14 Gunatrayavibhaaga Yoga
ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம:
அத₂ சதுர்த₃ஶோ(அ)த்₄யாய: . கு₃ணத்ரயவிபா₄க₃யோக₃:
பாகம் 14 – முக்குண விளக்க நெறி)
ஶ்ரீப₄க₃வானுவாச .
பரம் பூ₄ய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞானானாம் ஜ்ஞானமுத்தமம் .
யஜ்ஜ்ஞாத்வா முனய: ஸர்வே பராம் ஸித்₃தி₄மிதோ க₃தா: (14-1)
ஸ்ரீகிருஷ்ணர் உரை
1 (1) உயர்ந்த அறிவை இனிக் கூறுகிறேன். இதனை உணர்ந்தவர்கள் முடிவில் உயர்வான பதவியை அடைவார்கள்.
செப்பிட அருள்வேன் உந்தன் சிந்தையி லறைவேன் வாழ்க்கை
தப்பினை உணர்க கர்வத் தவற்றினை இழந்து ஞானம்
கப்பிய மேலோன் சேரும் கதியினை அருளிச் செய்வேன்
ஸர்கே₃(அ)பி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யத₂ந்தி ச (14-2)
2 (2) இந்த அறிவால், உள்ளும், புறமும் ஒளி கொண்டு என்னை அடைபவர்கள், ஊழிக்காலத்தில் அழிவதுமில்லை. ஆரம்ப காலத்தில் பிறப்பதுமில்லை.
முகத்திலே தெரியும் பக்தி முயற்சியி லமையும் யுக்தி
சகத்திலே பிறவாச் சக்தி சாவில்லை அழியா முக்தி
யுகத்திலே அருளும் வெல்லும் உண்மையை அறிந்து கொள்க
ஸம்ப₄வ: ஸர்வபூ₄தானாம் ததோ ப₄வதி பா₄ரத (14-3)
3 (படைப்பு என்பது மனத்தின் தந்திரம். காலம் இதற்கு உடந்தை. காலம் என்பது இரண்டு அநுபவங்களின் இடைவெளி. எனவே, உயர்வான பிரம்மஞான அநுபவம் ஒன்றிலேயே நிலைத்தால், அநுபவ மாறுபாடு இல்லாததால், காலத்தை வெல்லலாம்.)
அருளாகும் தத்து வமே ஆக்குமனத் தந்தி ரமே
உருகாமல் மனதை நிலை உருவகிக்க காலம் உனைப்
பருகாமல் இருக்கும் உயிர்ப் பயமுமில்லை நிலைப் பதுவே
4 (3) பிரமன் எனக்குக் கருப்பை. அதில் நானே விதையை விதைக்கிறேன். பிறகு எல்லா உயிர்களும் பிறக்கின்றன.
தரமருளி உயிர் வித்தைத் தருபுருஷன் விருப்பத் தைப்
பெறஅவனி பிறந்து உடல் பெற்றதருஞ் செல்வத் தை
வரமருளிக் காப் பதுவும் வகுப்பதுவும் நானே மெய்.
தாஸாம் ப்₃ரஹ்ம மஹத்₃யோனிரஹம் பீ₃ஜப்ரத₃: பிதா (14-4)
5 (4) எந்தப் பிறவிக்கும், பொருளுக்கும், பரப்பிரம்மமே கருப்பை. நானே உயிர் வித்தைத் தரும் பரமபிதா.
ஒப்பிலை உயிர்கட் கெல்லாம் ஒருவனே தந்தை நானே
அப்புற மறிந்து ஜன்மம் ஆதர வாகும் பிம்பம்
துப்புற உயிரைக் கருவில் தூக்கிய அன்னை நானே
6 (விதையும், மண்ணும் போல, தந்தையும் தாயும் போல, புருஷனும் பிரகிருதியும் இணைவதே படைப்பு. இதனால் விளைந்த ஹிரண்யகர்ப்பன் என்கிற புனித அகிலாண்டத்திலிருந்து சீவராசிகள் உயிர்த்திடச் செய்வதற்கு, இயற்கையில் இறைவன் வைத்த கிரியா ஊக்கிகளே =ன்று வகைக் குணங்கள்.)
