12 Bhakthi Yoga
ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம:
அத₂ த்₃வாத₃ஶோ(அ)த்₄யாய: . ப₄க்தியோக₃:
பாகம் 12 – அன்பு நெறி
ஏவம் ஸததயுக்தா யே ப₄க்தாஸ்த்வாம் பர்யுபாஸதே .
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோக₃வித்தமா: (12-1)
ஶ்ரீப₄க₃வானுவாச .
மய்யாவேஶ்ய மனோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே .
ஶ்ரத்₃த₄யா பரயோபேதா: தே மே யுக்ததமா மதா: (12-2)
விசயன் வினா
1 (விஸ்வருப தரிசனம் காட்டிப் பின் விசயனின் வேண்டுகோளின்படி, தமது பழைய உருவத்தைக் காட்டி நின்ற பகவானிடம், விசயன் பக்தியோகத் தத்துவ விசாரணை செய்யலானான்.)
உகன்ற கரிச னத்தால் உருவத்தைச் சிறிய தாக்கி
நகன்ற தெல்லாம் நாளை நடப்ப தெல்லாம் காட்டிப்
பகன்ற பகவத் கீதம் பயன்தரக் கேட்ட விசயன்
2 (1) எப்போதும் யோக நிலையில் நின்று பக்தர்கள் உன்னை உருவத்துடன் வழிபடுவார்கள். சிலர் உருவமில்லாத சக்தியை வழிபடுவார்கள். இதில் யோகத்தை அறிந்தவர் யார்?
அடியனின் ஐயப் பாடு அகற்றியே காக்க வேண்டும்
வடிவமும் சிலையும் வைத்து வணங்குதல் பெரிதா இல்ல
படிவமும் உருவும் இன்றிப் பணிதலே நலமோ என்றான
3 (பக்தி யோகத்தின் பலனைப் பற்றிய முக்கியக் கேள்வியைக் கேட்டுப் பாரில் உள்ள யாவரும் விடை அறிவதற்கான பாக்கியத்தை விசயன் விளைத்தான்.)
சொல்லுக்கு வழி&& ஆகும் சொற்பொருள் வேதம் ஆகும்
முள்ளுக்கு இடையே பூத்த முழமலர்ச் சுடரே போல
மல்லுக்கு நிற்போர் மத்தி மாதவன் பதிலு ரைப்பான்
ஸர்வத்ரக₃மசிந்த்யஞ்ச கூடஸ்த₂மசலந்த்₄ருவம் (12-3)
ஸ்ரீகிருஷ்ணர் உரை
4 (2) எவர் அதிக நம்பிக்கையுடன், மனதை என்னிடம் நிறுத்திப் புலன்களைக் கட்டுப் படுத்துவரோ, அவர் எந்த வகையிலேனும் என்னை வணங்கலாம்.
சிந்தைகலை யாமல் பக்திச் சிரத்தை குறையாமல் புத்தி
வந்தவழி போகப் புலனை வைத்தவழிச் செய்வோர் என்னை
அந்தவடி வத்தாலே கண்டு ஆனந்தப் படுவர் காணே
தே ப்ராப்னுவந்தி மாமேவ ஸர்வபூ₄தஹிதே ரதா: (12-4)
5 (3-4) உருவமில்லாமல் வணங்குபவரும், தாம் கொண்ட உறுதியான நம்பிக்கையினால் எனது அருளுக்குப் பாத்திரமாவார்கள்.
கருவிலா துயிர்ப்ப துவாய் கருத்திலொரு மித்த துவாய்
மருவிலாப் பெருவெ ளியாய் மதியுணரா நுண்ணறி வாய்
திருவுள்ளத் தகை யோரும் திருவருளைப் பெறு வாரே
அவ்யக்தா ஹி க₃திர்து₃:க₂ம் தே₃ஹவத்₃பி₄ரவாப்யதே (12-5)
6 (5) (எனவே) உருவ, அருவவழிபாடு இரண்டும் ஒன்றே.
