும் அஞ்சா மல்
வளனை வளர்ப் போரை வந்தணைத்துக் கொண்டி டுவேன்
தே(அ)பி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி₄பூர்வகம் (9-23)
22 (23) =டநம்பிக்கையாலும், முற்றும் தெளியாத அறிவாலும், மக்கள் பலவிதமான தெய்வங்களை வணங்கினாலும், அதனால் உண்மையில் என்னையே வணங்குவர் ஆவர்.
சுற்றதி காரத் தாலும் சோதனை யாலும் மக்கள்
மற்றதி நம்பிக் கையால் மதம்பலத் தெய்வம் பலவாய்
பற்றது பற்றி னாலும் பயப்பது எந்தன் பாதம்
ந து மாமபி₄ஜானந்தி தத்த்வேனாதஶ்ச்யவந்தி தே (9-24)
23 (24) எல்லா யாகங்களும் என்னையே வந்தடைவதைப் புரிந்து கொண்டவர்களே மேன்மை அடைவர். மற்றோர், பிறவி பல எடுத்துத் தம் ஞானத்தைப் பயிற்சியால் மேலும் தெளிவாக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாவர்.
எய்திடும் வழிகள் எல்லாம் ஏகிடும் எந்தன் கருணை
பெய்திடும் உண்மை யிதனைப் பிழையறப் புரிந்து கொண்டால்
மெய்த்தவம் உற்றோர் மற்றோர் மேதினி பிறத்தல் வேண்டும்
பூ₄தானி யாந்தி பூ₄தேஜ்யா யாந்தி மத்₃யாஜினோ(அ)பி மாம் (9-25)
24 (25) பலவித நம்பிக்கையால், அக்கறையுடன் எச்சக்தியைத் தொழுவார்களோ, அச்சக்தியையே அவர்கள் அடைவார்கள். அதனால் ஞானேஸவரானாகிய என்னை வணங்குவதே நிலையான விடுதலை அளிப்பதாகும்.
போனவர் வணக்கத் தாலே போனவ ரளுங் கூடும்
மோனவர் பூதா தீதம் முனைத்திடு மாயா சக்தி
ஞானவர் என்னைச் சார்ந்து நயப்பதே நிலைப்ப தாகும்
தத₃ஹம் ப₄க்த்யுபஹ்ருதமஶ்னாமி ப்ரயதாத்மன: (9-26)
25 (26) இவ்வாறு வணங்க, உண்மையான அன்பு ஒன்றே போதும். அன்பால் இலையாலும், மலராலும் மற்ற எளிய வழிகளில் வணங்குவது ஆடம்பரமாகச் செய்யப்படும் பெரிய யாகத்திற்கும் மேலானதாகும்.
வாய்த்த நல்லுள்ளத் தாலே வணங்கிடும் பக்தி யாலே
காயத்த தோரிலையை கனியைக் கையினில் கிடைத்த பொருளை
நேய்த்ததை ஏற்றுக் கொண்டு நெறிதனை அருளிச் செய்வேன்
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மத₃ர்பணம் (9-27)
26 (27) (எனவே, இனிமேல் ) நீ செய்வது எதனையும் எனக்கே அர்ப்பணித்துச் செய்வாயாக. இந்த உறுதி உனக்கு இருந்தால், உனக்கு என்னருள் கிடைப்பது சத்தியம்.
உண்ணும் பயன் அனைத்தும் உழைக்கும் கடன் அனைத்தும்
எண்ணம் பலன் அனைத்தும் எனக்கே அர்ப்ப ணிக்கும்
திண்ணம் உனக் கிருந்தால் திருவருள் கிடைக்கு மய்யா
ஸம்ன்யாஸயோக₃யுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி (9-28)
27 (28) அத்தகைய நடத்தையால், நீ நல்வினை, தீவினை ஆகிய இரு வழிகளிலிருந்தும் விடுதலை அடைவாய்.
சொல்வதற் கேது வான சோதனைக் கருமம் உன்னை
வெல்வதற் கிடங் கொடாது வெறுமனே சாட்சி யாக
செல்வதற் கறிந்து கொண்டால் செயமுனைச் சேர்வ தாகும்
யே ப₄ஜந்தி து மாம் ப₄க்த்யா மயி தே தேஷு சாப்யஹம் (9-29)
28 (29) (இந்த உறுதியை நான் தருவதற்குக் காரணம் ஏனென்றால்) நான் எல்லோரையும் சமநோக்கிலே பாவித்து, அன்புடன் என்னை அண்டியவர்களுக்கு அருள் தருகிறேன்.