கர்ப்பத்தி லாக்கும் களனைக் காரிய மாற்றும் திறனை
உற்பத்தி யாக்கும் செயலை உதவிடக் கருவிக ளென்று
சர்ப்பத்தி லாடும் விடமாய்ச் சார்ந்திடும் குணமே மூன்று
நிப₃த்₄னந்தி மஹாபா₃ஹோ தே₃ஹே தே₃ஹினமவ்யயம் (14-5)
7 (5) அந்த மூன்று குணங்களாவன ஸத்துவம், ராஜஸம், தாமஸம் எனபன வாகும். இவை வெப்பம் தீயைத் தழுவியது போல, பிரகிருதியை ஒட்டி அமைந்துள்ளது.
நழுவிய சமநிலை அசைவாலே நாயகன் புருஷனின் இசைவாலே
பழுதறப் புவனம் படைத்திடுமே பற்றறு நிலையில் பலவாகி
முழுதுற வாகிய பரப்பிரம்மம் மூலப் பிரகிருதி என்மாயம்
8 (5) ஒரே விதையால் (பரம்பொருளால்) உருவானாலும், உலகில் பலவும் பலவித மாறுபாடுகளுடன் இருப்பதற்குக் காரணம், வேறுபாடு உடைய இந்த மூன்று குணங்களே ஆகும்.
மூன்றறி குணத்தைக் கொள்வர் முந்நிலை வேறு பாட்டில்
சான்றறி வானும் மாறும் சக்தியில் சோர்வில் தன்மை
ஊன்றிய தாலும் கோடி உருப்பெற் றுலவும் விசயா
ஸுக₂ஸங்கே₃ன ப₃த்₄னாதி ஜ்ஞானஸங்கே₃ன சானக₄ (14-6)
9 (6) இக்குணங்களில், ஸத்துவம் பாவமற்றது. ஒளிமிக்கது.
ஸத்துவமே ஞானத்தில் பற்றுதலை வளர்ப்பது.
வித்தையும் அறிவும் ஞானம் விளம்பிடத் துணியும் எதிலும்
சித்தமும் சுகமும் துன்பம் சேர்ந்திடப் பந்தம் பாசம்
வைத்திடும் குணத்தை அறிக வென்றிடத் தெளிக பரதா
தன்னிப₃த்₄னாதி கௌந்தேய கர்மஸங்கே₃ன தே₃ஹினம் (14-7)
10 (7) ராஜஸம் ஆசையை ஆதாரமாகக் கொண்டு, பற்றுதலுக்கும், வேட்கைக்கும் காரணமாகி, செயலில் ஈடுபாடு கொள்ளச் செய்கிறது.
தேஜஸைத் திறனைச் செல்வத் தேகத்து வலியை கடமை
நேசத்தைப் புகுத்தி ஆன்ம நேயத்தை மறக்கச் செய்து
கோசத்தை இருத்தி ஆளும் குறித்திடு கெளந் தேயநேயா
ப்ரமாதா₃லஸ்யனித்₃ராபி₄ஸ்தன்னிப₃த்₄னாதி பா₄ரத (14-8)
11 (8) தாமஸகுணம் அறியாமையால் பிறந்து, தவறுதல், சோம்பல், துாக்கம் ஆகிய வலையில் ஆத்மாவைக் கட்டத் துணிகிறது.
ஆவதும் ஆகும் ஆன்மா அறிவினை மறையத் தாக்கும்
நோவதும் தனிமை கவலை நோர்ப்பதும் மந்த புத்தி
மேவதும் ஆகும் பார்த்தா மெய்க்குண மறிவ தாகும்
ஜ்ஞானமாவ்ருத்ய து தம: ப்ரமாதே₃ ஸஞ்ஜயத்யுத (14-9)
12 (9) ஸத்துவம் நலத்தையும், ராஜஸம் செயலையும், தாமஸம் அறிவற்ற தவற்றினையும் அடையச் செய்கிறது.