சலனும் இலா துலகம் சமனாய் எண்ணத் தான்
வளனும் இறைய வனை வடிவம் இலாத வனாய்
உளனும் இனிய வனே உயர்வ துண்மை யிதே
7 (சிலை வடிவாய் வணங்குதல் சகுணப் பிரம்மம். உருவமின்றி வணங்குதல் நிர்குணப் பிரம்மம். )
கலையாயும் கற்பனை யாயும் காணுவது சகுணப் பிரம்மம்
நிலையாயும் நித்தில மாயும் நிறைமனதுப் பெட்டக மாயும்
உலையாயும் உருவம் இல்லா ஓங்காரம் நிர்குணப் பிரம்மம்
8 (5) இருவழியும் ஒன்றுதான் எனினும், தனக்குள்ளே பிரம்மத்தைக் கண்டு, உருவம் ஏதுமின்றி வழிபாடு செய்வது கடினம். அத்தகைய வழியைப் பக்குவம் அடைந்த மனிதர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
எண்ணுதல் அரிது எவரும் ஏற்றிடல் கடினம் அறிக
மண்ணிலே திகழும் மனிதர் மனதிலே துறவு கொண்ட
பின்னிலே மட்டும் அருவப் பிரார்த்தனை செய்யத் துணிக
அனன்யேனைவ யோகே₃ன மாம் த்₄யாயந்த உபாஸதே (12-6)
ப₄வாமி நசிராத்பார்த₂ மய்யாவேஶிதசேதஸாம் (12-7)
9 (6-7) என்னையே முடிவாகக் கொண்டு, தியானம் செய்வதால், பிறவித் துன்பத்தைத் தவிர்க்கலாம். (அதாவது, ஆன்ம அறிவைக் கொண்டே, இயற்கையையும், அதனுள் வைத்த இறைவனையும் உணர முடியும். )
பொய்வதைப் பிறவிப் பாதை போவதைத் தவிர்ப்ப தற்கு
செய்வதை எல்லாம் என்னைச் சேரவே அர்ப்ப ணித்து
எய்வதைத் தினமும் தியானம் ஏற்பதைத் துணிய வேண்டும்
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்₄வம் ந ஸம்ஶய: (12-8)
10 (8) மனதை என்னிடம் நிலைத்தலே பக்தி யோகம்.
பொருத்து வதான புத்தி பொலியத் தெளியு மன்பால்
வருத்து வதாவ தேது வலியவ னாக்கும் உண்மை
கருத்து உறுதி யாகும் கட்டியம் அறிந்து கொள்க
அப்₄யாஸயோகே₃ன ததோ மாமிச்சா₂ப்தும் த₄னஞ்ஜய (12-9)
11 (9) ஓடும் மனத்தை ஒழுக்கத்தால் கட்டுதலே பயிற்சி யோகம்.
உள்ளத் தொழுங்கு சேவை உதவப் பயிற்சி தேவை
மெள்ளத் துவங்கு பாடம் மெலியத் துவளும் காலம்
செல்லத் தெளியும் சிந்தை சேரத் தெரியும் ஞானம்
மத₃ர்த₂மபி கர்மாணி குர்வன்ஸித்₃தி₄மவாப்ஸ்யஸி (12-10)
12 (10) அவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சி யோகம் செய்ய உறுதி இல்லை என்றால், நீ செய்யும் கடமைகளையாவது என்பொருட்டுச் செய்.
அயற்சி அடைவது தீது அனுதின மாவதுன் கடமை
முயற்சி செய்வது இனிது முனைவது இறையருள் என்று
முதிர்ச்சி பெறுவது பெரிது முக்தி கிடைப்பது எளிது
ஸர்வகர்மப₂லத்யாக₃ம் தத: குரு யதாத்மவான் (12-11)
13 (11) கர்மங்களையும் என்னை நினைத்து செய்ய முடியவில்லை என்றால், செய்யும் கடமைகளையாவது பலன் விருப்பம் இல்லாது செய். அதுவும் உயர்ந்த யோகமே.
மனத்தை நிறுத்து என்னிடம் மயக்கம் அழிக்கும் அற்புதம்
தனத்தைக் கொடுத்து உன்னிடம் தகைமை வளர்க்கும் சத்தியம்
குணத்தைக் குறித்துத் தனஞ்செயா குவலயத் துயருதல் அவசியம்
த்₄யானாத்கர்மப₂லத்யாக₃ஸ்த்யாகா₃ச்சா₂ந்திரனந்தரம் (12-12)
14 (12) ஏனெனில், ஞானம் பயிற்சியைவிடச் சிறந்தது. தியானம் ஞானத்தை விடச் சிறந்தது. கர்ம பலத்தியாகம் தியானத்தை விடச் சிறந்தது.
முத்திய ஞான விலாஸமோ முனையப் பெரியது அதைவிடச்
சத்திய மானதி யானமே சாலச் சிறந்தது அனைத்திலும்
சித்திய தானப லாபலன் சீந்திடாத் தியாகமே உயர்ந்தது
நிர்மமோ நிரஹங்கார: ஸமது₃:க₂ஸுக₂: க்ஷமீ (12-13)
15 (13) அத்தகைய பக்தர்களில், எனக்கு இனிதானவன் யாரென்றால், மனப்பக்குவத்தால் உலகில் உள்ள உயிர்களிடத்தே கருணையுடையவனே ஆவான்.