கருதிட எவரும் இல்லை கருத்தினில் யாதும் ஒன்றே
உறுதியில் உண்மை அன்பில் ஊறிடும் யோகர் மட்டும்
இறுதியில் என்னைச் சேரும் இயல்பினை அறிந்து கொள்க
ஸாது₄ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்₃வ்யவஸிதோ ஹி ஸ: (9-30)
29 (30) உலகிலே மிகவும் கொடிய செயலைச் செய்தவனாயினும், பக்தியால் என்னைப் பணிபவன் பரிசுத்தனாகி, என்னுடைய அருளால் இறுதியில் நலமெய்துகிறான்.
கடியவனாய் உயிர் களையும் காதகனாய் இருப்ப வனும்
அடியவனாய் அந்த கத்தில் அன்பதனால் சரண் அடைய
நெடியவனாய் எனைச் சார்ந்து நேர்மையனாய் வாழு வனே
கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே ப₄க்த: ப்ரணஶ்யதி (9-31)
30 (31) கெட்டவனாய் இருந்தாலும், என்னைப் பணிந்து யோகத்தில் இருப்பதால், அவனும் விரைவில் நல்லவனாக மாறி, நிரந்தர அமைதி பெறுகிறான்.
தொட்டவன் ஆவான் மீண்டும் தொடருவான் பிறவிக் கேடு
விட்டவன் ஆவான் ஞானம் விளங்கிடப் பெறுவா னெனுந்
திட்டமென் னியல்பா லான திருவருட் கருணை யாகும்
ஸ்த்ரியோ வைஶ்யாஸ்ததா₂ ஶூத்₃ராஸ்தே(அ)பி யாந்தி பராம் க₃திம் (9-32)
31 (32) என்னைச் சரணடைந்தோர், பாவிகளாயினும், பேடியராயினும், சமுதாயத்தில் கடைநிலையில் தங்கியவர் ஆயினும், அனைவருக்கும் நான் உறுதியாக அருள் செய்வேன். இதுவே உண்மை. இதுவே பரம ரஹசியம்.
கொலையனும் கொடியனும் மனங் குவிந்திடப் பணியின் என்னை
நிலையெனும் தத்துவம் அருள் நிச்சயம் விளையும் எனும்
தலையெனும் ரஹசி யத்தைத் தந்ததை அறிந்து கொள்க
அனித்யமஸுக₂ம் லோகமிமம் ப்ராப்ய ப₄ஜஸ்வ மாம் (9-33)
32 (33) உண்மை இப்படிப்பட்டதாக இருக்கையிலே, சத்தியம் தவறாமல், கடமை ஆற்றும் (உன்னைப் போன்ற) நல்ல மனிதர்களையா நான் கைவிடுவேன்?
தன்மை யுடைய தகையோரே தவறா அறவோர் நல்லோரே
இன்மை ஏழு பிறவியெனும் ஈர்ப்பைக் கடக்க மாட்டாரோ
அண்மை என்னை அடையாரோ ஐயம் ஏனோ குடகேஸா
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மானம் மத்பராயண: (9-34)
33 (34) எனவே நம்பிக்கையுடன் நான் சொல்வதைக் கேட்டறிந்து, உன் மனதை என்பால் நிறுத்தி, என்னைச் சரண் அடைந்து நல்ல கதி அடைவாயாக. இதுவே நான் வகுத்த விதி.
பண்பால் எடுத்த பணிகளையே பழுதற முடிப்ப தாலேயும்
உன்பால் எனக்கு ஆனந்தம் உண்மைக் கருணைப் பிரவாகம்
நண்பா நடப்ப தெல்லாமே நானே வகுத்த ஆதாரம்
ராஜவித்₃யாராஜகு₃ஹ்யயோகோ₃ நாம நவமோ(அ)த்₄யாய: (9)
இவ்வாறு பர அறிவுப் பர ரஹஸ்ய நெறி எனும் ஒன்பதாம் பாகம் நிறைவுபெறுகிறது