கடமையை பலனைக் காட்டி கட்டிடும் ராஜஸம் ஒன்று
மடமையை தற்றை ஊட்டி மறைத்திடும் தாமஸம் ஒன்று
உடமையை உலகை வாட்டி உண்மையை மறைப்ப துண்டு
ரஜ: ஸத்த்வம் தமஶ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா₂ (14-10)
13 (10) இக்குணங்களில் ஒன்று அவ்வப்போது, மற்றவற்றை விட அதிகமாக வெளிப்பட்டுத் தெரியும்.
மிக்குறும் ஒன்றது ஒன்றின் மேலுறும் மெலியப் போகும்
எக்குணம் எந்தப் போதில் ஏற்றுத லாமோ அதுவே
சற்குணம் ஆகும் சீவன் சகத்திடை வகைத்த தாகும்
ஜ்ஞானம் யதா₃ ததா₃ வித்₃யாத்₃விவ்ருத்₃த₄ம் ஸத்த்வமித்யுத (14-11)
14 (11) (இதனை எப்படி அறிவது?). நல்ல நோக்கும், நல்ல சிந்தனையும், சமநிலை அறிவும் ஸாத்க குணத்தால் மேம்பட்டவரைக் காட்டும்.
பரிவும் பக் குவமும் பரீசிலத் தறி யறிவும்
நெறியும் நேர் வழியும் நிறையத் தெரிந் தவரைப்
புரியும் சாத் ஹப் புலனை அடைந் தவரே
ரஜஸ்யேதானி ஜாயந்தே விவ்ருத்₃தே₄ ப₄ரதர்ஷப₄ (14-12)
15 (12) பேராசை, செயல், படபடத்து நடத்தல், விருப்பு, வெறுப்பு என நடப்பவர் ரஜோ குணத்தால் ஆளப்படுபவர் ஆவார்.
தீராத உற் சாகம் தினவெடுப்பு பகை யொழிப்பு
ஊராள அச் சாரம் உருவாக்க உற வாடல்
கூறாதோ ராஜ ஸமாம் குறிப் பறிய ஆகாதோ
தமஸ்யேதானி ஜாயந்தே விவ்ருத்₃தே₄ குருனந்த₃ன (14-13)
16 (13) இருள், அசைவின்மை, சோம்பல் உடையவர் தாமஸரென அறிக.
இருளுல கமையும் சிறுமை ஈழிய வகையும் சினமும்
வருவது சோம்பித் திரியும் வழக்கமுந் துாக்கத்தி லான
உருவினை தாமஸ னென்றே உணருக எளிதினி லென்றான்
ததோ₃த்தமவிதா₃ம் லோகானமலான்ப்ரதிபத்₃யதே (14-14)
ததா₂ ப்ரலீனஸ்தமஸி மூட₄யோனிஷு ஜாயதே (14-15)
17 (14-15) (இந்த மூன்று குணங்களால் மனிதப் பிறவிக்குப் பயன் என்ன?) ஸத்துவ குணத்தால் ஆளப்பட்டு இறப்பவன் மீண்டும் அறிவிற் சிறந்தவர் உலகிலும், ராஜஸ குணத்தால் மறைபவன் தொழில் புரியும் இடத்திலும், தமோ குணமுள்ளவன் மரணத்தால், அறிவற்ற நிலையிலும் பிறக்கிறான்.
உத்தம ருலகம் சென்று உயருவான் ரஜஸத் தாலே
செத்தவ னருமைத் தொழிலைச் செய்பவ னாகப் போவான்
மத்தவன் மந்தன் எனவே மரணத்தால் பெருமை சேரான்
ரஜஸஸ்து ப₂லம் து₃:க₂மஜ்ஞானம் தமஸ: ப₂லம் (14-16)
ப்ரமாத₃மோஹௌ தமஸோ ப₄வதோ(அ)ஜ்ஞானமேவ ச (14-17)
ஜக₄ன்யகு₃ணவ்ருத்திஸ்தா₂ அதோ₄ க₃ச்ச₂ந்தி தாமஸா: (14-18)
18 ( 16-18) ஸாத்கப் பிறவி இன்பமும் அறிவும் அளிப்பது.