பொல்லாக் கர்வம் அரிதாய் பொறுமை கருணை அன்பாய்
அல்லாத் துயரில் இன்பம் அடையத் தெரியு மறிவால்
நில்லாப் பொருளை விரும்பா நிற்பான் எனக்கு இனியன்
மய்யர்பிதமனோபு₃த்₃தி₄ர்யோ மத்₃ப₄க்த: ஸ மே ப்ரிய: (12-14)
16 (14) கடமையைச் செய்து, பலனைத் தியாகம் செய்பவன் எனக்கு இனியன்.
உய்யும் பொருளில் உவகையுடன் உள்ளத் தமைதி கொள்ளுபவன்
பெய்யும் கருணைப் பேராளன் பேற்றைத் தியாகம் செய்பவனே
மெய்யும் அருளைக் காணுபவன் மேலோன் எனக்கு இனியவனே
ஹர்ஷாமர்ஷப₄யோத்₃வேகை₃ர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: (12-15)
17 (15) தான் வருத்தப்படாமலும், உலகை வருத்தாமலும் வாழ்பவன் எனக்கு இனியன்.
விலகாப் பெருமை விருப்பத்தை வினையாப் பதியா பொறாமை
அலையா மனத்தை அச்சத்தை ஆற்றாமை யெனு மெச்சத்தை
நிலையா தழித்த நேர்மையனே நிச்சயம் எனக்கு இனியவனே
ஸர்வாரம்ப₄பரித்யாகீ₃ யோ மத்₃ப₄க்த: ஸ மே ப்ரிய: (12-16)
18 (16) ஆணவம், விருப்பு வெறுப்பற்றவன் எனக்கு இனியன்.
வாய்மையும் வருவழித் துன்பம் வாய்ப்பதும் வளப்படும் இன்பம்
நேர்மையும் சமநிலை காணவும் நிச்சயம் தானகங் காரப்
பார்வையும் துறந்தநற் பணியன் பாக்கியன் எனக்கவன் இனியன்
ஶுபா₄ஶுப₄பரித்யாகீ₃ ப₄க்திமான்ய: ஸ மே ப்ரிய: (12-17)
19 (17) தன்னிலே திருப்தியுற்று சுகிப்பவன் எனக்கு இனியன்.
வெளிப்படை யாகப் பேசி வெறுப்பிக ழாமல் வாழ்க்கை
சலிப்படை யாமல் எல்லாம் சமநிலை யாகப் பார்க்கும்
விழிப்புடை யானே பக்தன் விருப்பத்தி லெனக்கு இனியன்
ஶீதோஷ்ணஸுக₂து₃:கே₂ஷு ஸம: ஸங்க₃விவர்ஜித: (12-18)
20 (18) உலக நடப்பால் பாதிப்பு அடையான் எனக்கு இனியன்.
ஊனம் அடை யாமல் உள்ளம் குழம் பாமல்
காணும் பகை யிடத்தும் கவரும் நட்பி டத்தும்
பூணும் சம நோக்குப் புனிதன் எனக்கு இனியன்
அனிகேத: ஸ்தி₂ரமதிர்ப₄க்திமான்மே ப்ரியோ நர: (12-19)
21 (19) ஆத்மாவே குறிக்கோளாகி, சமநிலையில், மனதால் மெளனமானவன் எனக்கு இனியன்.
அருமை அறிந் துள்ளம் அலையாத் தவம் நின்ற
பொறுமை சாலி மனம் பொதியும் மெள னத்தில்
இருமை யடங்கி யவன் என்றும் எனக்கு இனியன்
ஶ்ரத்₃த₃தா₄னா மத்பரமா ப₄க்தாஸ்தே(அ)தீவ மே ப்ரியா: (12-20)
22 (20) நான் மேலே கூறியுள்ள அழிவற்ற தர்மத்தை உணர்ந்து, என்னிலே மாறாத பக்தியுடையோரே என்றும் எனக்கினியர்.
தன்னள வில்லாத் தன்மை தனக்குளே இருக்கக் கண்டும்
அன்னவர் ஆவார் அன்பு அறிந்தவர் ஆவார் பக்தி
என்னவர் ஆவார் என்னை எய்திடும் இனியர் அவரே
ப₄க்தியோகோ₃ நாம த்₃வாத₃ஶோ(அ)த்₄யாய: (12)
இவ்வாறு அன்பு நெறி எனும் பன்னிரெண்டாம் பாகம் நிறைவுபெறுகிறது