சொற்பயனும் சுகமிளிரும் நினைவும் சொந்தமென வந்துலகின் நலமும்
கற்பனையும் கவிநலனும் உள்ளம் களிப்படையும்அமைதியுறப் பதவி
எற்புறவே வானுலக மடையும் இதமான ஸாத் ஹ மாகும்
19 (16-18) ராஜஸப் பிறவி ஆசையும் அதற்கான செயலும், பலனும் அளிப்பது.
பாராசை பவத்தாசை நோக்கம் பலனடையப் பணியாற்றுந் தீர்க்கம்
ஆராயா தாற்றுவதால் துயரம் ஆறாகப் பெருகுவதும் புவனம்
மீறாத பிறவியிலே அயரும் மிதமான ராஜஸமு மாகும்
20 (16-18) தாமஸப் பிறவி அறிவற்ற தன்மையும், கெடுதியும் விளைப்பது.
துயராகும் துவண்டாடும் தேயம் துாங்குதலும் தாமதமும் நோகும்
புயல்வானம் கடந்தாண்ட வெறுமை புலனறிவு மிளிராத சிறுமை
அயர்வாகும் அதலத்தே தள்ளும் அதமான தாமஸமே ஆகும்
கு₃ணேப்₄யஶ்ச பரம் வேத்தி மத்₃பா₄வம் ஸோ(அ)தி₄க₃ச்ச₂தி (14-19)
ஜன்மம்ருத்யுஜராது₃:கை₂ர்விமுக்தோ(அ)ம்ருதமஶ்னுதே (14-20)
21 (19-20) (அப்படியானால், உயிர்கள் ஸத்துவ குணத்தை அடைவதைக் குறிக்கோளாகக் கொள்வது போதுமா? போதாது. ஸத்துவ குணமே, உலக வாழ்வில் உயிர்கள் கொள்ள வேண்டிய அருங்குணம் என்றாலும் ஆன்ம ஞானம் பெறத் துடிப்பவன், முக்குணங்களையும் கடக்க வேண்டும்.) குணங்களே காரணம் என்பதை அறிந்து கொண்டு, குணங்களைக் கடந்து என்னை நாடுபவரே, பிறவிகளிலிருந்து விடுதலை அடைவார்கள்.
மெல்லிய மாயச் சூழ்நிலையை மேவும் பிறவிப் பெருவலியை
வெல்லுவ னாவான் தன்னான்ம வேதத் தருளால் மாறுபவன்
செல்லுவ னெந்தன் சேதமையால் சேரத் தகுதி யானவனே
அர்ஜுன உவாச .
கைர்லிங்கை₃ஸ்த்ரீன்கு₃ணானேதானதீதோ ப₄வதி ப்ரபோ₄ .
கிமாசார: கத₂ம் சைதாம்ஸ்த்ரீன்கு₃ணானதிவர்ததே (14-21)
விசயன் வினா
22 (21) இறைவா, முக்குணங்களையும் கடந்தவர் யார்? அவரது நடத்தை எவ்வாறு இருக்கும்? எப்படி குணங்களைக் கடப்பது? கருணையுடன் எனக்கு விளக்குவாயா?
நன்றே உரைத்த கேள்வியிது நாதா கிருஷணா கோபாலா
வென்றே குணத்தை கடப்பதற்கு வேண்டிய தென்ன வென்றவனே
என்றே தெரியும் அடையாளம் என்ன எனக்குத் தெரிவிப்பாய்
ஶ்ரீப₄க₃வானுவாச .
ப்ரகாஶம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்ட₃வ .
ந த்₃வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தானி ந நிவ்ருத்தானி காங்க்ஷதி (14-22)
ஸ்ரீகிருஷ்ணர் உரை
23 (22) ஒளி, செயல், மயக்கம் இவை இருந்த போது அவற்றை வெறுப்பதும், இல்லாத போது வேண்டுவதும், குணங்களைக் கடந்த மேலோனுக்கு இல்லை.
வேண்டுவா னில்லை எதையும் வெறுப்பது இல்லை எண்ணம்
துாண்டுவா னில்லை துாய்மை துரிதநட வடிக்கை துாக்கம்
நீண்டிடா நிகழா தென்றும் நிம்மதி இழப்ப தில்லை
கு₃ணா வர்தந்த இத்யேவம் யோ(அ)வதிஷ்ட₂தி நேங்க₃தே (14-23)
24 (23) அவன் குணங்களால் பாதிப்பு அடையாமல், குணங்களே இயக்குகின்றன எனத் தெரிந்து, மனதில் சலனமின்றி இருப்பான்.
திடத்தினை உடையோன் புத்தி தீர்க்கநற் றரிச னத்தால்
படத்தினைப் போலே காட்டும் பளிங்கினைப் போலே அசையாச்
சடத்தினைப் போலே நிற்பான் சாட்சியாய் வாழ்வ தென்றான்
துல்யப்ரியாப்ரியோ தீ₄ரஸ்துல்யனிந்தா₃த்மஸம்ஸ்துதி: (14-24)
25 (24) கல்லையும், மண்ணையும் ஒரே நோக்கில் பார்க்கும் குணமும், எதையும் சமனாய் அனுசரிக்கும் ஆற்றலும், அமைதியும் பெறுவான்.
கண்ணும் காணும் காட்சி கனவே குணங்கள் நின்றே
விண்ணுள் வைக்கும் போற்றல் விடமாய் மாற்றும் துாற்றல்
தன்னுள் சமநிலை காணும் தன்மை யுடைதல் ஆவான்
ஸர்வாரம்ப₄பரித்யாகீ₃ கு₃ணாதீத: ஸ உச்யதே (14-25)
26 (25) மான அவமானங்களைக் கருதாது, நட்பு, பகைமை பாராட்டாது, தியாகசீலனாகவும் அவன் விளங்குவான்.
பேணசமா தானம் என்றே பெருமைக்குச் செய்யா மலிதமே
காணவுந் துணிவான் கருணை காட்டுயிர்த் துணையா யமையும்
மோனநிலை யோகம் நிற்பான் முக்குணம் கடப்பனா வான்
ஸ கு₃ணான்ஸமதீத்யைதான்ப்₃ரஹ்மபூ₄யாய கல்பதே (14-26)
27 (26) குணங்களைக் கடக்கும் ஆற்றல், வேறொன்றை நினையாத பக்தி யோகத்தால் எனைப் பணிபவனுக்கே தகும்.
சித்தியால் சிந்தை ஞானச் சிறப்பினால் தியானம் செய்து
சத்தியால் உண்மை யாகச் சார்ந்திடக் கடமை யாற்றும்
வித்தியால் குணங்கள் மூன்றை வென்றிடக் கூடும் உண்மை
ஶாஶ்வதஸ்ய ச த₄ர்மஸ்ய ஸுக₂ஸ்யைகாந்திகஸ்ய ச (14-27)
28 (27) ஏனெனில், அழிவற்ற பிரம்மத்திற்கு நானே நிலைக் களன். தருமத்திற்கும், இன்பத்திற்கும் நானே ஆதாரம்.
ஊனதில் வைத்த ஆன்ம உண்மைக்கு உண்மை முந்தை
ஆனதில் விந்தை வித்தை ஆகமத் தருளும் சிந்தை
தேனதில் விளையுந் தெய்வம் தேஜோம யானந்தம் தானே
29 (நான்கு யோகமும் இங்கே சங்கமிக்கிறது. நிர்க்குணப் பிரம்மத்தை அடையும் ஞான யோகத்திற்கு, சகுணப் பிரம்ம தியானப் பயிற்சியாக பக்தி யோகமும், களத்திற சுத்த விருத்திக்காக ராஜயோகமும், குணநலக் கேட்டினை அறிந்து தெளிய கர்ம யோகமும் வழிகாட்டிகள் என்ற ஸநாதன தர்மத்தை விளக்கினார் ஸ்ரீகிருஷண பரமாத்மா. )
உதாரண புருஷன் நானே உண்மையே சீவன் நானே
நிதானன் நித்யன் நானே நிட்கலன் நானே என்று
விதானன் வேணு கானன் விளம்பினான் நல்லுலகம் கேட்க
கு₃ணத்ரயவிபா₄க₃யோகோ₃ நாம சதுர்த₃ஶோ(அ)த்₄யாய: (14)
இவ்வாறு முக்குண விளக்க நெறி எனும் பதிநான்காம் பாகம் நிறைவுபெறுகிறது